• search
சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In

30ஆயிரம் கொடுக்கனும்னு சொன்னீங்க? இப்போ என்ன 20ஆயிரம்? ஸ்டாலினுக்கு அண்ணாமலை கிடுக்கிப்பிடி

Google Oneindia Tamil News

சென்னை: மழை வெள்ளத்தால் விவசாயிகளுக்கு பயிர் சேத இழப்பீடாக, 2.45 ஏக்கர் அதாவது 1 ஹெக்டேருக்கு, 20 ஆயிரம் ரூபாய் வழங்கப்படும் என்ற முதல்வர் ஸ்டாலின் அறிவிப்புக்கு தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை நன்றி தெரிவித்துள்ளார்.. அத்துடன் இன்னொரு கோரிக்கையையும் மறக்காமல் விடுத்துள்ளார்.

சமீபத்தில் பெய்த வடகிழக்கு பருவ மழையால், கடுமையான பாதிப்பை தமிழகம் சந்தித்தது.. இதில் சென்னைதான் அதிகம் சிக்கி கொண்டது.. மேலும், டெல்டா மாவட்டங்களும் கன மழையால் பாதிக்கப்பட்டன.

இதனால் இளம் நெற்பயிர்கள் நீரில் மூழ்கியது, விவசாயிகளை கண்ணீரில் ஆழ்த்தியது.. எனவே, பயிர் சேதங்கள் குறித்து ஆய்வு செய்து, அரசுக்கு அறிக்கை சமர்பிக்க, கூட்டுறவுத்துறை அமைச்சர் பெரியசாமி தலைமையில், அமைச்சர்கள் குழுவை முதல்வர் ஸ்டாலின் நியமித்தார்.

5 கி.மீ.க்கு பறந்த கொடி ; பூரண கும்ப மரியாதை; அசத்திய செந்தில்நாதன்; அகமகிழ்ந்த அண்ணாமலை! 5 கி.மீ.க்கு பறந்த கொடி ; பூரண கும்ப மரியாதை; அசத்திய செந்தில்நாதன்; அகமகிழ்ந்த அண்ணாமலை!

டெல்டா

டெல்டா

அந்த குழுவில், அமைச்சர்கள் தங்கம் தென்னரசு, ரகுபதி, பெரியகருப்பன், சக்கரபாணி, மகேஷ், மெய்யநாதன் ஆகியோர் இடம் பெற்றனர். இந்த குழுவானது, கடந்த 12ம் தேதி தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை மாவட்டங்களில் ஆய்வு செய்தது.. நீரில் மூழ்கிய பயிர்களை பார்வையிட்டதுடன், விவசாயிகளின் கருத்துக்களையும் கேட்டறிந்தது.

அறிவிப்பு

அறிவிப்பு

பிறகு, பயிர் சேதங்கள் குறித்த அறிக்கையை முதல்வரிடம் தலைமைச் செயலகத்தில் நேற்று வழங்கியது.. இதையடுத்து, உடனடியாக முதல்வர் தலைமையில் ஆலோசனை கூட்டமும் நடந்தது... இந்த கூட்டத்தில், அமைச்சர்கள், தலைமைச் செயலர் மற்றும் உயர் அலுவலர்கள் பங்கேற்றனர்... ஆலோசனை கூட்டத்தில் பல்வேறு முக்கிய முடிவுகள் எடுக்கப்பட்டன.. அதில் ஒன்றுதான், அறுவடைக்கு தயாராக இருந்த குறுவை - கார் - சொர்ணவாரி பயிர்கள் முழுமையாக சேதமடைந்த இனங்களில், விவசாயிகளுக்கு இழப்பீடாக, 1 ஹெக்டேர், அதாவது, 2.45 ஏக்கருக்கு 20 ஆயிரம் ரூபாய் வழங்கப்படும் என்ற அறிவிப்பு ஆகும்.

 நன்றி ட்வீட்

நன்றி ட்வீட்

இதற்கு பல்வேறு தரப்பினர் முதல்வருக்கு நன்றி தெரிவித்திருந்தனர்.. அந்த வகையில், தமிழக பாஜக தலைவர் அண்ணாமலையும் நன்றி சொல்லி இதற்காகவே ஒரு ட்வீட்டையும் பதிவிட்டிருந்தார்.. அந்த ட்வீட்டில்," விவசாய நண்பர்களுக்கு ஒரு ஹெக்டேருக்கு 20 ஆயிரம் ரூபாய் நிவாரணம் அளித்து இருக்கும் நம்முடைய முதலமைச்சருக்கு நன்றி.. அதே சமயத்தில் அவர் எதிர்க்கட்சித் தலைவராக இருந்த போது, நிவர் புயல் சமயத்தில் கோரிய 30 ஆயிரம் ரூபாயை ஒரு ஹெக்டேருக்கு அளிக்க வேண்டும் என்று கேட்டுக் கொள்கின்றேன்!" என்று பதிவிட்டுள்ளார்.

  பெட்ரோல், டீசல் விலையை கண்டித்து தமிழகத்தில் 22இல் ஆர்ப்பாட்டம்.. பாஜக அண்ணாமலை பரபரப்பு அறிவிப்பு!
  நிவாரணம்

  நிவாரணம்

  இந்த ட்வீட்டுக்கு ஏராளமானோர் திரண்டு வந்து கமெண்ட்களை பதிவிட்டு வருகின்றனர்.. "முதலில் ஒன்றிய அரசு கிட்ட சொல்லி, விவசாயிங்க கிட்ட உக்காந்து பேசி அவங்களோட பல நாள் கோரிக்கைகளை நிவர்த்தி பண்ண சொல்லுங்க... உங்க கரிசனம் போலி தன்மையானது... பேரிடர்கால நிவாரணம் வச்சு அரசியல் செய்ய வேண்டாம்" என்றும், "டாலருக்கு நிகராக ரூபாயின் மதிப்பைதான் ஆட்சிக்கு வந்தால் ஒரு ரூபாயாக கொண்டு வருவேன் என மோடி சொன்னாரே.. அதை செய்யச் சொல்லுங்க அண்ணாமலை" என்றும் பல்வேறு தரப்பினர் தமிழக பாஜக தலைவருக்கு கோரிக்கை விடுத்து வருகின்றனர்.

  English summary
  BJP State President Annamalai thanked CM MK Stalin and tweeted about it
   
   
   
  உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
  Enable
  x
  Notification Settings X
  Time Settings
  Done
  Clear Notification X
  Do you want to clear all the notifications from your inbox?
  Settings X