• search
சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  

"முதல்வர் ஸ்டாலின் இப்படி செய்தது ஆச்சரியமாக இருக்கிறது.. களம் மாறிவிட்டது".. பாஜக அண்ணாமலை பளீர்

Google Oneindia Tamil News

சென்னை: முதல்வர் ஸ்டாலின் சென்னை விமானநிலையத்தில் ஆளுநர் என்ஆர் ரவியை வரவேற்று இருப்பது ஆச்சரியமாக இருக்கிறது என்று பாஜக மாநில தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார். மேலும் பாஜக வளர்ந்து கொண்டு இருக்கிறது என்றும் இளைஞர்கள் வருகிறார்கள்... களம் மாறிவிட்டது.. 2024 தேர்தலில் அது தெரியும்" என்றும் அண்ணாமலை உறுதிபட கூறினார்.

பிரதமர் மோடியின் 71-வது பிறந்ததினம் நேற்று கொண்டாடப்பட்டது.. கடந்த 2014ம் ஆண்டு பிரதமராக பொறுப்பேற்ற நிலையில் அவரின் பிறந்தநாள் ஒவ்வொரு வருடமும் வெகுவிமர்சையாக கொண்டாடப்படுவது வழக்கம்.

அந்த வகையில், இந்தமுறையும் மோடியின் பிறந்தநாள் கொண்டாட்டம் 20 நாட்களாக நீட்டிக்கப்பட்டுள்ளது. நேற்று முதல் ஒவ்வொரு ஆண்டும் மோடியின் பிறந்தநாளை "சேவை மற்றும் சமர்ப்பண தினமாக" கொண்டாட முடிவு செய்திருக்கின்றார்கள் பாஜக தொண்டர்கள்.

 கருணாநிதியின் நிழலுக்கு வயது 80... சண்முகநாதனை சந்திக்க வீடு தேடிச்சென்ற முதலமைச்சர் ஸ்டாலின்..! கருணாநிதியின் நிழலுக்கு வயது 80... சண்முகநாதனை சந்திக்க வீடு தேடிச்சென்ற முதலமைச்சர் ஸ்டாலின்..!

 நிகழ்ச்சிகள்

நிகழ்ச்சிகள்

20 வருட அரசியல் பயணத்தை பாராட்டும் வகையில் அக்டோபர் 7ம் தேதிவரை மிகப்பெரிய பிரச்சாரத்தையும் நடத்தி வருகின்றனர்.. தமிழகத்திலும் பிரதமர் மோடியின் பிறந்தநாளை கொண்டாடும் விதமாக பாஜக சார்பில் பல்வேறு நிகழ்ச்சிகளும் நடந்து வருகிறது. அதன்படி, நேற்றைய தினம் பாஜக தலைமை அலுவலகமான கமலாலயத்தில் டிஜிட்டல் தொடுத்திரைத் தொலைக்காட்சி தொடக்க நிகழ்ச்சி நடைப்பெற்றது.

பேட்டி

பேட்டி

இதில் பாஜக மாநில தலைவர் அண்ணாமலை திறந்து வைத்தார்... இதையடுத்து செய்தியாளர்களிடம் பேசியபோது அவர் சொன்னதாவது: "சமூகநீதி நாள் என ஒரு அரசு அவர்கள் சார்ந்த சித்தாந்தத்தின்படி கொண்டாடுவதில் தவறில்லை...ஆனால், எங்களை பொறுத்தவரை சமூகநீதியை பாஜகவில் தான் பார்க்கிறோம். செக்கிழுத்து எண்ணெய் தொழில் செய்த குடும்பத்தில் பிறந்த பிற்படுத்தப்பட்ட வகுப்பை சேர்ந்த மோடி பிரதமராக வந்திருக்கிறார்..

 திராவிட கட்சி

திராவிட கட்சி

திராவிட கட்சிகள் சமூகநீதி என பேசுவதை உண்மையாக பாஜக செய்கிறது.. மற்ற தலைவர்கள் பற்றி தவறாக பேசுவது பாஜக டிஎன்ஏவிலேயே அப்படி கிடையாது... ஆளுநர் என்பது அரசியலைமைப்பு சட்டத்தால் நியமிக்கப்பட்டது... 2017-ல் இருந்து பாதுகாப்பு சவாலாக இருந்த நாகாலாந்த் பகுதியில் தொடர்ந்து மத்திய அரசு பேச்சுவார்த்தை நடத்தியது.

 பேச்சுவார்த்தை

பேச்சுவார்த்தை

இதில் ஆர்என் ரவி சுமுகமாக பேச்சுவார்த்தை நடத்தி, அந்த நிலைமையை கட்டுக்குள் கொண்டு வந்தவர்... அதனால், அடுத்த முக்கிய மாநிலமான தமிழகத்திற்கு குடியரசு தலைவர் என்ஆர். ரவியை ஆளுநராக நியமித்திருக்கிறார். ஆனாலும், முதல்வர் ஸ்டாலின் சென்னை விமானநிலையத்தில் ஆளுநர் என்ஆர் ரவியை வரவேற்று இருப்பது ஆச்சரியமாக இருக்கிறது... எனவே, புதிய ஆளுநர் நியமனத்தில் எந்த உள்நோக்கமும் இல்லை...

 உள்ளாட்சி தேர்தல்

உள்ளாட்சி தேர்தல்

நடக்க இருக்கும் உள்ளாட்சி தேர்தலில் அதிமுக பாஜக கூட்டணி மாபெரும் வெற்றி பெறும்.. முக்கிய சட்ட மசோதாகளான ஆர்டிகல் 370, ராமர் கோவில், விவசாயிகள் மசோதா போன்ற சட்டங்கள் நிறைவேற்றும் போது அதிமுக பாஜகவிற்கு ஆதரவாக இருந்திருக்கிறது... இதற்கு பாஜக நன்றி கடன்பட்டுள்ளது.. அதிமுக பெரிய கட்சி அதிக சட்டமன்ற உறுப்பினர்களை கொண்ட கட்சி பாஜக விட்டு கொடுத்து போகவேண்டிய இடத்தில் விட்டு கொடுக்கும்... பாஜக வளர்ந்து கொண்டு இருக்கிறது. இளைஞர்கள் வருகிறார்கள்... களம் மாறிவிட்டது.. 2024 தேர்தலில் அது தெரியும்" என்றார்.

English summary
BJP State president Annamalai says about CM MK Stalin
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X