சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

நான் அப்படி செய்வேனா.. என்னைப் போய் இப்படி சொல்றாங்களே... ஷாக் ஆன ரஜினி!

Google Oneindia Tamil News

Recommended Video

    Rajini worries on his bjp branding

    சென்னை: பாஜக ஆதரவாளனாக தொடர்பு படுத்தி வெளியாகும் செய்திகளால் ரஜினி வேதனை அடைந்திருப்பதாகவும் இது தொடர்பாக தனது ஆதரவாளர்களிடம் அவர் பாஜக ஆதரவாளர் என்ற முத்திரை குத்தப்படுவதை நினைத்து மன்ற நிர்வாகிகளிடம் வருத்தப்பட்டதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.

    1996ம் ஆண்டில் தொடங்கி சுமார் 21 ஆண்டுகள் ரஜினி அரசியலுக்கு இப்போது வருவார் அப்போது வருவார் என பரபரப்பாக ஊடகங்கள் பேசிக்கொண்டே இருந்தன. ஆனால் ரஜினி ஒருமுறைகூட வருவேன் என்பதை உறுதியாக சொல்லவில்லை. ஆனால் வரவே மாட்டேன் என்பது குறித்தும் ரஜினி எந்த கருத்தையும் வெளியிட்டதில்லை.

    இந்நிலையில் கடந்த 2017ம் ஆண்டு அரசியலுக்கு வருவது உறுதி கட்சி ஆரம்பிப்பேன் என்று அதிகாரப்பூர்வமாக அறிவித்தார். அதன்பிறகு நடிகர் ரஜினிகாந்த், ரசிகர் மன்றங்களை மக்கள் மன்றங்களாக மாற்றினார். கட்சி தொடங்குவது குறித்து விரைவில் அறிவிப்பு வெளியாகும் என்றும் சட்டசபை தேர்தலை சந்திப்பேன் என்று அப்போது அறிவித்தார்.

    ரஜினி வியூகம்

    ரஜினி வியூகம்

    ஆனால் ரஜினி அரசியல் வருகை குறித்து சொல்லிவிட்டு மீண்டும் நடிப்பில் பிஸியானார். இதனால் லோக்சபா தேர்தல் நேரத்தில் ரஜினி அரசியலுக்கு வருவாரா என்று ரசிகர்கள் ஆர்வத்துடன் காத்திருந்தனர். ஆனால் ரஜினி கட்சி ஆரம்பிக்கவில்லை. . ஆனால் அவர் சொன்னது போலவே சட்டசபை தேர்தலை நோக்கி பயணித்து வருகிறார். அதற்காக அவ்வப்போது மக்கள் மன்ற நிர்வாகிகளை சந்தித்து புதிய கட்சி வியூகம் குறித்தும், நிகழ்கால அரசியல் குறித்தும் ஆலோசனை நடத்தி வருகிறார்..

    கட்டுனா சிந்துவைத்தான் கட்டுவேன்.. கட்டுனா சிந்துவைத்தான் கட்டுவேன்.. "மலை"யிலிருந்து இறங்க மறுக்கும்... 75 வயசு "சாமி"!

    ரஜினி ஆலோசனை

    ரஜினி ஆலோசனை

    இந்த நிலையில் தர்பார் படப்பிடிப்பு முடிந்து ஓய்வில் இருக்கும் ரஜினிகாந்த், தனது வீட்டில் மக்கள் மன்ற நிர்வாகிகளை சந்தித்து ஆலோசனை நடத்தியதாக கூறப்பபடுகிறது. இது தொடர்பாக நாளிதழ் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது, அந்த செய்தியில் ரஜினி மன்ற நிர்வாகிகளுடன் ஆலோசனை நடத்திய போது பல முக்கிய விஷயங்கள் பேசினாராம்.

    மாநாடு எங்கே

    மாநாடு எங்கே

    தமிழகம் முழுவதும் குடிநீர் பற்றாக்குறை ஏற்பட்டபோது மக்கள் மன்றத்தின் பணிகள் குறித்து ரஜினிகாந்த் கேட்டறிந்ததாகவும். அடுத்த ஆண்டு இயக்கம் சார்பில் மாநாடு நடத்துவதற்கான பணிகள் குறித்து ரஜினி ஆலோசித்தாராம். அதற்கான இடம் குறித்தும் ஆலோசனை நடத்தினாராம்.

    ரஜினி வருத்தம்

    ரஜினி வருத்தம்

    மேலும் பாஜகவுடன் தன்னை தொடர்புபடுத்தி வெளியாகும் செய்திகளால் தன் மீது பாஜக ஆதரவாளர் என்ற முத்திரை குத்தப்படுவதாகவும் ஆன்மிகப்பாதையில் பயணிப்பேன் என்பதால் சிறுபான்மையினரிடம் இருந்து தன்னை விலக்கி வைக்க சிலர் முயற்சிப்பதாகவும் ரஜினிகாந்த் வருத்தப்பபட்டாராம்.

    பின்வாங்கப்போவதில்லை

    பின்வாங்கப்போவதில்லை

    மன்ற நிர்வாகிகளிடம் பேசிய ரஜினிகாந்த், தனிக்கட்சி தொடங்கும் முடிவில் இருந்து தான் பின்வாங்கப்போவதில்லை என்று கூறினாராம் இந்த தகவலை அந்த செய்தி நிறுவனம் கூறியுள்ளது.

    English summary
    rajini worry about the BJP supporter branding at his fans meeting
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X