சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

கரும்பு.. இரும்பு.. வர வர எதுகை மோனையில் பின்னி எடுக்கிறாரே தமிழிசை!

மீ டூ விவகாரம் குறித்து பாஜக தலைவர் தமிழிசை சவுந்தராஜன் கருத்து தெரிவித்துள்ளார்.

Google Oneindia Tamil News

Recommended Video

    பெண்கள் கரும்பு அல்ல இரும்பு - தமிழிசை-வீடியோ

    சென்னை: பெண்கள் கரும்பு என்பதால் ஆண்கள் சுவைத்துப் பார்க்க நினைக்கக் கூடாது. பெண்கள் என்றுமே இரும்புத்தன்மையோடு இருக்க வேண்டும் என்றும் தமிழக பாஜக தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் தெரிவித்துள்ளார்.

    ஒரு சீரியஸான பிரச்சினையில் இப்படி கரும்பு, இரும்பு என்று தமிழிசை பேசியிருப்பது சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது. திருப்பூரில் நாடாளுமன்ற நிர்வாகிகள் கூட்டத்தில் பங்குபெற தமிழிசை செளந்தரராஜன் சென்னை வந்தார். அங்கு விமான நிலையத்தில் அவர் பேசியபோது கூறியதாவது:

    திமுக லேட்தான்

    திமுக லேட்தான்

    காங்கிரஸ் கட்சியுடன் யார் கூட்டணி வைத்தாலும் கூட்டணி மூழ்கிப்போகும். இனிவரும் எந்தத் தேர்தலிலும் காங்கிரஸ் தாக்கத்தை ஏற்படுத்தாது. எங்களைக் காட்டிலும் நாடாளுமன்ற பணிகளை திமுக தாமதமாகவே தொடங்கியுள்ளது.

    கட்சி முடிவு செய்யும்

    கட்சி முடிவு செய்யும்

    தமிழக பா.ஜ.க நாடாளுமன்றத் தேர்தலுக்கு ஆறு மாதம் முன்பாகவே பொறுப்பாளர்கள், அமைப்பாளர்களை நியமித்துவிட்டது. நரேந்திர மோடிதான் பிரதமராக வரவேண்டும் என மக்கள் விரும்புகிறார்கள். மீண்டும் அவர்தாம் வேட்பாளரா என்பதை கட்சிதான் முடிவு செய்யும்.

    இரும்பு - கரும்பு

    இரும்பு - கரும்பு

    மீ டூ பெண்களுக்கு புதிய நம்பிக்கையை கொடுத்துள்ளது. சினிமா துறையில் கமிட்டி அமைத்திருப்பது வரவேற்கத்தக்கது. எந்த ஒரு சிறு புகார் வந்தாலும் அதை விசாரிக்க வேண்டும். பெண்கள் கரும்பு என்பதால் சுவைத்துப் பார்க்க நினைக்கக் கூடாது. இரும்புத்தன்மையோடு இருக்க வேண்டும். எத்தனை வீ டூ, மீ டூ வந்தாலும் மீ டூ புகார்களை தீவிரமாக விசாரிக்க வேண்டும். இவ்வாறு தமிழிசை கூறினார்.

    வரவேற்கிறேன்

    வரவேற்கிறேன்

    சபரிமலை விவகாரத்தில் ரஜினிகாந்த் கூறிய கருத்தை பற்றி கேட்டதற்கு, "ரஜினி தீர்ப்பை வரவேற்றிருந்தாலும் தீர்வையும் சொல்லி இருக்கிறார். ஐதீகத்தை மாற்ற நினைக்கக் கூடாது என அவர் கூறியதை நான் வரவேற்கிறேன்" என்று தமிழிசை பதிலளித்தார்.

    English summary
    BJP State President Tamilisai Soundararajan speak about Mee Too BJP State President Tamilisai Soundararajan speak about Mee Too
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X