சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

இது வெற்றிகரமான தோல்விங்க.. துவள மாட்டோங்க.. தமிழிசை தடாலடி

5 மாநில தேர்தல் முடிவுகள் குறித்து தமிழிசை கருத்து கூறியுள்ளார்.

Google Oneindia Tamil News

Recommended Video

    இது வெற்றிகரமான தோல்விங்க.. தமிழிசை தடாலடி..

    சென்னை: எந்த தோல்வியும் எங்களை துவளச்செய்யாது என்றும் தோல்விகள் யுத்த காலத்தில் எங்களைக் கவ்விக் கொண்டாலும் லோக்சபா தேர்தலில் வெல்வோம் என்றும் தமிழிசை சவுந்தராஜன் தெரிவித்துள்ளார்.

    5 மாநில தேர்தல் முடிவுகள் வெளியாகி கொண்டிருக்கின்றன. இதில் பெரும்பாலான இடங்களில் பாஜக தோல்வியைதான் சந்தித்துள்ளது. மற்றொரு பக்கம் காங்கிரஸ் கொண்டாட்டத்தில் இறங்கி விட்டது.

    இந்நிலையில், பாரதியார் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செய்ய வந்த தமிழக பாஜக தலைவர் தமிழிசை சவுந்தராஜனிடம் தேர்தல் முடிவு குறித்து கருத்து கேட்கப்பட்டது. அப்போது அவர் சொன்னதாவது:

    அச்சமில்லை..

    அச்சமில்லை..

    இது ஒரு வெற்றிகரமான தோல்வி ஆகும். நாங்கள் வெற்றியால் துள்ளிக் குதிப்பதும் இல்லை, தோல்வி கண்டு துவண்டு போவதும் இல்லை. இதற்கு பாரதியாரின் அச்சமில்லை அச்சமில்லை என்ற கருத்தையே பதிவு செய்ய விரும்புகிறேன்.

    அனைவருக்கும் நன்றி

    அனைவருக்கும் நன்றி

    தோல்விகள் யுத்த காலத்தில் எங்களைக் கவ்விக் கொண்டாலும் லோக்சபா தேர்தலில் வெல்வோம். இந்த ஐந்து மாநிலத் தேர்தல் எந்த வகையிலும் எங்களுக்குத் தோல்வியே அல்ல. அதேபோல, 5 மாநில தேர்தலுக்காக கடுமையாக உழைத்த அனைவருக்கும் நன்றி சொல்லி கொள்கிறேன்.

    வெற்றிகரமான தோல்வி

    வெற்றிகரமான தோல்வி

    ராஜஸ்தானிலும், ம.பியிலும் கழுத்துக்கு கழுத்து நிலைதான் உள்ளது. எனினும் இந்த தோல்வியை நான் வெற்றிகரமான தோல்வியாகவே கருதுகிறேன். ஆனால் அதேபோல, சட்டிஸ்கர் தோல்வியை நான் ஒப்புக் கொள்கிறேன்.

    குற்றம் சாட்டினர்

    குற்றம் சாட்டினர்

    எப்படி பார்த்தாலும் கூட்டணியால்தான் வெற்றி என்று காங்கிரஸ் கூறி வந்தது பொய் என்பதை தெலுங்கானா கூறியுள்ளது. அதேபோல,பாஜக வெற்றி பெற்றால் இயந்திரங்கள் வேலை செய்யவில்லை என்று எதிர்கட்சிகள் குற்றம் சாட்டினார்கள்.

    மன்னிப்பு கேட்க வேண்டும்

    மன்னிப்பு கேட்க வேண்டும்

    இப்போது அவர்கள் வெற்றியடைந்துள்ளனர். இப்போது அவர்கள் சொன்ன குற்றச்சாட்டிற்கு என்ன பதில் சொல்லப்போகிறார்கள். அதனால் வாக்குப் பதிவு இயந்திரத்தில் மோசடி என்று கூறி வந்த காங்கிரஸ் மன்னிப்பு கேட்க வேண்டும்.

    மோடி அலை

    மோடி அலை

    தேர்தலுக்கு முந்தைய கருத்துக்கணிப்பில் 5 மாநில மக்களும் காங்கிரஸ் கட்சிதான் வெற்றிபெறும் என்று சொன்னாலும், பிரதமராக மோடிதான் இருக்க வேண்டும் என்று தெரிவித்துள்ளனர். அதனால் என்றைக்குமே மோடி அலை ஓயாது" என்றார்.

    English summary
    Five State Elections Counting Today. But BJP State President Tamizhisai Soundarajan Says that, 5 state election result will not affect BJP
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X