சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

1971-ஆம் ஆண்டு சேலம் பெரியார் பேரணியில் நடந்தது என்ன? விவரிக்கிறார் நேரில் பார்த்த பாஜக நிர்வாகி!

Google Oneindia Tamil News

Recommended Video

    பெரியார் பற்றிய கருத்துக்கு மன்னிப்பு கேட்க முடியாது.. ரஜினிகாந்த் பரபர பேட்டி

    சென்னை: 1971-ஆம் ஆண்டு சேலத்தில் பெரியார் கலந்து கொண்ட மாநாட்டில் என்ன நடந்தது என்பது குறித்து பாஜக நிர்வாகி லட்சுமணன் தெரிவித்துள்ளார்.

    குடியுரிமை திருத்தச் சட்டம் நாடு முழுவதும் தீப்பற்றி எரிந்து கொண்டிருக்கிறது. இந்த நிலையில் தமிழகத்திலும் ஆங்காங்கே போராட்டங்கள் நடந்து கொண்டுதான் இருக்கின்றன.

    இந்த நிலையில் தமிழகத்தில் இப்போது ரஜினிக்கு எதிராக பிரச்சினைகள் எழுந்து வருகின்றன.

     ரஜினி அரசியல்வாதி அல்ல- ஒரு நடிகர்.. பெரியார் குறித்து சிந்தித்து பேச வேண்டும்.. ஸ்டாலின் அட்வைஸ் ரஜினி அரசியல்வாதி அல்ல- ஒரு நடிகர்.. பெரியார் குறித்து சிந்தித்து பேச வேண்டும்.. ஸ்டாலின் அட்வைஸ்

    உடையில்லாமல்

    உடையில்லாமல்

    பொங்கல் பண்டிகைக்கு முன்னர் துக்ளக் பொன் விழாவில் ரஜினி பேசியதே பிரச்சினைகளுக்கு காரணம். 1971-ஆம் ஆண்டு சேலத்தில் பெரியார் பேரணியை நடத்தினார். அப்போது ராமர், சீதை சிலைகள் உடையில்லாமல் செருப்பு மாலை அணிவித்து கொண்டு செல்லப்பட்டது.

    திக வாதம்

    திக வாதம்

    இதை தைரியமாக தனது பத்திரிகையில் வெளியிட்டவர் சோ என அவரை பாராட்டும் போது சர்ச்சையை சந்தித்தார் ரஜினி. அது போல் ஒரு சம்பவமே நடைபெறவில்லை என்பதுதான் திராவிடர் கழகத்தினரின் வாதமாக உள்ளது.

     தர்ணா

    தர்ணா

    அந்த சம்பவத்தின் போது ராமர், சிலை அவமதித்ததை கண்டித்து இப்போதைய பாஜக மூத்த தலைவர் லட்சுமணன், அப்போது ஆர்எஸ்எஸ் இயக்கத்தில் இருந்தபோது தர்ணா போராட்டம் நடத்தியதாக தெரிவிக்கப்பட்டது.

    தெய்வங்கள் சிலைகள்

    தெய்வங்கள் சிலைகள்

    இதுகுறித்து லட்சுமணன் கூறுகையில் 1971-ஆம் ஆண்டு சேலத்தில் திராவிடர் கழகத்தினர் கலந்து கொண்ட ஊர்வலம் நடைபெற்றது. இந்த ஊர்வலத்திற்கு பெரியார் தலைமை தாங்கினார். அப்போது மாட்டு வண்டிகளில் ராமர், சீதை, முருகன், பெருமாள், ஐயப்பன் உள்ளிட்ட தெய்வங்களின் சிலைகள் கொண்டு செல்லப்பட்டன.

    துக்ளக் பறிமுதல்

    துக்ளக் பறிமுதல்

    அவற்றுக்கு திராவிடர் கழகத்தினர் செருப்பு மாலை அணிவித்தும் செருப்பால் அடித்தும் கடவுளுக்கு எதிராகவும் மதத்திற்கு எதிராகவும் முழக்கங்களை எழுப்பினர். 1971 இல் கடைகளில் துக்ளக் விற்கவிடவில்லை; தி.க பேரணி பற்றி வெளியிட்ட துக்ளக் இதழை அன்றைய அரசு, கடைகளில் விற்பனை செய்ய முடியாதளவுக்கு பறிமுதல் செய்தது என்றார் கே என் லக்ஷ்மணன்.

    English summary
    BJP Senior leader K.N.Lakhsmanan explains what happened in Periyar's rally in 1971 at Salem.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X