சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

"கிறிஸ்தவ மதத்தை பரப்பவே சகாயம் விஆர் தர்றார்".. பாஜக இல.கணேசன் ஆரூடம்

சகாயம் விருப்ப ஓய்வு குறித்து இல கணேசன் கருத்து தெரிவித்துள்ளார்

Google Oneindia Tamil News

சென்னை: "கிறிஸ்தவ மதத்தை பரப்பவே சகாயம் பதவி விலகியிருப்பார்" என்று இல.கணேசன் ஆரூடம் கூறியுள்ளார்.

சகாயம் ஐஏஎஸ் விஆர்எஸ் கேட்டுள்ளார்... எதற்காக இந்த விருப்ப ஓய்வு என்று தெரியவில்லை.. ஆனால், இந்த செய்தி பலரையும் வியப்பிலும், மகிழ்ச்சியிலும் ஆழ்த்தி கொண்டுள்ளது.

சகாயம் முழுமையாக அரசியலுக்கு வரப் போகிறார் என்று பலரும் எதிர்பார்க்க ஆரம்பித்து விட்டனர். ஆனால், விருப்ப ஓய்வுக்குப் பின்னர் செய்யப் போகிறார்? அவர் அரசியலுக்கு வருவாரா அல்லது வேறு திட்டம் வைத்துள்ளாரா? யாருடனாவது இணைந்து செயல்பட திட்டமிட்டுள்ளாரா? என்றெல்லாம் எதுவுமே உறுதியாக தெரியவில்லை.

சகாயம்

சகாயம்

அதற்குள், கிறிஸ்தவ மதத்தை பரப்பவே சகாயம் பதவி விலகியிருப்பார் என்று இல.கணேசன் கூறியுள்ளார்.. சென்னை கிண்டியில் உள்ள சர்தார் வல்லபாய் படேல் சிலைக்கு பாஜக சார்பில், அக்கட்சியின் மூத்த தலைவர் இல.கணேசன் தலைமையில் மலர் தூவி மரியாதை செய்யப்பட்டது.

சர்தார்

சர்தார்

பிறகு செய்தியாளர்களை சந்தித்து பேசிய இல.கணேசன், "சுதந்திரத்திற்காக நடைப்பெற்ற போராட்டத்திற்கு தலைமை தாங்கி வெற்றிகரமாக நடத்தப்பட்ட காரணத்தால் "சர்தார்" என்று அழைக்கப்பட்டார். மேலும், மனதளவில் அவர் மிகவும் உறுதியானவர்... ஆண்டு தோறும் அவர் பிறந்த நாளில் மரியாதை செலுத்துவது வழக்கம்... அந்த வகையில் தான் பாஜக சார்பில் இன்றும் மரியாதை செலுத்தப்பட்டது.

 பாஜக

பாஜக

பாஜக சார்பில் வேல் யாத்திரை நீண்ட நாட்களுக்கு முன்பே திட்டமிட்டுவிட்டோம்... யாத்திரை கட்சி அமைப்பு ரீதியான திட்டமிடப்பட்டுள்ளது... திருமாவளவனை சார்ந்தவர்கள் கலவரம் செய்ய திட்டமிட்டுள்ளனர். அதனால் இதற்கு அரசு போதிய பாதுகாப்பு வழங்க வேண்டும் வேறு எந்த உள்நோக்கமும் இல்லை. அரசிற்கு இதை தடுக்க எந்த காரணமும் இல்லை.. நாங்கள் பேசி இதற்கு அனுமதி வாங்குவோம். அதுமட்டுமில்லை.. பாஜகவிற்கு மக்கள் மத்தியில் அதிகம் புகழ் கூடி விடுமோ என்ற எண்ணம் திருமாவளவனுக்கு இருக்கிறது.

ரஜினி

ரஜினி

எந்த கேள்விக்கும் பதில் சொல்ல முடிந்த என்னால், ரஜினிக்காக மட்டும் பதில் சொல்ல முடியாது.. அவரது அரசியல் பிரவேசம் குறித்து யாராலும் கணிக்க முடியாது.. அவரே சொன்னால் மட்டும்தான்.. ஆனால், ரஜினி எது செய்தாலும் சரியாகத்தான் செய்வார்... அதனால பதில் சொல்ல வேண்டியது ரஜினி தான். சகாயம் ஐஏஎஸை அரசாங்கம் அனுப்பவில்லை... அவர் அதிகாரத்தில் இருக்கும்போதே கிறிஸ்துவ மதத்தை பரப்பியவர்... இப்போது கூட முழுமையாக அந்த மதத்தை பரப்ப வேண்டும் என்பதற்காவே பதவி விலகுகிறார் என நினைக்கிறேன்" என்றார்.

English summary
BJP Senior Leader Ila Ganesan says about Sagayam IAS's resign
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X