சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

யூ டியூபர் கிஷோர் கே சுவாமி அதிரடி கைது.. அவதூறு பேச்சுக்காக 3 பிரிவுகளில் பாய்ந்த வழக்குகள்

Google Oneindia Tamil News

சென்னை: முன்னாள் முதல்வர்கள், அண்ணா, கருணாநிதி குறித்து அவதூறு கருத்து பதிவிட்ட யூ டியூப்பர் கிஷோர் கே சுவாமி கைது கைது செய்யப்பட்டுள்ளார்.

Recommended Video

    முன்னாள் முதல்வர்கள் குறித்து அவதூறு பேச்சு.. பாஜக ஆதரவாளர் Kishore K Swamy அதிரடி கைது

    காஞ்சிபுரம் வடக்கு மாவட்ட திமுக ஐடி விங் அளித்த புகாரின்பேரில் கிஷோர் கே சுவாமி கைது செய்யப்பட்டுள்ளார்.

    பெண் பத்திரிக்கையாளர்கள் குறித்து அவதூறு கருத்து பதிவு செய்ததாகவும் கிஷோர் கே சுவாமி மீது வழக்கு உள்ளது. அதில் 2 வருடங்கள் முன்பு அதிமுக ஆட்சியில் இவர் கைது செய்யப்பட்டிருந்தார். ஆனால் ஜாமீன் பெற்று வெளியே வந்தார்.

    சுப்பிரமணியன் சுவாமி குறித்து நிருபர்கள் கேள்வி.. அமைச்சர் அன்பில் மகேஷின் நச் பதில் இதுதான்! சுப்பிரமணியன் சுவாமி குறித்து நிருபர்கள் கேள்வி.. அமைச்சர் அன்பில் மகேஷின் நச் பதில் இதுதான்!

    விமர்சனங்கள்

    விமர்சனங்கள்

    இருப்பினும் @sansbarrier என்ற இவரது டுவிட்டர் கணக்கு மூலமாக தொடர்ந்து சர்ச்சை கருத்துக்களை கூறி வந்தார். வலதுசாரி எண்ணம் கொண்டவர் இவர். எனவே, திமுக தலைவர்களை மிக மோசமாக விமர்சனம் செய்து வந்தது வாடிக்கையாக இருந்தது.

    காஞ்சிபுரம் வடக்கு ஐடி விங்

    காஞ்சிபுரம் வடக்கு ஐடி விங்

    இந்த நிலையில்தான், முன்னாள் முதல்வர்கள், அறிஞர் அண்ணா, கருணாநிதி, தற்போதைய முதல்வர் ஸ்டாலின் ஆகியோர் குறித்து அவதூறு கருத்துக்களை சமூக வலைத்தளங்களில் கிஷோர் பரப்பியதாக காஞ்சிபுரம் வடக்கு திமுக ஐடி விங் சார்பில் போலீசில் புகார் அளிக்கப்பட்டது. திமுகவின் காஞ்சிபுரம் வடக்கு மாவட்ட ஐ.டி விங் பிரிவு ஒருங்கிணைப்பாளர் ரவிச்சந்திரன் கடந்த 10ம் தேதி இந்த புகாரை வழங்கியிருந்தார். தமிழக முன்னாள் முதல்வர்கள் அண்ணா, கருணாநிதி உள்ளிட்டோர் குறித்தும், தற்போதைய தமிழக முதல்வர் ஸ்டாலின் குறித்தும் ஃபேஸ்புக், ட்விட்டர் போன்ற சமூக வலைத்தளங்களில் அரசியல் விமர்சகர் என்ற போர்வையில் தொடர்ந்து அவதூறு கருத்துக்களைப் பதிவிட்டு வருவதால், கிஷோர் சுவாமி மீது சட்டரீதியான நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்று அவர் கோரியிருந்தார்.

    நீதிமன்றக் காவல்

    நீதிமன்றக் காவல்

    இந்த புகாரின் பேரில் கிஷோர் சுவாமி சங்கர் நகர் போலீசாரால் இன்று காலை கைது செய்யப்பட்டுள்ளார். இதையடுத்து, தாம்பரம் நீதிமன்ற நீதிபதி முன்பு ஆஜர்படுத்தப்பட்ட அவருக்கு 28ம் தேதி வரை நீதிமன்றக் காவல் விதித்துள்ளார் நீதிபதி. இதையடுத்து கிஷோர் சாமி, சைதாப்பேட்டை கிளைச் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.

    3 பிரிவுகளில் வழக்கு

    3 பிரிவுகளில் வழக்கு

    கிஷோர் கே சுவாமி மீது போலீசார் 3 பிரிவுகளின்கீழ் வழக்குப் பதிவு செய்துள்ளனர். 153 பிரிவின்கீழ் கலகத்தை விளைவிக்கும் உட்கருத்தோடு செயல்படுதல், 505(1)( b) பிரிவின்கீழ், அரசுக்கு எதிராக அல்லது பொது அமைதிக்கு எதிராக குற்றத்தைச் செய்யத் தூண்டுதல், செக்ஷன் 505( 1) (c) படி ஒரு சமூகத்தை வேறு சமூகத்துக்கு எதிராகக் குற்றம் செய்யத் தூண்டுதல் என மொத்தம் 3 பிரிவுகள் கிஷோர் கே சுவாமி மீது பாய்ந்துள்ளது.

    English summary
    Kishore K Swamy arrested for his defame tweets on former CMs of Tamil Nadu Anna, Karunanidhi.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X