சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

மாவட்ட நிர்வாகிகள் கையில் முடிவு... பொன்.ராதாகிருஷ்ணன் புதிய முயற்சி

Google Oneindia Tamil News

சென்னை: உள்ளாட்சித் தேர்தலில் தனித்து போட்டியிடுவதா அல்லது அதிமுக கூட்டணியில் போட்டியிடுவதா என முடிவெடுக்கும் அதிகாரத்தை மாவட்ட நிர்வாகிகளிடம் வழங்கிவிட்டார் முன்னாள் மத்திய இணை அமைச்சர் பொன்.ராதா.

சென்னையில் நான்கு சுவர்களுக்குள் 10 பேர் அமர்ந்து பேசி முடிவெடுப்பதை தவிர்த்து மாவட்ட நிர்வாகிகளின் கருத்துக்களுக்கு ஏற்ப இந்த முறை முடிவெடுக்கப்பட உள்ளது.

இந்நிலையில் மாவட்ட வாரியாக கருத்துக்களை அறியும் நடவடிக்கையை தொடங்கியுள்ளது தமிழக பாஜக.

கமலின் திடீர் முடிவு.. கொஞ்சமும் எதிர்பார்க்காத ஸ்டாலின்.. உள்ளாட்சி தேர்தலில் திமுகவிற்கு சிக்கல்! கமலின் திடீர் முடிவு.. கொஞ்சமும் எதிர்பார்க்காத ஸ்டாலின்.. உள்ளாட்சி தேர்தலில் திமுகவிற்கு சிக்கல்!

மாவட்ட வாரியாக

மாவட்ட வாரியாக

உள்ளாட்சித் தேர்தலில் பாஜக விரும்பிய இடங்களை அதிமுக கொடுக்க மறுப்பது பற்றி ஒன் இந்தியா தமிழில் ஏற்கனவே விரிவாக கூறியிருந்தோம். இந்நிலையில் தனித்து போட்டியிடுவதா என்பது பற்றி மாவட்ட வாரியாக கருத்துக்களைக் கேட்டறிந்து அதன் பின்னர் இறுதி முடிவெடுக்கப்படும் என அறிவித்துள்ளார் பொன்.ராதாகிருஷ்ணன்.

இறுதி முடிவு

இறுதி முடிவு

மாவட்ட வாரியாக அனைத்து மட்ட நிர்வாகிகளின் கருத்தையும் அறிந்து ஓரிரு நாட்களில் உள்ளாட்சித் தேர்தலில் என்ன நிலைப்பாடு என்பதை தெரிவிக்க உள்ளது தமிழக பாஜக. பெரும்பாலும், அதிமுக கூட்டணியில் தேர்தலை சந்திப்பது என்ற முடிவு தான் எடுக்கக்கூடும் எனத் தெரிகிறது.

2 முடிவுகள்

2 முடிவுகள்

இதனிடையே தமிழக பாஜகவில் தலைவர் பதவி காலியாக உள்ள நிலையில், நிர்வாகிகள் கோஷ்டிகளாக பிரிந்து செயல்படுவது குறிப்பிடத்தக்கது. இதனால் உள்ளாட்சித் தேர்தல் விவகாரத்தில் ஒருமித்த முடிவெடுக்க முடியாத நிலை பாஜக தரப்புக்கு ஏற்பட்டிருக்கிறது.

நிர்வாகிகள் விருப்பம்

நிர்வாகிகள் விருப்பம்

முன்னாள் மத்திய இணை அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணனை பொறுத்தவரை தனித்து போட்டியிட்டு கட்சியின் பலத்தை அறிந்துகொள்ள வேண்டும் என்பதில் முனைப்பாக இருக்கிறார். ஆனால் கமலாலயம் நிர்வாகிகள் ஒரு சிலர் அவரை ஆஃப் செய்து வைத்துள்ளார்களாம்.

English summary
BJP seeking comment from district executives for local body election contest
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X