சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

"திருச்சி சூர்யா சிவாவின்" ஆடியோவை கேட்டேன்.. அண்ணாமலைக்கு போன் செய்தேன்.. பரபரத்த வானதி

Google Oneindia Tamil News

சென்னை: பாஜக நிர்வாகி டெய்சி சரணை திருச்சி சூர்யா சிவா ஆபாசமாக பேசியதாக கூறப்படும் ஆடியோ விவகாரத்தில் தவறு இருக்கும் பட்சத்தில் நிச்சயம் தண்டனை கொடுக்க வேண்டும் என கோவை தெற்கு தொகுதி எம்எல்ஏ வானதி ஸ்ரீனிவாசன் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர் தனது ட்விட்டர் பக்கத்தில் கூறியிருப்பதாவது: தமிழக பா.ஜ.க சிறுபான்மை அணி தலைவியிடம் ஓபிசி அணி மாநில நிர்வாகி பேசிய ஆடியோவை கேட்டேன்.

உடனடியாக இது தொடர்பாக நடவடிக்கை எடுக்க பா.ஜ.க மாநில தலைவரை தொடர்பு கொண்டேன். விசாரணைக்கு உத்தரவிட்ட அறிக்கையை எனக்கு அனுப்பினார். தவறுக்கு நிச்சயம் தண்டனை இருக்க வேண்டும், அதை பா.ஜ.க உறுதி செய்யும் என்று தெரிவித்துள்ளார்.

 புண்படுத்திட்டாங்க..பாஜக சூர்யா சிவா மீது போலீசில் புகார்! அண்ணாமலை மீதும் நடவடிக்கை எடுக்க கோரிக்கை புண்படுத்திட்டாங்க..பாஜக சூர்யா சிவா மீது போலீசில் புகார்! அண்ணாமலை மீதும் நடவடிக்கை எடுக்க கோரிக்கை

டெய்சி சரண்

டெய்சி சரண்


பாஜகவின் சிறுபான்மை பிரிவு மாநிலத் தலைவர் டெய்சி சரண் மற்றும் ஓபிசி பிரிவு மாநில செயலாளர் திருச்சி சூர்யா சிவா ஆகியோர் இடையே நடந்த உரையாடல் சமூகவலைதளங்களில் வைரலாகி வருகிறது. இந்த விவகாரம் தமிழக பாஜகவில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.

ஒழுங்கு நடவடிக்கை குழு

ஒழுங்கு நடவடிக்கை குழு


இந்த சம்பவம் குறித்து விசாரணை நடத்த ஒழுங்கு நடவடிக்கை குழு அறிக்கை தாக்கல் செய்ய தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை உத்தரவிட்டுள்ளார். அந்த அறிக்கை வரும் வரை சூர்யா சிவா கட்சி நிகழ்ச்சிகளில் பங்கேற்க வேண்டாம் என அண்ணாமலை அறிக்கை அளித்துள்ளார்.

நடிகை கஸ்தூரி

நடிகை கஸ்தூரி

திருச்சி சூர்யா சிவாவின் சம்பவத்தை நடிகை கஸ்தூரியும் கண்டித்துள்ளார். அது போல் வானதிக்கு முன்பே காயத்ரி ரகுராமும் கண்டித்து ட்வீட் போட்டுள்ளார். அந்த ட்வீட்டில் பெண்களை குறிவைத்து தவறாக பேசினால் நாக்கு வெட்டப்படும் என உறுதியளித்துள்ளார். இப்படிப்பட்ட சமயங்களில் சொந்த கட்சிப் பெண்களை ஏன் தாக்க வேண்டும்? இந்த ஹைனாக்களுக்கு அழகு பார்க்க கட்சியில் மாநில பதவி கொடுத்தது மிகப்பெரிய தவறு.

குறை சொல்ல வேண்டாம்

குறை சொல்ல வேண்டாம்

கட்சியை குறை சொல்ல வேண்டாம் என அனைவரையும் தாழ்மையான வேண்டுகோள். திமுக ஸ்லீப்பர் செல்கள்தான் நம்மை சேதப்படுத்துகின்றன. அவர்கள் தங்கள் திராவிட மாடலை இங்கே காட்டுகிறார்கள். இதை நான் கண்டிக்கிறேன். இந்த நபர்களை போலீசார் கைது செய்ய வேண்டும். மற்றும் கட்சி அவரை உடனடியாக நீக்க வேண்டும். குரல் அச்சுறுத்தலைக் கேட்டு இதயம் உடைந்தது. டெய்சிக்கு வலிமை. என் ஆறுதல் மற்றும் ஆதரவு என குறிப்பிட்டிருந்தார். இந்த சம்பவம் டெல்லி வரை சென்றுள்ளதாக கூறப்படும் நிலையில் தற்போது மூத்த தலைவர்கள் ஒவ்வொருவராக வாய் திறக்க தொடங்கியுள்ளார்கள்.

ஆடியோ

ஆடியோ

அப்படி அந்த ஆடியோவில் என்னதான் இருக்கிறது என கேட்டால் அதில் சூர்யா சிவா என சொல்லப்படும் நபர் கூறும் விஷயத்தை காது கொடுத்து கேட்க முடியவில்லை. அந்த அளவுக்கு பெண் என்றும் பாராமல் இத்தனை ஆபாசமாக பேசியதுடன் அவரது நற்பெயருக்கு களங்கம் ஏற்படுத்தும் வகையிலும் அந்த நபர் ஆடியோவில் பேசியுள்ளது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. திருச்சி சூர்யா சிவாவை கைது செய்ய வேண்டும் என பெரும்பாலானோர் போர்க் கொடி உயர்த்தியுள்ளனர். சைதை சாதிக் பேசியதை விட திருச்சி சூர்யா சிவா பேசியது நாராசமாக இருந்ததாக காயத்ரி ரகுராமும் தெரிவித்துள்ளார். அத்துடன் அவரை கட்சியிலிருந்து நீக்க வேண்டும் என்றும் கோரிக்கை எழுந்துள்ளது.

English summary
BJP MLA Vanathi Srinivasan in her tweet says about audio conversation between Trichy Suriya Siva and Daisy Saran.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X