சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

மக்கள் தளத்தில் செம டேமேஜான ரஜினியை மலைபோல நம்பும் பாஜக.. அப்ப முடிவு?

Google Oneindia Tamil News

Recommended Video

    BJP Believe Rajini: மக்களிடம் மதிப்பை இழந்த ரஜினியை நம்பும் பாஜக- வீடியோ

    சென்னை: நடிகர் ரஜினிகாந்தை களமிறக்குவதன் மூலம் தமிழகத்தில் காவி கொடிக்கு கதவை திறந்து விட முடியும் என மலைபோல் நம்புகிறது பாஜக. ஆனால் ரஜினிகாந்துக்கு அரசியல் களத்தில் மக்களிடையே என்ன செல்வாக்கு என்கிற யதார்த்தை புரியாமலே பாஜக இப்படி ஒரு கணக்குப் போடுகிறது என்பது அரசியல் பார்வையாளர்கள் கருத்து.

    தமது திரைப்படங்கள் ஓடுவதற்காக இதோ அரசியலுக்கு வருகிறேன்.. அதோ வருகிறேன்.. என 30 ஆண்டுகளுக்கு மேலாக அறிவித்துக் கொண்டே இருப்பவர் நடிகர் ரஜினிகாந்த் மட்டுமே. அவரது சக நடிகரான கமல்ஹாசன் கூட அரசியலுக்கு வந்து தேர்தல் களத்தை சந்தித்து தம்மை திரும்பிப் பார்க்க வைத்திருக்கிறார்.

    ஆனால் ரஜினிகாந்தின் இந்த தயக்கம் அப்பட்டமாக நடுங்கிக் கொண்டிருக்கிறார் என்பதை வெளிப்படுத்தாமல் இல்லை. தமிழகத்தின் வாழ்வாதார பிரச்சனைகளில் குழப்பமான விஷயங்களை சொன்னாலும் கமல்ஹாசன் தொட்டுச் செல்கிறார். ஆனால் ரஜினிகாந்தோ அப்படி ஒரு விவகாரம் நடந்து கொண்டிருப்பதாக தம்மை காட்டிக் கொள்வதில்லை.

    கார்த்திக்கு சீட்டு கொடுக்காவிட்டால்.. நான் இதை செய்வேன்.. சோனியாவையே மிரட்டி சாதித்த ப.சிதம்பரம் கார்த்திக்கு சீட்டு கொடுக்காவிட்டால்.. நான் இதை செய்வேன்.. சோனியாவையே மிரட்டி சாதித்த ப.சிதம்பரம்

    தமிழர் உணர்வால் அலர்ஜி

    தமிழர் உணர்வால் அலர்ஜி

    அதைப் பற்றி கேள்வி கேட்டால், தலை சுற்றுகிறது என எகத்தாளத்தை வெளிப்படுத்துகிறார். தமிழர் உணர்வு சார்ந்த விஷயங்களை சமூகவிரோதிகள், தீவிரவாதிகள் என பாஜக மொழியில் பேசி பாடாய்பட்டார் ரஜினிகாந்த். தமது பிரஸ் மீட்டுக்கே விளக்கம் சொல்ல பிரஸ் மீட் வைத்த ஒரே நபர் ரஜினிகாந்தாகத்தான் இருக்க முடியும்.

    கள யதார்த்தம் வேறு

    கள யதார்த்தம் வேறு

    இப்படி தமிழகத்தின் பட்டி தொட்டி எங்கும் பக்கா டேமேஜாகி இருப்பவர் ரஜினிகாந்த். அவரை பொறுத்தவரை அரசியல் களத்தில் ஒரு நகைச்சுவை நபராகத்தான் இருக்கிறார். அவரை கூட்டணி சேர்த்துக் கொண்டு களத்துக்கு போய் காவி கொடியை நாட்டுவோம் என பாஜக கற்பனை செய்வது யதார்த்தத்தில் இருந்து எவ்வளவு விலகி இருக்கிறது அக்கட்சி என்பதை புரிந்து கொள்ள முடிகிறது.

    ரஜினிக்கான மரியாதை இதுவே

    ரஜினிக்கான மரியாதை இதுவே

    மேலும் ரஜினிகாந்தை ஒட்டுமொத்த தமிழக வாக்காளர்களும் தூக்கிக் கொண்டாடவும் இல்லை; அவர் வந்தால் விமோசனம் வந்துவிடும் என வாய்பிளந்து கொண்டிருக்கவும் இல்லை; இங்கே ஒரு தத்துவார்த்த யுத்தம் நடந்து கொண்டிருக்கிறது- தமிழர் உரிமையை அழிக்கும் பாஜகவுக்கு எதிரான உரிமைப் போராட்டம் நடந்து கொண்டிருக்கிறது; இந்த உரிமைப் போராட்டத்தில் தத்துவார்த்த யுத்தத்தில் ரஜினியின் பங்களிப்பு துளியும் இல்லை என்பதை தமிழகம் உணர்ந்து கொண்டிருக்கிறது.

    தனித்து போட்டி பலம் காண்பிக்கட்டுமே

    தனித்து போட்டி பலம் காண்பிக்கட்டுமே

    தமிழகம் சினிமா மோகிகளின் கூட்டம்தான் ஆனால் தாத்தா ரஜினிகாந்த் என அழைக்கும் அளவுக்கு தலைமுறைகள் கடந்து போய்விட்டன என்பது இன்னொன்று யதார்த்தம். ரஜினிகாந்த், கமல்ஹாசனைப் போல தனித்துப் போட்டியிட்டு திரும்பிப் பார்க்க வைக்கும் போது அவரது உண்மை பலம் என்ன என்று தெரியும்.. அதை வைத்து கணக்குப் போடுவதுதான் அரசியல் கட்சிகளுக்கு அழகு.. மனப்பால் குடித்து கொண்டே இருந்தால் மலையேற முடியாது!

    English summary
    Sources said that, BJP will face heavy lose if they alliance with Rajinikanth's party like AIADMK.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X