• search
சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In

72 மணி நேரம் தான் கெடு..! இல்லைனா என்ன நடக்குதுனு பாருங்க! அலாரம் வைத்த பாஜக அண்ணாமலை! பரபர பின்னணி!

Google Oneindia Tamil News

சென்னை : 72 மணி நேரத்திற்குள் கொடுத்த வாக்குறுதி படி பெட்ரோல், டீசல் விலையை 5 ரூபாய் குறைக்க வேண்டும் எனவும், இல்லையேல் கோட்டையை முற்றுகையிட்டு பாஜக போராட்டத்தில் ஈடுபடும் என பாஜக தமிழக தலைவர் அண்ணாமலை கெடு விதித்துள்ளார்.

பெட்ரோல், டீசல் விலை உயர்வால் சமான்ய மக்கள் கடும் சிரமத்திற்கு ஆளாகிவந்த நிலையில் கடந்த 40 நாட்களாக விலையில் எந்தவித மாற்றமுமின்றி இருந்தது. இந்நிலையில் தற்போது பெட்ரோல், டீசல் விலை குறைக்கப்பட்டுள்ளதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது.

பெட்ரோல் விலை லிட்டருக்கு 9.50 ரூபாயும், டீசல் விலை லிட்டருக்கு 7 ரூபாயும் குறைக்கப்பட்டுள்ளதாக நிர்மலா சீதாராமன் அறிவித்துள்ளார். பெட்ரோல் மீதான கலால் வரி ரூ.8ம், டீசல் மீதான கலால் வரி ரூ.6ம் குறைக்கப்பட்டுள்ளது

பெட்ரோல் விலையை நீங்க உயர்த்திவிட்டு.. எங்களை குறைக்க சொல்வது நியாயமா? நிர்மலாவிற்கு பிடிஆர் பதிலடி பெட்ரோல் விலையை நீங்க உயர்த்திவிட்டு.. எங்களை குறைக்க சொல்வது நியாயமா? நிர்மலாவிற்கு பிடிஆர் பதிலடி

மக்கள் கோரிக்கை

மக்கள் கோரிக்கை

அதே நேரத்தில் தமிழக அரசும் வாட் வரியை குறைக்க வேண்டுமென்ற கோரிக்கை எழுந்துள்ளது. கேரளா , ராஜஸ்தான் போன்ற மாநிலங்களில் பெட்ரோல் டீசல் விலை குறைக்கப்பட்டுள்ளது போல் தமிழத்திலும் திமுக அரசு வாட் வரியையும் பெட்ரோல் வரியையும் குறைக்க வேண்டுமென்ற கோரிக்கை எழுந்துள்ளது. ஆனால் இதனை செய்ய முடியாது என நிதியமைச்சர் உறுதியாகக் கூறியுள்ள நிலையில் 72 மணி நேரத்திற்குள் கொடுத்த வாக்குறுதி படி பெட்ரோல், டீசல் விலையை 5 ரூபாய் குறைக்க வேண்டும் எனவும், இல்லையேல் கோட்டையை முற்றுகையிட்டு பாஜக போராட்டத்தில் ஈடுபடும் என பாஜக தமிழக தலைவர் அண்ணாமலை கெடு விதித்துள்ளார்.

பாஜக அண்ணாமலை

பாஜக அண்ணாமலை

சென்னை விமான நிலையத்தில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், "ஒரு பக்கம் கச்சா எண்ணெய் விலை உயர்ந்து கொண்டே இருந்தாலும் கூட மோடி விலையை குறைத்து இருக்கிறார். திமுக அரசு செயல் தன்மை இல்லாத அரசு. தேர்தல் அறிக்கையில் கூறியதை செய்யாமல் உள்ளது. அரசியல் லாபத்திற்காக திமுக தேர்தல் அறிக்கையில் பெட்ரோல், டீசல் விலையை குறைப்போம் என்று கூறி உள்ளது. 72 மணி நேரத்திற்குள் கொடுத்த வாக்குறுதி படி பெட்ரோல், டீசல் விலையை 5 ரூபாய் குறைக்க வேண்டும்.

கோட்டை முற்றுகை

கோட்டை முற்றுகை

சமையல் எரிவாயு விலையை 100 ரூபாய் குறைக்க வேண்டும் இல்லை என்றால் கோட்டையை முற்றுகையிட்டு பாஜக போராட்டத்தில் ஈடுபடும். காங்கிரஸ் ஆட்சியில் இருந்தபோது மன்மோகன்சிங் ஒவ்வொருமுறையும் அனைத்து மாநில முதல்வர்களை கேட்டு தான் பெட்ரோல் விலையை ஏற்றினாரா? இறக்கினாரா? நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன் சொல்வதைப் பார்க்கும்போது பிரதமர் நரேந்திர மோடி அலுவலகத்தை விட்டு வெளியே வர வேண்டுமென்றால் கூட இவர்களிடம் அனுமதி கேட்க வேண்டும் போல.

முதல்வர் அண்ணாமலை

முதல்வர் அண்ணாமலை

காலையில் ராஜிவ்காந்தி படத்திற்கு மலர் தூவி மரியாதை செலுத்துகிறார். மாலையில் அவரது இறப்புக்கு காரணமானவர்களை விடுவிப்பது குறித்து ஆலோசனை மேற்கொள்கிறார்கள். வடிவேல் போல முதல்வர் செயல்படுகிறார். பேரறிவாளனை முதல்வர் ஆரத்தழுவி வரவேற்றது குறித்த கேள்விக்கு பதில் அளித்த அண்ணாமலை, ' இந்தியாவே அதிர்ச்சியில் இருக்கிறது. இது போன்று முதல்வர் நடந்து கொள்வதால் தான் தமிழ் நாட்டில் குற்றங்கள் அதிகரித்து வருகிறது நடுரோட்டில் பயமின்றி ஒருவரை வெட்டுகிறார்கள்.

பல்லாக்கு விவகாரம்

பல்லாக்கு விவகாரம்

ராஜிவ்காந்தி கொலை வழக்கில் உள்ள மற்ற குற்றவாளிகளை மத்திய அரசு விடுவிக்காதது, பேரறிவாளன் வழக்கில் கொடுத்த தீர்ப்பு மற்றவர்களுக்கு பொருந்தாது என முதல்வர் தெரிந்துகொள்ள வேண்டும். ஆர்டிகள் 6யை பயன்படுத்தி நம் மீனவர்களை மீன்பிடிக்க அனுமதிக்க வேண்டும். பாஜகவின் நிலைப்பாடு கச்சத்தீவை மீட்க வேண்டும் என்பது தான் ஆனால் திமுக , காங்கிரஸ் கச்சத்தீவு என்ற வார்த்தையை பயன் படுத்த கூடாது. நான் பல்லக்கு நிகழ்ச்சியில் பங்கேற்கின்றேன். மீண்டும் இடையூறு செய்தால் நானே தூக்குவேன்" என அண்ணாமலை பேசினார்.

English summary
According to the election promise given by the DMK within 72 hours, the price of petrol and diesel should be reduced by 5 rupeesBJP Tamil Nadu leader Annamalai has says that the BJP to besiege the fort ngage in a struggle.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X