சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

காலித்தனம் செய்வது தான் ஜனநாயகமா?.. தமிழிசை சவுந்தரராஜன் ட்வீட்

Google Oneindia Tamil News

Recommended Video

    மத உணர்வைத் தூண்டும் காங்கிரஸ் - தமிழிசை சௌந்தர்ராஜன் குற்றச்சாட்டு!

    சென்னை: சமூக ஆர்வலர் என்ற பெயரில் பியூஷ்மானுஸ் சேலம் பாஜக அலுவலகத்திற்குள் அனுமதியின்றி நுழைந்து கலாட்டாவில் ஈடுபட்டதாக தமிழக பாஜக தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் குற்றஞ்சாட்டியிருக்கிறார்.

     bjp state president tamilisai soundarrajan reaction to stalin tweet

    இது தொடர்பாக அவர் தனது ட்வீட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில்,

    அடுத்த கட்சி அலுவலகத்திற்குள் நுழைந்து கலாட்டா காலித்தனம் செய்வது தான் ஜனநாயகமா? என வினவியுள்ளார். மேலும், இது சமூக செயல்பாடா? இல்லை சமூக அமைதி சீர்குலைப்பா ?எனவும் கேட்டுள்ளார். சமூக ஆர்வலர் என்ற போர்வையில் வீண் விளம்பரம் தேட முயற்சிக்கும் அர்பன் நக்சலைட்களை அடையாளம் காட்டுவோம் எனவும் தமிழிசை கூறியிருக்கிறார்.

    அண்ணா அறிவாலயத்தில் ஒருவர் அத்துமீறி நுழைந்து கலாட்டாவில் ஈடுபட்டால் அந்தக் கட்சி அதை அனுமதிக்குமா என கேள்வி எழுப்பியுள்ளதோடு, அன்று யாரோ, எங்கேயோ பேசியதற்காக தமிழக பாஜக தலைமை அலுவலகத்தில் தொண்டர்களை தாக்கியது திமுக என்பது கடந்த கால வரலாறு என சாடியிருக்கிறார்.

    பியூஷ்மானுஸ் மீதான தாக்குதல் சம்பவத்துக்கு திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் உள்ளிட்ட தலைவர்கள் கண்டனம் தெரிவித்துள்ள நிலையில் தமிழிசை ட்வீட்டர் மூலம் தனது கருத்தை வெளிப்படுத்தியுள்ளார்.

    English summary
    bjp state president tamilisai soundarrajan reaction to stalin tweet
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X