சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

தமிழக சட்டசபை தேர்தல்... 60 தொகுதிகளுக்கு குறி.. 3 கட்சிகளுக்கு வலை.. பாஜகவின் வியூகம் இதுதானாம்!

Google Oneindia Tamil News

Recommended Video

    தமிழக சட்டசபை தேர்தல்..பாஜகவின் வியூகம் இதுதானாம்!-வீடியோ

    சென்னை: தமிழக சட்டசபை தேர்தலுக்கான வியூகங்களில் பாஜக படுமும்முரம் காட்டுகிறதாம். தமிழகத்தில் 60 தொகுதிகளில் போட்டியிட்டு கணிசமான எம்.எல்.ஏக்களை எப்படியும் பெற்றுவிடுவது என்பதுதான் பாஜகவின் இலக்கு என்கின்றன அக்கட்சி வட்டாரங்கள்.

    பாஜக காலூன்றாத மாநிலங்களில் எல்லாம் பிற கட்சி தலைவர்கள், எம்.எல்.ஏ.க்கள், எம்.பி.க்கள், கவுன்சிலர்களை வளைத்துப் போட்டு சட்டசபைக்குள்ளேயே நுழைந்த வரலாறு நிகழ்த்தப்பட்டு வருகிறது. ஆனால் தமிழகத்தில் பாஜக அப்படி எந்த அதிரடியையும் காட்டியது இல்லை.

    தமிழகத்தைப் பொறுத்தவரை பாஜகவுக்கு முதலில் தேவை, அரசியல்கட்சிகளிடத்தில் நாளை வளரக் கூடிய, ஆட்சியில் அமரக் கூடிய வாய்ப்புள்ள கட்சி என்பதை நிலை நிறுத்த வேண்டும் என்பதுதான். இதனை செயல்படுத்துவதற்கு சட்டசபை தேர்தலை கையில் எடுத்திருக்கிறதாம்.

     கார்பரேட் வரி அதிரடியாக குறைப்பு.. நிர்மலா சீதாராமன் அறிவிப்பு.. உற்பத்தி பெருக வாய்ப்பு கார்பரேட் வரி அதிரடியாக குறைப்பு.. நிர்மலா சீதாராமன் அறிவிப்பு.. உற்பத்தி பெருக வாய்ப்பு

    3 கட்சிகளுக்கு ஆப்சன்

    3 கட்சிகளுக்கு ஆப்சன்

    வரும் சட்டசபை தேர்தலுக்கான பாஜகவின் முதல் வியூகமாக இருப்பது கூட்டணிதான். திமுக, அதிமுக மற்றும் ரஜினி கட்சிகளுக்கான கதவுகளை பாஜக திறந்து வைத்துள்ளது. இதில் திமுக சித்தாந்த வேறுபாட்டை சுட்டிக்காட்டி கூட்டணி அமைக்க மறுக்கும் என்பதை பாஜக அறிந்தே வைத்திருக்கிறது.

    கடைசியில் அதிமுக அணி

    கடைசியில் அதிமுக அணி

    அதனால் மெகா கூட்டணி ஒன்றை திமுக அமைக்க விடாமல் தடுத்துவிட்டாலே போதும் என்பதும் பாஜகவின் கணக்காம். ரஜினி கட்சியை எப்படியாவது தாம் இடம்பெற இருக்கும் கூட்டணியில் இணைத்துக் கொள்ள வேண்டும் என்பது மற்றொரு வியூகம். இறுதியாக அதிமுக அணியில்தான் இணைய இருக்கிறது பாஜக.

    சரிபாதி பங்கீடு

    சரிபாதி பங்கீடு

    அந்த அணியில் குறைந்தது 60 தொகுதிகளில் போட்டியிட விரும்புகிறதாம் பாஜக. இந்த 60-ல் 50% சொந்த கட்சியினருக்காம்; இதர 50% மாற்று கட்சிகளில் வந்து இணையும் பிரமுகர்களுக்காம்.

    அதிகபட்சம் 30 தொகுதிகள் இலக்கு

    அதிகபட்சம் 30 தொகுதிகள் இலக்கு

    போட்டியிடும் 60 தொகுதிகளில் 'எப்படியாவது' 20 முதல் 30 தொகுதிகளில் வென்று சட்டசபைக்குள் நுழைந்துவிட்டாலே போதும்... தமிழகத்தில் பாஜகதான் அடுத்த பெரிய கட்சி... ஆட்சி அமைக்கப் போகிறது என்கிற நம்பிக்கை விதைக்கப்பட்டுவிடும். இயல்பாகவே கட்சியும் விஸ்வரூப வளர்ச்சி அடையும்.. 2026 தேர்தலில் ஆட்சியை கைப்பற்றிவிடலாம் என நினைக்கிறதாம். இந்த வியூகங்களுடன் காய்களை நகர்த்திக் கொண்டிருப்பதால்தான் தமிழக அரசியலில் தமது ஆடுபுலி ஆட்டங்களை கொஞ்சம் அடக்கி வாசிக்கிறதாம் பாஜக.

    English summary
    Sources said that BJP may target 60 seats for the Tamilnadu Assembly Elections in 2021.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X