• search
சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  

முஸ்லீம் பெண்ணுக்கு அரிசி வழங்கிய எஸ்.வி.சேகர்.. குவியும் பாராட்டு.. கூடவே விமர்சனங்களும்!

Google Oneindia Tamil News

சென்னை: முஸ்லீம் பெண்ணுக்கு அரிசி பையை எஸ்வி சேகர் வழங்கி உள்ளார்.. ரமலான் பண்டிகையை முன்னிட்டு இந்த உதவியை செய்த எஸ்வி சேகருக்கு பாராட்டுக்கள் குவிந்து வருகின்றன.. அதேசமயம், "இந்த நாடகத்துக்கு என்ன பேர் சேகர்?" என்றும் பலர் கேள்வி எழுப்பி வருகின்றனர்.

இந்தியாவில் தொற்று பரவவுவதற்கு காரணமே இஸ்லாமியர்கள்தான் என்றும் அதற்கு டெல்லி மாநாடுதான் என்று ஒரு குரூப் விடாமல் பேசிக் கொண்டிருந்தது. இது பெரும் சர்ச்யையைக் கிளப்பியது. மத ரீதியான சர்ச்சைகளும் எழுந்தன.. இது அத்தனையும் சில தினங்களுக்கு முன்பு நொறுங்கிவிட்டது..

ஆமாம், டெல்லி மாநாட்டுக்கு சென்று வந்தோம்.. இதோ குணமடைந்துவிட்டோம்.. எங்கள் பிளாஸ்மாவை தர முன்வந்துள்ளோம்.. அதனை பெற்று கொண்டு கொரோனா பாதிக்கப்பட்டவர்களை மீட்டெடுக்க வேண்டும் என வீடியோ மூலம் இஸ்லாமியர்கள் அடுத்தடுத்து அறிவித்து ஒட்டுமொத்த இந்தியாவையும் நெகிழ வைத்து விட்டனர்.

கொரோனா

கொரோனா

இதை பாஜகவே எதிர்பார்க்கவில்லை. இந்த செயலை அவர்களில் சிலர் வரவேற்று கருத்து தெரிவித்தனர்.. குறிப்பாக எஸ்வி சேகர் இதை பற்றி ஒருட்வீட் போட்டிருந்தார்.. "கொடிய கொரோனா தொற்றில் இருந்து மீள்வதற்கு பல்வேறு சிகிச்சைகளை அரசுகள் மேற்கொண்டு வரும் நிலையில், பிளாஸ்மா ரத்த தானம் செய்ய முன் வந்திருக்கும் இஸ்லாமிய மக்களை பாராட்டி, நன்றிகள் சொல்ல நாம் கடமைப்பட்டுள்ளோம்.. இதுவே மத ஒற்றுமை" என்று பதிவிட்டிருந்தார்.

ஆச்சரியம்

ஆச்சரியம்

எஸ்வி சேகரின் பல கருத்துகள் இஸ்லாமியர்களுக்கு எதிராக இருந்து வந்த நிலையில் இந்த ட்வீட் பலரால் திரும்பி பார்க்கப்பட்டது.. இந்த நிலையில் இஸ்லாமியர்களுக்கு ஆதரவாக இன்னொரு ட்வீட்டை போட்டு பலரை ஆச்சரியத்தில் மூழ்கடித்து உள்ளார். அந்த ட்வீட்டில் எஸ்வி சேகர் முஸ்லீம் பெண் ஒருவருக்கு நோன்பு கஞ்சி தயாரிக்க அரிசி பையை வழங்குகிறார்.."இன்று ரமலான் நோன்பு முதல் நாள் என்றும் அதில் தெரிவித்திருந்தார்.

கோயில்

கோயில்

பதிவிட்டு 2 நாள் ஆனாலும் இந்த ட்விட்டினை பலரும் ஷேர் செய்து வருகின்றனர். இதற்கு இரு விதமான கருத்துக்கள் எழுந்து வருகின்றன. "எம்மதமும் சம்மதம் என வாழும் நீர் ஒரு உண்மை இந்தியன்" என்றும், இந்த மாதிரி எல்லா நாளும் நடந்துகிட்டா நல்லது ஐயா வாழ்த்துக்கள் என்றும், "கோயிலில் செய்யாட்டாலும் அவரவர் சொந்தமாக செய்து கொண்டுதான் இருக்கிறார்கள்" என்றும் பாராட்டி வருகின்றனர்.

ஆச்சரியங்கள்

ஆச்சரியங்கள்

ஆனாலும் பெரும்பாலோனார் வழக்கம்போலவே விமர்சனங்களை முன்வைக்க தவறவில்லை.. "என்ன சேகரு...சூட்டிங்லாம் ஆரம்பிச்சாச்சா? படம் பேரென்னப்பா? என்றும், இந்த நாடகத்துக்கு என்ன பேர் சேகர்?" என்றும் கேள்விகளை எழுப்பி வருகின்றனர். எனினும் சில தினங்களாகவே ஆச்சரியங்களை தந்து வருகிறார் எஸ்வி சேகர் என்று பேசப்பட்டு வருகிறது.

English summary
bjp sve shekhar provide rice for fasting porridge and tweeted on it
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X