சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

'நீட் சமூகநீதியை நிலைநாட்டும் தேர்வு தான்.. மாணவர் தற்கொலைகளுக்கு திமுகவே காரணம்..' அண்ணாமலை சாடல்

Google Oneindia Tamil News

சென்னை: நீட் என்பது சமூக நீதியை நிலைநாட்டக் கூடிய தேர்வாக உள்ளதாகத் தெரிவித்த பாஜக மாநில தலைவர் அண்ணாமலை, நீட் வராது என திமுக உறுதி அளித்ததன் காரணமாக இந்தாண்டு மாணவர்கள் தற்கொலை செய்து கொண்டதாகவும் விமர்சித்துள்ளார்.

Recommended Video

    நீட் சமூகநீதியை நிலைநாட்டும் தேர்வு தான்.. மாணவர் தற்கொலைகளுக்கு திமுகவே காரணம்.. அண்ணாமலை சாடல்

    கோவையில் இன்று பல்வேறு மாற்றுக் கட்சிகளைச் சேர்ந்தவர்கள் பாஜகவில் இணையும் நிகழ்ச்சி நடைபெற்றது.

    'மாபெரும் சாதனை..' 3 நாள் ஸ்பேஸ் சுற்றுலா.. பத்திரமாக பூமிக்கு திரும்பிய ஸ்பேஸ் எக்ஸ் விண்கலம்'மாபெரும் சாதனை..' 3 நாள் ஸ்பேஸ் சுற்றுலா.. பத்திரமாக பூமிக்கு திரும்பிய ஸ்பேஸ் எக்ஸ் விண்கலம்

    பாஜக மாநில தலைவர் அண்ணாமலை முன்னிலையில் நடைபெற்ற இந்த நிகழ்ச்சியில் மாற்றுக்கட்சியைச் சேர்ந்த பலரும் பாஜகவில் இணைந்தனர்.

    அண்ணாமலை பேச்சு

    அண்ணாமலை பேச்சு

    இந்த நிகழ்ச்சிக்குப் பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய பாஜக மாநில தலைவர் அண்ணாமலை, "கோவையில் பிரதமர் மோடியின் பிறந்த நாளை முன்னிட்டு மக்கள் பயன்பெறும் வகையில் பல்வேறு நிகழ்ச்சிகள் நடைபெற்றன. கோவை மாநகர காவல்துறை திமுகவின் கூலிப்படையாக இருந்து, பிரதமர் மோடியின் பிறந்தநாள் போஸ்டரை கிழித்துள்ளனர். இதற்கு பாஜகவின் கண்டனத்தைப் பதிவு செய்கிறோம்.

    நீட் உயிரிழப்பு

    நீட் உயிரிழப்பு

    நீட் தேர்வு தொடர்பாக மாணவர்கள் உயிரிழந்துள்ளனர். இதுபோன்ற சம்பவங்களுக்கு பாஜக மிகவும் வருத்தப்படுகிறது. நீட் என்பது சமூக நீதியை நிலைநாட்டக் கூடிய தேர்வாக உள்ள நிலையில் அரசியல் காரணங்களுக்காக திமுக நீட் தேர்வைத் தவறாகப் பயன்படுத்துகின்றனர். கடந்த ஆண்டுகளில் மாணவர்கள் யாரும் உயிரிழக்கவில்லை. ஆனால், இந்த ஆண்டு மட்டும் மாணவர்கள் உயிரிழந்துள்ளனர். இதற்கு என்ன காரணம்? நீட் வராது என திமுக உறுதி அளித்ததன் காரணம். நீட் தேர்வில் மட்டும் அல்லாமல் மற்ற படிப்புகளிலும் முறைகேடு நடக்கிறது.

    உள்ளாட்சித் தேர்தல்

    உள்ளாட்சித் தேர்தல்

    உள்ளாட்சித் தேர்தலில் பாஜகவின் தற்போதைய கூட்டணி சுமுகமாகவே உள்ளது. உள்ளாட்சித் தேர்தலில் பாஜக எந்தெந்த இடங்களில் போட்டியிடும் என்பது குறித்து வரும் 22ஆம் தேதிக்குள் முடிவு செய்யப்படும். உள்ளாட்சித் தேர்தலை ஒரே தேதியில் நடத்த வேண்டும் என எடப்பாடி பழனிச்சாமி கூறியதில் எந்த தவறும் இல்லை. அதிமுக நிர்வாகிகள் வீட்டில் லஞ்ச சோதனை என்பது திமுகவின் அரசியல் காழ்ப்புணர்ச்சியே காரணம்.

    பெட்ரோல், டீசல் விலை

    பெட்ரோல், டீசல் விலை

    பெட்ரோல், டீசல் விலையில் திமுக இரட்டை வேடம் போடுகிறது, பெட்ரோல் டீசல் விலையை கட்டிப்பாடிற்குள் கொண்டுவர ஒரே வழிதான் உள்ளது. பெட்ரோல், டீசலை ஜிஎஸ்டி வரம்பிற்குள் கொண்டு வர மாநில அரசுகள் ஒப்புதல் அளிக்க வேண்டும்" என்று அவர் தெரிவித்தார்.

    English summary
    Annamalai about NEET exams in Tamilnadu. Annamalai latest press meet.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X