• search
சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In

வேல் யாத்திரையும் வாள் யாத்திரையும் தமிழ்நாட்டில் மாற்றத்தை ஏற்படுத்தாது... சொல்வது கே.எஸ். அழகிரி

|

சென்னை: முருகனின் வேல் எங்களுடைய கையில் இருக்கும் போது மக்கள் பாதுகாப்பாக இருப்பர். பாஜகவின் கையில் இருக்கும் போது ரத்தம் சிந்த கூடியதாக மாறும் என்று காங்கிரஸ் கட்சியின் மாநில தலைவர் கே.எஸ். அழகிரி கூறியுள்ளார். தமிழகம் மதச்சார்பற்ற ஆன்மிகத்தில் நம்பிக்கை கொண்ட அற்புதமான மண். இந்த மண்ணில் வேற்றுமை ஏற்படுத்த முடியாது.

திருச்சியில் இன்று பல்வேறு நிகழ்வுகளில் பங்கேற்று பின்னர் மத்திய அரசின் வேளாண் சட்டங்களுக்கு எதிராக திருச்சி புறநகர் மற்றும் அரியலூர் மாவட்டங்களில் காங்கிரஸ் சார்பில் நடத்தப்படும் போராட்டங்கள் நடைபெற்றது. இந்த ஆர்பாட்டத்தில்

காங்கிரஸ் கட்சி நிர்வாகிகள் பங்கேற்றனர்.

திருச்சியில் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் கே எஸ் அழகிரி செய்தியாளர்களை சந்தித்துப் பேசினார். அப்போது அவர் தமிழகத்தின் வாள் யாத்திரையும், வேல் யாத்திரையும் எந்த ஒரு பாதிப்பையும் ஏற்படுத்தாது. கடவுள் யார் கையில் இருக்கிறார் என்பதுதான் முக்கியம்.

மோடி கையை நீட்டினால்.. அந்த கிளி ஏறவே இல்லையே.. ஏன்?.. வைரல் வீடியோ!

மக்கள் பாதுகாப்பு

மக்கள் பாதுகாப்பு

முருகனின் வேல் எங்களுடைய கையில் இருக்கும் போது மக்கள் பாதுகாப்பாக இருப்பர். பாஜகவின் கையில் இருக்கும் போது ரத்தம் சிந்த கூடியதாக மாறும். தமிழகம் மதச்சார்பற்ற ஆன்மிகத்தில் நம்பிக்கை கொண்ட அற்புதமான மண். இந்த மண்ணில் வேற்றுமை ஏற்படுத்த முடியாது.

மோடி கோ பேக்

மோடி கோ பேக்

மிஸ்டு கால் மூலம் 80 லட்சம் உறுப்பினர்களை பாஜக சேர்த்தது போன்று தற்போது வேண்டுமானால் ஏதும் நிகழலாம். ஸ்டாலின் தன்னுடைய மண்ணில் இருக்கிறார். தன்னுடைய மக்களுக்காக வாழ்கிறார். 50 ஆண்டுகள் அவரது கட்சி அரசியலில் உள்ளது. அவரை கோ பேக் என்று சொல்வது முடியாதது. தென் இந்தியாவையும் மக்களையும் ஏற்றுக் கொள்ளாததால் தான் மோடியை கோபேக் மோடி என்று தெரிவித்தனர்.

மாணவர்களுக்கு இட ஒதுக்கீடு

மாணவர்களுக்கு இட ஒதுக்கீடு

அரசுப் பள்ளி மாணவர்களுக்கு 10 சதவீதம் இட ஒதுக்கீடு வழங்க வேண்டும் என்று நீதியரசர் கலையரசன் தெரிவித்திருந்தார், மாநில அரசு 7.5% ஆக மாற்றியது. சட்டசபையில் தீர்மானம் இயற்றி ஆளுநருக்கு அனுப்பியும் 45 நாட்களாக அதற்கு ஆளுநர் ஒப்புதல் அளிக்கவில்லை. ஆளுநர் ஒப்புக் கொள்ளாவிட்டால் சட்டசபையில் மீண்டும் தீர்மானம் இயற்றி அதனை சட்டமாக்கலாம் இதனை அதிமுக அரசு ஒப்புக் கொள்ளவில்லை. ஆளுநருக்கு கடிதம் கூட எழுதவில்லை.

ரஜினி அரசியல்

ரஜினி அரசியல்

புதுச்சேரி அரசு 10% அரசு மாணவர்களுக்கு இட ஒதுக்கீடு வழங்கிய பிறகு அதனை பின்பற்றி அதிமுக அரசு செய்துள்ளது.அதன் பின்னர் ஆளுநர் அழுத்தம் தாங்காமல் ஒப்புதல் அளித்துள்ளார். இது அதிமுகவிற்கும் ஆளுநருக்கும், பாஜகவிற்கு சம்பந்தமில்லை. எதிர்க்கட்சிகளின் வெற்றி. ரஜினி 20 ஆண்டுகளாக கட்சி ஆரம்பிப்பதாக கூறி வருகிறார். அவர் எப்போது கட்சி ஆரம்பிக்கிறார் என்று அனைவரும் ஒன்றாக சேர்ந்து அவரிடமே கேட்போம்.

பாஜகவிற்கு கால்கள் இல்லை

பாஜகவிற்கு கால்கள் இல்லை

காங்கிரஸ் சார்பில் தமிழகம் முழுவதும் மதச்சார்பற்ற கூட்டணியை ஆதரிக்கிறார்களா, பாஜக கூட்டணியை ஆதரிக்கிறார்களா என்ற மக்களின் மனநிலை கருத்துக் கணிப்புகள் எடுக்கப்பட்டு வருகிறது. பாஜக-அதிமுக பின்தங்கிய நிலையில் உள்ளது. காங்கிரஸ் முன்னிலையில் உள்ளது. அதிமுக வைத்து பாஜக ஏற்கனவே காலூன்ற முயன்று நாடாளுமன்றத் தேர்தலில் அவர்களை கூட்டு சேர்த்ததால் அதிமுகவின் கால்கள் உடைந்தது.

ஜொலிக்காத நட்சத்திரங்கள்

ஜொலிக்காத நட்சத்திரங்கள்

அதிமுகவிற்கு கால் இல்லாத நிலையில் பாஜகவை காலூன்ற வைப்பது இயலாது. பாஜகவில் இணையும் நட்சத்திரங்கள் ஒளியிழந்த நட்சத்திரங்கள். நட்சத்திரங்கள் எப்போதும் ஒளியோடு இருப்பதில்லை என்று விஞ்ஞானம் கூறுகிறது. ஒளி இழந்த நட்சத்திரங்கள் ஜொலிக்க முடியாது என்று தெரிவித்தார்.

திருமணம் ஆகாதவரா? இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!

 
 
 
English summary
People will be safe when Murugan's vel is in our hands said KS Alagiri the state leader of the Congress party. He said it would become bloody when it was in the hands of the BJP. Tamil Nadu is a wonderful soil for believing in secular spirituality. No difference can be made in this soil.
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X