சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

"என்னது கடவுள் செயலா? அப்படின்னா இதுவும் அதுதானா?".. இருங்க வீடியோ வெளியிடறேன்".. சாமி அலப்பறை!

இதுவும் கடவுளின் செயலா என்று நிதியமைச்சருக்கு சு.சாமி கேள்வி எழுப்பி உள்ளார்

Google Oneindia Tamil News

சென்னை: "என்னது கடவுள் செயலா? அப்படின்னா இதுவும் கடவுளின் செயலா? இருங்க.. வீடியோ வெளியிடறேன்" என்று நிதியமைச்சர் ஜிஎஸ்டி குறித்த பேச்சுக்கு பாஜக மூத்த தலைவர் சுப்பிரமணிய சாமி கேள்வி எழுப்பி உள்ளதுடன், தன் கருத்தையும் தெரிவித்துள்ளார்.

பாஜகவில் இருந்தாலும், சேம் சைட் கோல் போட்டு கொண்டிருப்பவர் மூத்த தலைவர் சுப்பிரமணிய சாமி... ஏதாவது பெரிய பொறுப்பு தனக்கு கிடைக்கும் என்று நீண்ட காலமாகவே எதிர்பார்த்து காத்திருந்தார்.

அதிலும் நிதியமைச்சர் பதவி மீது இவருக்கு ஒரு கண் இருக்கத்தான் செய்தது.. ஆனால், மோடி அரசு அந்த பதவியை தரவே இல்லை. இப்படி பதவி தராதது குறித்தும் ட்விட்டரில் எதிர்கருத்துதான் சொல்லியவாறே இருந்தார்.

டெல்லிக்கு ராஜான்னாலும்.... திராவிடக் கட்சியுடன்தான் சவாரி.... செல்லூர் ராஜூ பதிலடி!! டெல்லிக்கு ராஜான்னாலும்.... திராவிடக் கட்சியுடன்தான் சவாரி.... செல்லூர் ராஜூ பதிலடி!!

 நிதியமைச்சர்

நிதியமைச்சர்

அதேபோல, நிதியமைச்சர் பதவியில் நிர்மலாவை நியமித்ததாலோ, என்னவோ, அவரது அறிவிப்புகளை அடிக்கடி விமர்சித்தும் வருகிறார்.. எந்தவித நடவடிக்கையை நிர்மலா சீதாராமன் மேற்கொண்டாலும், அதற்கு எதிராகவே கருத்து சொல்வது இவரது ஸ்பெஷல்!

விமர்சனம்

விமர்சனம்

ஒருமுறை இப்படித்தான் பொருளாதார தீர்வு குறித்து நிதியமைச்சர் சில திட்டங்களை அறிவித்தார்.. அதற்கு முதல் ஆளாக வந்து விமர்சித்த சு.சாமி, "ஒன்று துணிவு இருக்க வேண்டும், அல்லது புத்திசாலித்தனம் இருக்க வேண்டும். இதில் ஏதாவது ஒன்று இருந்தால் மட்டுமே பொருளாதாரத்தை சரிவில் இருந்து மீட்க முடியும். ஆனால் நம்மிடம் இரண்டுமே இல்லையே" என்று அட்டாக் செய்திருந்தார்.

ஜிஎஸ்டி

ஜிஎஸ்டி

அதுபோலவே, இப்போதும் நிதியமைச்சரை விமர்சித்திருந்தார்.. கடந்த வியாழக்கிழமை நடந்த ஜிஎஸ்டி கூட்டத்தில் நிர்மலா பேசும்போது, "கொரோனா பெருந்தொற்றினால் பொருளாதாரம் வெகுவாக பாதிக்கப்பட்டது.. கொரோனா கடவுளின் செயல் என்றார்.. இவர் இப்படி சொன்னதுமே காங்கிரஸ் கட்சியினர் கடுமையாக விமர்சித்தனர்.

 கடவுளின் செயல்

கடவுளின் செயல்

எதிர்க்கட்சிகளான இவர்கள் விமர்சிப்பது வழக்கமான ஒன்றுதான் என்றாலும், சு.சாமியும் விமர்சித்தார். "கோவிட்-19 கடவுளின் செயல் என்று மத்திய நிதி அமைச்சர் குறிப்பிட்டதாக எனக்கு கிடைத்த நம்பகமான தகவல்கள் கூறுகின்றன... ஜிடிபி சரிவானது 2015-ம் வருஷத்தில் இருந்தே நடந்துள்ளது.. 2015-ல் ஜிடிபி 8 சதவீதமாக இருந்தது. 2020-ல் முதல் காலாண்டில் இது 3.1 சதவீதமாக சரிந்துவிட்டது.. இது கொரோனா பரவலுக்கு முந்தைய நிலவரமாகும். இதுவும் கடவுளின் செயலா? இது தொடர்பாக விரைவில் வீடியோ வெளியிடுகிறேன்.

 ரிசர்வ் வங்கி

ரிசர்வ் வங்கி

மாநிலங்களுக்கு இழப்பீடு வழங்குவது தொடர்பாக 2 வாய்ப்புகள் மாநிலங்களுக்கு வழங்கப்படுவதாக மத்திய நிதி அமைச்சர் சொல்லி உள்ளார்.. இதில் ரிசர்வ் பேங்கிடம் குறைந்த வட்டிக்கு ரூ.97,000 கோடியை கடனாக பெறலாம். இந்த தொகையை 5 வருஷத்துக்கு பிறகு வரிவசூல் அதிகரிக்கும்போது திரும்பவும் செலுத்தலாம் அல்லது மாநில அரசுகளே இந்த வருடம் ஏற்படும் ஜிஎஸ்டி பற்றாக்குறையான ரூ.2.35 லட்சம் கோடியை ஏற்று கொள்வது என்பதாகும். இதை மாநில அரசுகள் ரிசர்வ் வங்கியுடன் கலந்து பேசி முடிவெடுக்கலாம்" என்று தெரிவித்துள்ளார்.

English summary
BJP Senior Leader Subramaniyan Swamys question on sitharamans act of god
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X