சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

அன்பு தம்பி அண்ணாமலை.. மதத்தை பேசுவதை நிறுத்துங்கள்.. மக்கள் பிரச்சினை பற்றி பேசுங்கள்.. சீமான்!

Google Oneindia Tamil News

சென்னை: மதம் பற்றி பேசுவதை நிறுத்திவிட்டு, மக்கள் பிரச்சினைகளை பற்றி அன்பு தம்பி அண்ணாமலை பேச வேண்டும் என்று நாம் தமிழர் கட்சியினர் சீமான் வலியுறுத்தியுள்ளார்.

அஞ்சல் துறையை தனியாருக்கு தாரை வார்ப்பதை கைவிட வேண்டும் உள்ளிட்ட 14 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி தேசிய கிராமிய அஞ்சல் ஊழியர் சங்கம் சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில் நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் கலந்துகொண்டார்.

இந்த ஆர்ப்பாட்டத்தில் சீமான் பேசுகையில், இண்டர்நெட், இம் - மெயில், செல்ஃபோன் என்று தொழில்நுட்பம் வந்தாலும், மக்கள் பிரச்சினைகளுக்கு கடிதம் தான் எழுதி வருகிறார்கள். ஆனால் அந்த கடிதத்தை கொண்டு செல்லும் அஞ்சல் ஊழியர்கள் பரிபாதமான நிலையில் இருக்கின்றனர்.

பெட்ரோல் குண்டு: இஸ்லாமியர்களை ஆதாரம் இல்லாமல் சந்தேகத்தில் கைது செய்தால் பிரச்சனை வரும்...சீமான்பெட்ரோல் குண்டு: இஸ்லாமியர்களை ஆதாரம் இல்லாமல் சந்தேகத்தில் கைது செய்தால் பிரச்சனை வரும்...சீமான்

அண்ணாமலைக்கு கோரிக்கை

அண்ணாமலைக்கு கோரிக்கை

அஞ்சல் ஊழியர்களின் கோரிக்கைகளை ஆட்சியாளர்களின் கவனத்திற்கு கொண்டு செல்ல நினைக்கிறோம். மாநில பாஜக தலைவர் அன்பு தம்பி அண்ணாமலை, அஞ்சல் ஊழியர்களின் பிரச்சினை, கனிமவள கொள்ளை உள்ளிட்ட பிரச்சினைகளை பற்றி பேச வேண்டும். ஆனால் மதம், மதம் என்று பேசுகிறார். இது உங்கள் அரசு, ஆட்சியின் பிரச்சினை.

சீமான் பேச்சு

சீமான் பேச்சு

அண்ணாமலை தங்கள் தலைவரிடம் இது தொடர்பாக எடுத்துரைக்க வேண்டும். எனக்கு கூட வாக்கு செலுத்த வேண்டாம். உங்களுக்கே வாக்களிக்க வலியுறுத்துகிறேன். ஆனால் இந்த பிரச்சினையில் கவனம் செலுத்துங்கள். அதிகாரம் இல்லாததால், போராட்டத்தின் மூலமாக தான் எதிர்ப்பை தெரிவிக்க வேண்டியுள்ளது. போராடினால் வாழ்வதற்கு வாய்ப்பு இருக்கிறது. அதனால் போராடி சாவோம். போராடுவதற்கு இடமில்லாமல், அஞ்சல் அலுவலகத்தில் போராட வேண்டிய சூழல் ஏற்பட்டுள்ளது என்று தெரிவித்தார்.

பிஎஃப்ஐ தடை பற்றி சீமான்

பிஎஃப்ஐ தடை பற்றி சீமான்

தொடர்ந்து பாப்புலர் ஃபிரண்ட் அமைப்புக்கு தடை விதிக்கப்பட்டது குறித்து நிருபர்கள் எழுப்பிய கேள்விக்கு பதிலளித்த சீமான், வடமாநிலங்களில் பிஎஃப்ஐ அமைப்பு ஆயிரக்கணக்கான மக்களுக்கு கல்வி கொடுத்துள்ளது. இந்தியாவில் மதத்தை தாண்டிய புனிதம் உள்ளது. தமிழ்நாட்டில் மதத்தை தாண்டிய மனிதநேயமும், உயிர்கள் மீதான நேயமும் உள்ளது. கொரோனா வந்தபோது மதமும், கோயிலும் எங்கு சென்றது. பூட்டுப்போட்டுக் கொண்டு வீட்டிற்குள் இருந்தார்கள் என்று விமர்சித்தார்.

 விசிக பேரணி

விசிக பேரணி

தொடர்ந்து ஆர்எஸ்எஸ் பேரணி பற்றி கேள்விக்கு, அக்.2ம் தேதியன்று ஆர்எஸ்எஸ் இயக்கத்தின் ஊர்வலம் தமிழ்நாடு முழுவதும் நடப்பதாக இருக்கிறது. அதற்கு எதிராக விசிக தரப்பில் நடத்தப்படும் பேரணியில் நாம் தமிழர் கட்சியும் பங்கேற்கும் என்று தெரிவித்தார்.

English summary
Naam Tamilar Party chief Coordinator Seeman urged TN BJP Leader Annamalai to stop talking about religion and talk about people's problems.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X