சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

அழுகிய பொருளை அழகிய டப்பாவில் அடைத்து மார்கெட் செய்ய முடியாது.. மமதாவை சீண்டும் எஸ்வி சேகர்!

Google Oneindia Tamil News

சென்னை: அழுகிய பொருளை அழகிய டப்பாவில் அடைத்து ரொம்ப காலம் மார்கெட் செய்ய முடியாது என மேற்கு வங்க முதல்வர் மமதா பானர்ஜியை எஸ்வி சேகர் சாடியுள்ளார்.

ஆந்திர முதல்வரான ஜெகன் மோகன் ரெட்டிக்கு கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு தேர்தல் பிரச்சாரம் குறித்து வியூகம் வகுத்து கொடுத்தவர் பிரசாந்த் கிஷோர். இவரது பிரச்சார வியூகத்தின் அடிப்படையில் செயல்பட்ட ஜெகன்மோகன் ரெட்டி அபார வெற்றி பெற்று இன்று அம்மாநிலமுதல்வராகியுள்ளார்.

கடந்த 2014ஆம் ஆண்டு நரேந்திர மோடி லோக்சபா தேர்தலில் போட்டியிடவும் நிதிஷ்குமார் முதல்வராகவும் பிரச்சார வியூகம் வகுத்து கொடுத்தவர் இந்த பிரசாந்த் கிஷோர்தான். இந்நிலையில் நடந்து முடிந்த லோக் சபா தேர்தலில் மேற்கு வங்கத்தில் மமதா பானர்ஜியின் திரிணாமுல் காங்கிரஸ் கட்சி பெரும் பின்னடைவை சந்தித்தது.

என்னது இது சின்னப்புள்ளதனமா இருக்கு.! மின்சார கட்டண விவகாரம்.. காங்கிரஸை சீண்டிய ஆம் ஆத்மி என்னது இது சின்னப்புள்ளதனமா இருக்கு.! மின்சார கட்டண விவகாரம்.. காங்கிரஸை சீண்டிய ஆம் ஆத்மி

ஆட்சியை பிடிக்க பாஜக தீவிரம்

ஆட்சியை பிடிக்க பாஜக தீவிரம்

இந்நிலையில் மேற்குவங்கத்தில் வரும் 2021ஆம் ஆண்டு சட்டசபை தேர்தல் நடைபெறவுள்ளது. இதில் எப்படியாவது ஆட்சியை கைப்பற்றிவிட வேண்டும் என்ற முனைப்பில் உள்ளது பாஜக.

அதிர்ச்சியில் மமதா

அதிர்ச்சியில் மமதா

அதற்கேற்றார் போலவே அக்கட்சியை சேர்ந்த எம்எல்ஏக்கள், கவுன்சிலர்கள் மற்றும் நிர்வாகிகள் பாஜகவுக்கு தாவி உள்ளனர். இதனால் அதிர்ச்சியில் உள்ளார் மமதா பானர்ஜி.

எஸ்வி சேகர் கருத்து

இந்நிலையில் ஆந்திராவில் ஜெகன் அமோக வெற்றி பெற காரணமான பிரசாந்த் கிஷோரை சட்டசபை தேர்தலுக்கான ஆலோசகராக நியமித்துள்ளார் மமதா பானர்ஜி. இதுகுறித்து தமிழக பாஜக நிர்வாகியும் நடிகருமான எஸ்வி சேகர் தனது ட்விட்டர் பக்கத்தில் கருத்து தெரிவித்துள்ளர்.

செயல்பாட்டிலா? பிரச்சாரத்திலா?

செயல்பாட்டிலா? பிரச்சாரத்திலா?

அவர் பதிவிட்டிருப்பதாவது, ஓய்.எஸ்.ஆர்.ஜகனை ஜெயிக்கவைத்த பிரசாந்த் கிஷோர், இப்போது மமதா தீதியை ஜெயிக்க வைக்கப்போகிறாராம்..வெற்றி செயல்பாட்டிலா? அல்லது பிரச்சாரத்தினால் மட்டுமா? என்றும் கேள்வி எழுப்பியுள்ளார் எஸ்வி சேகர்.

அழுகிய பொருள் அழகிய டப்பாவில்

அழுகிய பொருள் அழகிய டப்பாவில்

மேலும் அழுகிய பொருளை அழகிய டப்பாவில் அடைத்து ரொம்ப காலம் மார்கெட் செய்ய முடியாது, என்றும் எஸ்வி சேகர் தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார். ஏற்கனவே பாஜக- திரிணாமுல் காங்கிரஸ் இடையிலான மோதலால் மேற்குவங்கம் கலவர பூமியாகியுள்ளது குறிப்பிடத்தக்கது.

English summary
BJP senior executive SV Sekhar teasing Mamata Banerjee for appointing prashant kishor for her election advisor.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X