சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

தலை இல்லாததால் வால் ஆடுது.. ஆமா.. யாரை சொல்கிறார் எஸ்.வி.சேகர்.. பாஜகவினர் டென்ஷன்

தலையில்லாமல் வால் ஆடுகின்றன என்று எஸ்வி சேகர் விமர்சித்துள்ளார்

Google Oneindia Tamil News

Recommended Video

    தளபதி விஜய்... ரசிகர்களும்... ரெய்டும்

    சென்னை: விஜய் விஷயத்தால் பாஜகவுக்குள்ளேயே சலசலப்புகள் வெடித்துள்ளன போலும். இந்த லிஸ்ட்டில் லேட்டஸ்டாக நுழைந்திருப்பவர் எஸ்வி சேகர்... "தலை இல்லாததால் வால்கள் ஆடுகின்றன" என்று சொல்லி விஜய்க்கு எதிராக போராட்டம் நடத்திய பாஜகவினரை விமர்சித்துள்ளார் எஸ்.வி.சேகர்.

    மாஸ்டர் பட ஷூட்டிங் நெய்வேலி என்எல்சி 2 வது சுரங்கத்தில் நடந்து வருகிறது.. கடந்த 2 நாட்களாக விஜய் ரெய்டு நடந்ததும், முன்னதாக ஷூட்டிங் ஸ்பாட்டில் இருந்து அவரை விசாரிக்க அழைத்து சென்றதும் பெரிய அதிர்வலையை உண்டுபண்ணி.. இன்னமும் அதன் தாக்கம் குறையாமல் உள்ளது.

    இதற்கு காரணம் பாஜக தரப்பில் இருந்து இந்த விவகாரத்தை சூடு குறையாமல் அனல் கிளப்பி வருவதுதான். மூத்த தலைவர் சுப்பிரமணிய சாமி துவங்கி எச்.ராஜா, அர்ஜுன் சம்பத் வரை இதை கிண்டி விட்டு வரும் நிலையில், எஸ்வி சேகரும் களம் புகுந்துள்ளார்.

     எங்க எங்க "மாஸ்டர்" வரட்டும்.. இருக்கு கச்சேரி.. உற்சாகத்தில் விஜய் ரசிகர்கள்.. !

    ஆர்ப்பாட்டம்

    ஆர்ப்பாட்டம்

    நெய்வேலி என்எல்சியில் ஷூட்டிங் நடத்த ஏன் அனுமதி தந்தீர்கள் என்று பாஜகவினர் சுரங்கத்தை முற்றுகையிட்டு ஆர்ப்பாட்டத்தில் நேற்றிரவு ஈடுபட்டனர்... இந்த பாஜகவினர் போராட்டம் குறித்தும், விஜய் வீட்டில் நடந்த ரெய்டு குறித்தும் தனது ட்விட்டர் பக்கத்தில் நடிகரும், அரசியல்வாதியுமான எஸ்வி சேகர் ஒரு ட்வீட் போட்டுள்ளார்.. வழக்கமான சர்ச்சை ட்வீட்தான்.. "இந்த போராட்டம் தவறானது. Income tax நடைமுறை வழக்கமானது. அதை ஆதரித்து கட்சி ரீதியான போராட்டம் நம் மதிப்பை குறைக்கும்" என்கிறார்.

    தலைவர் பதவி

    தலைவர் பதவி

    முன்னதாக, "தமிழக பாஜகவிற்கு இன்னும் தலைவர் நியமிக்கப்படாதது குறித்து பேசுவது போல் தலை இல்லாததால் வால்கள் ஆடுகின்றன" என்று எஸ்வி சேகர் குறிப்பிட்டிருந்தார்.. பாஜகவின் எஸ்வி சேகரே தலைமைக்கு எதிராக இப்படி ஒரு கருத்தை சொன்னதால் சோஷியல் மீடியாவில் பாஜகவினர் எதிர்ப்பு தெரிவிக்க ஆரம்பித்தனர்.. இதையடுத்து உடனே அந்த பதிவை நீக்கி உள்ளதாக தெரிகிறது.. "தலை இல்லாததால் வால்கள் ஆடுகின்றன" என்று மட்டும் எஸ்வி சேகர் பதிவிட்டார்.

    பிரதமர் மோடி

    பிரதமர் மோடி

    எஸ்.வி சேகரை பொறுத்தவரை, பிரதமர் மோடி மீது அதிக பாசமும், வெறித்தனமான பக்தியையும் வைத்திருப்பவர் பாஜகவிற்கு வந்ததே மோடிக்காகத்தான் என்று இவர் சொல்வார். அதனால்தான் அன்று வாரணாசிக்கு சென்று பிரச்சாரத்தில்கூட ஈடுபட்டுவிட்டு வந்தார். மோடிக்கும் எஸ்.வி.சேகர் மீது எப்பவுமே ஒரு பிடிப்பு உள்ளது என்பதை அவரை கைது செய்யாமல் விட்டபோதே அன்றே தமிழக மக்களுக்கு தெளிவாக தெரிந்து விட்டது.

    விஜய்

    விஜய்

    பலநாள் "தலைமறைவாக" சுற்றி திரிந்த எஸ்வி சேகருக்கு, தமிழக பாஜக தலைவராக பதவி வகிக்க வேண்டும் என்பது நீண்ட நாள் கனவு.. சென்ற ஆண்டு செய்தியாளர்களிடம் இவர் ஒருமுறை பேசும்போது, "தமிழகத்தில் பாஜகவின் தற்போதைய ஓட்டு வங்கியை தன்னால் அதிகமாக்கி காட்ட முடியும்" என்று சவால் விட்டார்.. தமிழக பாஜக தலைவரை நேரில் சந்திக்கக்கூட முடியவில்லை என்று தமிழிசையை பகிரங்கமாக சாடினார்.. இதற்கெல்லாம் காரணம் எப்படியாவது தமிழக பாஜக பொறுப்பை தனக்கு தூக்கி தந்துவிட மாட்டார்களா என்ற ஆதங்கம்தான்.. அதைதான் இப்போது விஜய்க்கு எதிராக பதிவிட்ட ட்வீட்டிலும் கொட்டி இருந்தார்.

    மறைமுக விமர்சனம்

    மறைமுக விமர்சனம்

    இதே எஸ்விசேகர் கடந்த 2017-ல் விஜய்க்கு பிறந்த நாள் வாழ்த்து சொல்லி இருந்தார். அதில், விஜய்யும் அரசியலுக்கு வரக்கூடிய சூழல் இருக்கிறது. அது எப்போ என்பதை விஜய் தான் முடிவு செய்ய வேண்டும். எந்த நல்லவர்கள் வந்தாலும் என்னுடைய ஆதரவு அவர்களுக்கு உண்டு. வருங்கால முதல்வர் விஜய்க்கு என்னுடைய வாழ்த்துக்களை நான் தற்போதே தெரிவித்துக் கொள்கிறேன் என்றார்.. அந்த எஸ்விசேகர் தான் இன்று விஜய்க்கு ஆதரவாக பாஜகவினரை விமர்சித்துள்ளார்.. மறைமுகமாக!

    English summary
    bjp sve sekhar criticized own party and vijays fans
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X