சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

எக்ஸிட் போல் முடிவுகளால் படுகுஷியில் எச்.ராஜா.. செம ஹாப்பி மோடில் டிவிட்!

எக்ஸிட் போல் முடிவுகள் குறித்து பாஜக தேசிய செயலாளர் மற்றும் சிவகங்கை தொகுதி வேட்பாளர் எச்.ராஜா செய்திருக்கும் டிவிட் பெரிய வைரலாகி உள்ளது.

Google Oneindia Tamil News

டெல்லி: எக்ஸிட் போல் முடிவுகள் குறித்து பாஜக தேசிய செயலாளர் மற்றும் சிவகங்கை தொகுதி வேட்பாளர் எச்.ராஜா செய்திருக்கும் டிவிட் பெரிய வைரலாகி உள்ளது.

கடந்த ஏப்ரல் 11ம் தேதி லோக்சபா தேர்தல் தொடங்கியது. வரிசையாக 7 கட்டங்களாக தேர்தல் நடைபெற்றது. நேற்று முதல் நாளோடு தேர்தல் நடந்து முடிந்தது.

BJP secretary H Raja tweet on exit poll results

இதனால் நேற்று முதல்நாளே தேர்தலுக்கு முந்தைய கருத்து கணிப்புகள் முடிவுகள் வெளியானது குறிப்பிடத்தக்கது. அதில், பாஜகவின் தேசிய ஜனநாயக கூட்டணி 303 இடங்கள் வரை சராசரியாக வெல்லும் என்று கணிக்கப்பட்டு உள்ளது.

பாஜக ஆட்சிக்கு ஆபத்தா.. காங்கிரசுடன் சமாதானம்.. அனில் அம்பானியே சிக்னல் கொடுத்துவிட்டாரே! பாஜக ஆட்சிக்கு ஆபத்தா.. காங்கிரசுடன் சமாதானம்.. அனில் அம்பானியே சிக்னல் கொடுத்துவிட்டாரே!

இது எதிர்க்கட்சிகளுக்கு பெரிய அதிர்ச்சி அளித்துள்ளது. காங்கிரசின் ஐக்கிய முற்போக்கு கூட்டணி 115 இடங்களை வெல்லும். பகுஜன் சமாஜ் - சமாஜ் வாதி கூட்டணி 36 இடங்களை வெல்லும். மற்ற மாநில கட்சிகள் 111 இடங்களை வெற்றிபெறும் இடங்களை வெல்லும் என்கிறார்கள்.

இந்த நிலையில்தான் பாஜக தேசிய செயலாளர் மற்றும் சிவகங்கை தொகுதி வேட்பாளர் எச்.ராஜா இதுகுறித்து டிவிட் செய்துள்ளார். அதில் , இந்தமுறை 1971 திருமதி.இந்திராகாந்தி மற்றும் 1984 ல் திரு.ராஜீவ் காந்தி அவர்களும் பெற்ற வெற்றி போல் தேஜகூ வெற்றி பெறும், என்று மகிழ்ச்சியாக குறிப்பிட்டு இருக்கிறார்.

பொதுவாக காங்கிரஸ் தலைவர்களை பாஜக தலைவர்கள் மோசமாக விமர்சனம் செய்வது உண்டு. முக்கியமாக முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தியை மோடி தேர்தல் பிரச்சாரம் முழுக்க கடுமையாக விமர்சனம் செய்தார். சில இடங்களில் ராஜீவ் காந்தியை மோடி தரக்குறைவாக பேசி இருந்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

ஆனால் எச்.ராஜா தற்போது ராஜீவ் காந்தி மற்றும் இந்திரா காந்தி இருவரையும் மிகவும் மரியாதையாக குறிப்பிட்டு டிவிட் செய்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

English summary
BJP secretary H Raja's viral tweet on exit poll results.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X