சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

நீட் நடக்கும்.. சேலம் 8 வழி சாலையை கண்டிப்பாக போடுவோம்.. தமிழக பிரச்சனைகளில் கைவிரிக்கும் பாஜக!

நீட் மற்றும் சேலம் 8 வழி சாலை திட்டம் இரண்டிலும் தமிழக மக்களின் கோரிக்கைக்கு எதிரான நிலைப்பாட்டை பாஜக கட்சி எடுத்து இருக்கிறது.

Google Oneindia Tamil News

Recommended Video

    சேலம் - சென்னை 8 வழிச்சாலை நிச்சயம் வரும் - மத்திய அமைச்சர் நிதின் கட்கரி

    சென்னை: நீட் மற்றும் சேலம் 8 வழி சாலை திட்டம் இரண்டிலும் தமிழக மக்களின் கோரிக்கைக்கு எதிரான நிலைப்பாட்டை பாஜக கட்சி எடுத்து இருக்கிறது.

    நீட் தேர்வும், சேலம் 8 வழி சாலை விவகாரமும் தமிழகத்தின் மிக முக்கிய பிரச்சனையாக உள்ளது. இதில் சென்ற வாரம்தான் சேலம் 8 வழி சாலை வழக்கில் தீர்ப்பு வந்தது. பெரும் எதிர்ப்பார்ப்பிற்கு இடையில் வந்த இந்த தீர்ப்பில், சேலம் 8 வழி சாலைக்கு நிலம் கையகப்படுத்தியது செல்லாது என்று சென்னை ஹைகோர்ட் கூறி உள்ளது.

    அதேபோல் நீட் தேர்விற்கு எதிராக காங்கிரஸ், திமுக இரண்டும் ஒரே மாதிரியான நிலைப்பாட்டை எடுத்து உள்ளது. ஆனால் பாஜக மட்டும் இரண்டிலும் எதிரான நிலைப்பாட்டை எடுத்துள்ளது.

    நீட் தேர்வு

    நீட் தேர்வு

    நீட் தேர்வு குறித்து பாஜக அமைச்சர் பியூஷ் கோயல் தனது பேட்டியில், தமிழகத்தில் உள்ள பெரும்பாலான அரசியல் கட்சிகள் நீட் தேர்வு தேவையில்லை என்று கூறி வருகிறது. ஆனால் நீட் தேர்வு தேவையில்லை என அதிமுக கூறவில்லை. அதிமுக நீட் தேர்வை எதிர்க்கவில்லை. அதிமுக நீட் தேர்வை எதிர்த்தால் அவர்களை நாங்கள் சமாதானம் செய்வோம். அதிமுக எதிர்க்கும் பட்சத்தில் அவர்களிடம் நாங்கள் பேசுவோம், என்று குறிப்பிட்டு இருக்கிறார்.

    சேலம் எட்டு வழி

    சேலம் எட்டு வழி

    இந்த நிலையில் சேலம் எட்டு வழி சாலை திட்டம் குறித்து பேசிய பாஜக அமைச்சர் நிதின் கட்கரி, சேலம் 8 வழி சாலை திட்டம் கண்டிப்பாக நிறைவேற்றப்படும். நீதிமன்ற தீர்ப்பு வந்தாலும், மக்களிடம் திட்டம் குறித்து பேசுவோம். மக்களிடம் பேசி திட்டத்தை கண்டிப்பாக செயல்படுத்துவோம். விவசாயிகளுக்கு போதிய இழப்பீடு கண்டிப்பாக வழங்கப்படும், என்று கூறியுள்ளார்.

    சேலம் 8 வழிச்சாலை திட்டம் கண்டிப்பாக நிறைவேற்றப்படும்.. நிதின் கட்கரி பரபரப்பு பேச்சு! சேலம் 8 வழிச்சாலை திட்டம் கண்டிப்பாக நிறைவேற்றப்படும்.. நிதின் கட்கரி பரபரப்பு பேச்சு!

    இரண்டிலும் அப்படி

    இரண்டிலும் அப்படி

    இதில் சேலம் சாலை திட்டம் அதிமுகவின் கனவு திட்டம். இதில் பாஜக, அதிமுக இரண்டின் நிலைப்பாடும் ஒரே மாதிரிதான் இருக்கிறது. ஆனால் நீட் தேர்வு விவகாரத்தில், அதிமுகவின் நீட் தேர்வை ரத்து செய்ய வலியுறுத்துவோம் என்று கோரிக்கையை பாஜக கண்டுகொள்ளவில்லை. அதை பாஜக ஒரு பொருட்டாக கூட மதிக்கவில்லை என்றுதான் கூற வேண்டும்.

    மிக மோசம்

    மிக மோசம்

    நீட் மற்றும் 8 வழி சாலை திட்டம் இரண்டும் தமிழகத்தில் பெரிய பிரச்சனைகளை சந்தித்தது. ஆனால் இரண்டிலும் பாஜக தமிழக மக்களுக்கு எதிரான நிலைப்பாட்டை எடுத்து இருக்கிறது. எதிரான நிலைப்பாட்டை எடுத்ததோடு மட்டுமில்லாமல், கண்டிப்பாக இதை நிறைவேற்றியே தீருவோம் என்பதிலும் உறுதியாக இருக்கிறது. சேலம் 8 வழி சாலை திட்டத்தை நிறைவேற்றியே தீருவோம் என்பதிலும் பாஜக உறுதியாக உள்ளது.

    மக்கள் அதிர்ச்சி

    மக்கள் அதிர்ச்சி

    தமிழகத்தில் முக்கிய கட்சிகளுடன் கூட்டணி வைத்திருக்கும் பாஜகவின் இந்த நிலைப்பாடு மக்களை அதிர்ச்சிக்கு உள்ளாக்கி உள்ளது. பாமக இந்த நீட் ஒழிப்பு கோரிக்கையுடன்தான் கூட்டணியே வைத்தது. அப்படி இருக்கும் போதே பாஜக இப்படி உறுதியான நிலைப்பாட்டுடன் தமிழக மக்களுக்கு எதிராக இருப்பது பலருக்கும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

    English summary
    BJP takes an opposite stand against Tamilnadu People in NEET and Salem road project.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X