சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

தம்பி.. சலிச்சு போச்சு.. திக, திமுககாரர்களைவிட நான் சுத்த சுயம்பிரகாச தமிழன்.. சொல்வது எச். ராஜா!

ட்விட்டர்வாசிகளின் கேள்விகளுக்கு எச்.ராஜா பதிலடி தந்துள்ளார்

Google Oneindia Tamil News

சென்னை: தம்பி.. இந்த மாதிரி கமெண்ட்ஸ் பார்த்து சலித்து போச்சு.. இங்க உள்ள பல திக, திமுக காரர்களைவிட நான் சுத்த சுயம்பிரகாச தமிழன்.. என் தாத்தா பெயர் சிவ சிதம்பரம்.. அப்பா பெயர் ஹரிஹரன்" என்று ட்விட்டர்வாசிகளுக்கு உடனுக்குடன் பதிலடி தந்து வருகிறார் எச்.ராஜா.

Recommended Video

    பல அதிரடி அறிவிப்புகளை வெளியிட்ட நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன்

    21 நாட்கள் ஊரடங்கு உத்தரவு உள்ளதால் அனைவரும் வீட்டில் பாதுகாப்புடன் இருந்து வருகின்றனர்.. உத்தரவு பிறப்பிக்கப்பட்டபோதே நிறைய பதிவுகளை எச். ராஜா போட்டிருந்தார்.

     bjp senior leader h raja gives explanation for his fathers name

    "நோய் தடுக்க தனிமைப்படுங்கள் மனதால் ஒன்றுபடுங்கள். தேசம் காக்க தனிமைப்படுங்கள் அன்பால் பிரபஞ்சத்தின் எல்லைகளையும் கடந்து செல்லுங்கள். உலகம் வாழ தனிமைப்படுங்கள் உங்கள் உள்ளுக்குள் பயணப்படுங்கள். நேர்மறையாக சிந்தித்தால் தனிமை சாபமல்ல அது ஒரு வரம் என்றும், இன்னமும் 20 நாட்கள் வீட்டிலேயே இருக்க வேண்டியுள்ளதால் நம் ஒவ்வொருவருக்கும் நம்மோடு இருக்கும் நண்பன் library தான். மாதிரிக்கு சில புத்தகங்கள் என்று பதிவிட்டுள்ளார். மேலும் இதுபோல் 1000 நண்பர்கள் ( புத்தகங்கள்) இருக்கும் போது தனிமை என்பதே கிடையாது" என்று தெரிவித்திருந்தார்.

    புத்தக வாசிப்புடன் அவ்வப்போது ட்விட்டர் பக்கத்திலும் சுடச்சுட பதிவுகளையும் போட்டு வருகிறார்.. இன்று கொஞ்சம் விசேஷம்.. தன்னுடைய ட்விட்டர்வாசிகளுக்கு உடனுக்குடன் நெத்தியடி பதிலை தந்து திணறடித்து வருகிறார் பாஜக தேசிய செயலாளரும், மூத்த தலைவருமான எச்.ராஜா!

    ஏதோ ஒரு வீடியோவை எச்.ராஜா பதிவிட்டு வங்காளி என்று குறிப்பிட்டார்.. அதற்கு ஒருவர் அது வங்காளி இல்லை பெங்காலி என்று பதிவு போட்டார்.

    இதை பார்த்த எச்.ராஜா "வவும், பவும் எப்படி வேண்டுமானாலும் மாற்றி உபயோகிக்கலாம். தமிழ் படிங்க. வில்லர்கள், பில்லர்கள், இரண்டும் ஒன்றே. 10-ம் வகுப்பு பாடம் என்று பதில் சொன்னார்.

    உடனே இன்னொரு ட்விட்டர்வாசி, "உனக்கு எப்படி வங்காள மொழி தெரிஞ்சுது?" என்று கேள்வி எழுப்பினார். அதற்கு எச்.ராஜா, "நான் 1980-84 மத்தியப் பிரதேசத்தில் coal india ல் பணியாற்றினேன். அது தேசிய உண்மை ஆக்கப்படுமுன் பெங்கால் கோல் ஃபீல்டு ஆக இருந்தது. எனவே நிறைய பெங்காலிகள் மத்தியில் 4 ஆண்டுகள் வசித்ததால்" என்றார்.

    அதற்கு மற்றொருவர், "உங்களுக்கு நன்றாக புரியும், நீங்கள் வட நாட்டவர் தானே?" என்றார். இதற்கும் எச்.ராஜா பதிலளிக்கும்போது, "இந்த மாதிரி காமெண்ட்ஸ் பார்த்து சலித்துப் போச்சு தம்பி. நான் சுத்த சுயம்பிரகாச தமிழன் இங்க உள்ள பல திக, திமுக காரர்களைவிட.. தஞ்சாவூர் அகரமாங்குடி சொந்த ஊர், பிறந்தது பக்கத்திலுள்ள மெலட்டூர். எனது பாட்டனார் பெயர் சிவ சிதம்பரம் இப்பெயர் தமிழகத்திற்கு வெளியில் இருக்காது. புரிந்ததா" என்று விளக்கம் தந்துள்ளார்.

    தாத்தா பெயரை மட்டும் எச்.ராஜா சொல்லவும், ஒருவர் நடுவில் புகுந்து, "அப்பா பெயர் சொல்லவே இல்லை.. ஹரிகர சர்மாதானே" என்று மற்றொரு கேள்வி எழுப்பினார். அதற்கு எச்.ராஜா, "அப்பா பேராசிரியர் எஸ்‌. ஹரிஹரன். அழகப்பா பல்கலைக்கழகத்தில் RTI போட்டு சரிபார்துக் கொள். அவர் அங்கு ஓய்வு பெற்ற பேராசிரியர். ஆமாம் இந்த ஷர்மா, சர்மா வித்தியாசம் என்ன என்று விவரமறிந்தவர்களிடம் கேட்டுத் தெரிந்து கொள்" என்று பதிலடி தந்துள்ளார்

    English summary
    bjp senior leader h raja gives explanation for his fathers name
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X