சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

ரயில்வேயில் இந்தி திணிப்பு.. காலைல இருந்து வாய் திறக்கவில்லை.. சாவகாசமாக வந்து ட்வீட் போட்ட தமிழிசை

ரயில்வேயில் இந்தி திணிப்பு வாபஸ் பெறப்பட்ட பின்னர் தமிழிசை ட்வீட் போட்டுள்ளார்

Google Oneindia Tamil News

Recommended Video

    இந்தியை திணிக்கும் சுற்றறிக்கை வாபஸ்: தெற்கு ரயில்வே பணிந்தது!

    சென்னை: இந்தி கட்டாயம் என்று சொன்னதில் இருந்தே தமிழ்நாடே ரணகளமாயிட்டு இருந்தது.. அப்போவெல்லாம் வாய் திறக்காமல், 'வாபஸ்' என்றதும் சாவகாசமாக ட்வீட் போட்டு கருத்து சொல்லி உள்ளார் தமிழிசை சவுந்தராஜன்!

    இன்னைக்கு பொழுது விடிந்ததே சரியில்லை.. இந்தியில்தான் பேசணும் என்று ரயில்வேயின் அறிவிப்பு தமிழக மக்களை நிலைகுலைந்து போக வைத்துவிட்டது.

    BJP State President Tamilisai soundarajan says Hindi would not be imposed by any means

    மத்திய அரசின் அறிவிப்புகளுக்கு இப்படி கடிவாளமே இல்லாமல் போய்கொண்டிருக்கிறதே என்று மக்கள் தவிப்பில் இருந்தனர். அரசியல் தலைவர்கள் பொங்கி எழுந்துவிட்டனர். இணையதளமே கண்டனங்களால் சூடாக தகித்தது.

    பிறகு தமிழகத்தின் முற்றுகை, கண்டனம், எதிர்ப்பு என்பதை எல்லாம் பார்த்த மத்திய அரசு அந்த அறிவிப்பை வாபஸ் பெற்று கொண்டுவிட்டது. காலை முதல் கொதிப்பில் கிடந்த போதெல்லாம் தமிழக பாஜக தலைமை மவுனமாகவே இருந்தது. ஒரு பேச்சுமூச்சையும் காணோம்.

    வாபஸ் என்றதும் தமிழிசை சவுந்தராஜன் ஒரு ட்வீட் போட்டுள்ளார். அதில், "இன்று மத்திய இரயில்வே அமைச்சகத்தினை தொடர்புகொண்டு..தென்னக இரயில்வே சார்பில்.. வெளியிட்டுருப்பதாக... உள்ள அறிவிப்பு.. (ஹிந்தி அல்லது ஆங்கிலத்தில்தான்.. கருத்துகள் பரிமாற்றிக் கொள்ளவேண்டும்) என்ற அறிக்கையை திரும்பப் பெறவேண்டும்.. என வலியுறுத்தப்பட்டது.... எந்தவகையிலும்.. இந்தி திணிக்கப்படாது.." என்று பதிவிட்டுள்ளார்.

    இந்தியில்தான் பேச வேண்டும் என்றபோது, இதே தமிழிசை ஏன் கருத்து சொல்லவில்லை என்று தெரியவில்லை. விவகாரத்தை அறிந்து.. கொதிப்பு சூழல் அடங்கிய பிறகு.. கருத்து போட வேண்டிய அவசியமும் ஏன் என்று தெரியவில்லை.

    தயாநிதிமாறனையே முன்வைத்து இந்தி திணிப்பு உத்தரவு வாபஸ்- 'நச்' ஸ்கோர் செய்த ஸ்டாலின்! தயாநிதிமாறனையே முன்வைத்து இந்தி திணிப்பு உத்தரவு வாபஸ்- 'நச்' ஸ்கோர் செய்த ஸ்டாலின்!

    ஆனால் ஒன்றுமட்டும் தெரிகிறது... மாநில தலைமையை பரிசீலிக்காமலும், முக்கியமான விஷயத்தை தெரிவிக்காமலும்தான், இப்படிப்பட்ட அறிவிப்புகளை பாஜக தலைமை நடத்தி வருகிறது போலும்!

    English summary
    BJP State President Tamilisai Soundarajan tweet about Southern Railways Hindi Language announcement
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X