சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

இப்ப எதுக்கு.. நான் ரிலீஸ் ஆகி வந்தால் யார் வரவேற்பார்கள்? "சித்தி"க்கு வந்த டவுட்.. தள்ளி போட யோசனை

எப்போது விடுதலையாவது என்ற யோசனையில் சசிகலா இருப்பதாக தெரிகிறது

Google Oneindia Tamil News

சென்னை: "நான் ரிலீஸ் ஆகி வந்தால் யார் என்னை வரவேற்பார்கள்? என்னை வரவேற்க கூட்டம் சேராதே.. செப்டம்பர் மாசம்தான் தொற்று அதிகமா இருக்கும் என்கிறார்களே.. நான் வெளியே வந்தால் என்னை எப்படி திரண்டு மக்கள் வரவேற்பார்கள்" என்று சிறையில் உள்ள சசிகலா தனக்கு நெருக்கமானவர்களிடம் கேள்வியையும், சந்தேகத்தையும் எழுப்பியதாக கூறப்படுகிறது.

சசிகலா ஆகஸ்ட் 14-ம் தேதி ஜெயிலில் இருந்து வெளியே வருகிறார் என்ற ஒரு தகவல் 4 தினங்களாக சோஷியல் மீடியாவில் பரவிவருகிறது.

ஆனால் சசிகலா விடுதலையாவது உண்மை என்றால், அது பற்றி கர்நாடக சிறை துறைதான் அதிகாரபூர்வமாக தெரிவிக்க வேண்டும்.. ஆனால், அப்படி எந்த அறிவிப்பும் இதுவரை வரவில்லை. அதனால் யூகமே இப்போது வரை இந்த செய்தி எடுத்து கொள்ளப்பட வேண்டி உள்ளது.

சாத்தான்குளம் வழக்கு... சிபிஐ-க்கு மாற்றி பொறுப்பை தட்டிக் கழிக்காதீர் -கமல் ஆவேசம்சாத்தான்குளம் வழக்கு... சிபிஐ-க்கு மாற்றி பொறுப்பை தட்டிக் கழிக்காதீர் -கமல் ஆவேசம்

யூகங்கள்

யூகங்கள்

அதேசமயம், இது யூகமே என்றாலும், இப்போதும்கூட, சில தகவல்கள் அதை பற்றி பரபரத்து வெளியே வருகின்றன.. பாஜக-வின் ஆசீர்வாதம் ஆச்சாரி தனது ட்விட்டரில் இதை பற்றி ஒரு பதிவு போட்டிருந்தார்.. அதிமுக அல்லது அமமுக சம்பந்தப்பட்ட சசிகலாவை பற்றி, பாஜக ஏன் டுவீட் போட்டது என்று தெரியவில்லை.. சசிகலா விடுதலை சம்பந்தமான வேலைகளை ஒரு வருடமாகவே பாஜக எடுத்து வந்தது. .. அந்த வகையில் தற்போது விடுதலை பற்றின ஒரு விஷயத்தையும் ஆச்சாரி கசியவிட்டது, ஏதோ அரசியல் காய்நகர்த்தலாகவே பார்க்கப்படுகிறது.

சுற்றுப்பயணம்

சுற்றுப்பயணம்

இதனிடையே முதல்வர் என்ன நினைத்தாரோ தெரியவில்லை, திடீரென சுற்றுப்பயணம் பிளான் போட்டு கிளம்பினார்.. கொரோனா தீவிரமாகி வரும் நிலையில், மற்றொரு பக்கம் சாத்தான்குளம் சம்பவம் வெடித்து கிளம்பிய நிலையில், முதல்வர் இந்த சுற்றுப்பயணத்தை ஆரம்பித்தார்.. சசிகலா விடுதலை என்ற தகவல் வந்ததுமே இந்த சுற்றுப்பயணம் அமைந்தது கவனிக்கத்தக்கதாக உள்ளது.

தடைகள்

தடைகள்

இந்த நிலையில், சசிகலாவின் ரீலீஸ் பற்றி ஒருசில தகவல்கள் கசிந்துள்ளன.. ரிலீஸ் பற்றின பிராசஸ் எல்லாம் 2 மாசத்துக்கு முன்பேயே நடந்து முடிந்துவிட்டன.எனினும், ரிலீசுக்கு ஏதாவது தடைகள் இருந்தால், கொஞ்சம் பிரஷர் தந்தால் போதும், செப்டம்பரிலேயே வெளியே வந்துவிடலாம் என்று நெருக்கமானவர்கள் சிலர் சசிகலாவுக்கு சொல்லி உள்ளதாக தெரிகிறது.

கூட்டம்

கூட்டம்

ஆனால் சசிகலாவோ, செப்டம்பர் மாசம், கொரோனா தொற்று உச்சத்தில் இருக்கும் என்கிறார்களே, அந்த நேரத்தில் ரிலீஸ் ஆனால் என்னை வரவேற்க பெரிய அளவு கூட்டத்தை திரட்ட முடியாது, கொஞ்ச நாள் ஆகட்டும்" என்று சொன்னாராம்.

Recommended Video

    Lockdown Extension செய்யப்படுமா? | CM Edappadi Palanisamy என்ன சொல்ல போகிறார்?
    பாஜக

    பாஜக

    ஒருவேளை இந்த தகவல் உண்மையானால், சசிகலா பெரிய பிளானில் இருப்பதாகவே தோன்றுகிறது.. இல்லையென்றால் ஆச்சாரி ஏன் ட்வீட் போட வேண்டும்? சசிகலாவின் ரிலீஸை வைத்து பாஜக என்ன ஆட்டம் ஆட காத்திருக்கிறதோ தெரியவில்லை!

    English summary
    bjp: sources say that sasikala thinking more about her release date
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X