சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

பொன்னார் சொன்னது போலவே... கன்னியாகுமரி மாவட்டத்தில் 4 தொகுதிகளை பெறுகிறதோ பாஜக?

Google Oneindia Tamil News

சென்னை: கன்னியாகுமரி மாவட்டத்தில் அதிமுக கூட்டணியில் பாஜக 4 தொகுதிகளில் போட்டியிடக் கூடும் என்கிறது உத்தேசபட்டியல்.

அதிமுக கூட்டணி தொகுதி பங்கீடு, வேட்பாளர் விவரம் தொடர்பான உத்தேச பட்டியல் ஒன்று வலம் வருகிறது. இதில் பாஜகவுக்கு 20 தொகுதிகள் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாம்.

BJP to contest in 4 constituencies in Kanyakumari Dist?

பாஜக போட்டியிடக் கூடிய 20 தொகுதிகள்: சேப்பாக்கம் திருவல்லிக்கேணி; ஆயிரம் விளக்கு; திருவண்ணாமலை; திருவையாறு; திருவாரூர்; ராஜபாளையம்; திருநெல்வேலி, திருச்செந்தூர், பத்மநாபபுரம், குளச்சல், கிள்ளியூர், விளவங்கோடு, பழனி, ராசிபுரம்(தனி), ஒட்டன்சத்திரம், வேப்பனஹள்ளி., தளி, கோவை வடக்கு, சிங்காநல்லூர், உதகை,

இதில் பத்மநாபபுரம், குளச்சல், கிள்ளியூர், விளவங்கோடு தொகுதிகள் கன்னியாகுமரி மாவட்டத்தை சேர்ந்தவை. கன்னியாகுமரி மாவட்டத்தில் 6 தொகுதிகளையும் பாஜக கேட்டுப் பொறும் என முன்னாள் மத்திய இணை அமைச்சர் பொன். ராதாகிருஷ்ணன் கூறிவந்தார்.

தற்போது 4 தொகுதிகள் வரை பாஜக பெறக் கூடும் என்கிறது உத்தேச பட்டியல். இதில் பத்மநாபபுரம் தொகுதியில் 1996-ல் பாஜகவின் வேலாயுதம் வெற்றி பெற்றிருக்கிறார். 1977-ல் ஜனதா கட்சி, 1980-ல் ஜனதா (ஜேபி), 1984-ல் சுயேட்சை, 1989-ல் சிபிஎம், 1991-ல் அதிமுக, 1996-ல் பாஜக, 2001-ல் அதிமுக, 2006, 2011, 2016-ல் திமுக வெற்றி பெற்ற தொகுதி இது.

காங்கிரஸ் கட்சியின் கோட்டை குளச்சல் தொகுதி. 5 முறை காங்கிரஸும், திமுக, அதிமுக ஆகியவை தலா 2 முறையும் வென்ற தொகுதி இது.

அதிரடி அதிமுக.. மொத்தம் அதிரடி அதிமுக.. மொத்தம் "171".. இதுதான் பட்டியல்.. இங்குதான் இரட்டை இலை போட்டியிட போகுது!

கிள்ளியூர் தொகுதியும் காங்கிரஸ் கோட்டைகளில் ஒன்றுதான். ஜனதா கட்சியின் பொன் விஜயராகவன், தமாகா குமாரதாஸ், காங்கிரஸ் ஜேக்கப் ஆகியோர் இங்கு வென்றவர்கள்.

விளவங்கோடு தொகுதி சிபிஎம், காங்கிரஸ் செல்வாக்கு பெற்ற தொகுதி. 2011, 2016-ல் காங்கிரஸின் விஜயதரணி வெற்றி பெற்றார். அதற்கு முன்னர் 3 முறை சிபிஎம் வென்றது. 1984 முதல் 1991 வரையிலான 3 தேர்தல்களில் காங்கிரஸ் வென்ற தொகுதி இது. 1977, 1980-ல் சிபிஎம் வென்ற தொகுதி.

English summary
Unconfirmed reports said that BJP may contest in 4 constituencies in Kanyakumari Dist.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X