சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

பாஜக- அதிமுக கூட்டணியின் முதல்வர் வேட்பாளராக மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன்?

Google Oneindia Tamil News

சென்னை: தமிழகத்தில் பாஜக- அதிமுக கூட்டணியின் முதல்வர் வேட்பாளராக மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் அறிவிக்கப்படுவதற்கான வாய்ப்புகள் குறித்து ஆலோசிக்கப்படுவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

அதிமுகவின் முதல்வர் வேட்பாளராக முதல்வர் எடப்பாடி பழனிசாமி அறிவிக்கப்பட்டுள்ளார். ஆனால் பாஜக தலைவர்களோ முதல்வர் வேட்பாளர் குறித்து நாங்கள்தான் அறிவிப்போம் என பிடிவாதம் பிடித்து வருகின்றனர்.

பீகாரில் ஜேடியூவின் நிதிஷ்குமார்தான் முதல்வர் வேட்பாளர் என அறிவித்தே தேர்தல் பிரசாரம் செய்தது பாஜக. தமிழகத்தில் மட்டும் அப்படியான ஒரு முடிவை அறிவிக்காமல் பாஜக இழுத்தடித்துக் கொண்டிருக்கிறது.

எடப்பாடியை நிராகரிக்கும் பாஜக

எடப்பாடியை நிராகரிக்கும் பாஜக

இது தொடர்பாக அந்த கட்சியின் வட்டாரங்களில் விசாரித்த போது, முதல்வர் வேட்பாளராக எடப்பாடி பழனிசாமியை எங்கள் கட்சி ஏற்கவில்லை. இதனை அதிமுகவுக்கும் தெரியப்படுத்தி இருக்கிறோம். இதனைத் தொடர்ந்துதான் சென்னை தேர்தல் பிரசார கூட்டத்தில் முதல்வர் வேட்பாளர் தொடர்பாகவும் எடப்பாடியார் கோடிட்டுக் காட்டினார்.

ஓபிஎஸ்க்கு ஆதரவு இல்லை

ஓபிஎஸ்க்கு ஆதரவு இல்லை

துணை முதல்வர் ஓ. பன்னீர்செல்வம் எங்களது சாய்ஸ் என்கிற தகவலும் கசியவிடப்படுகிறது. ஓபிஎஸ் தனியாக தம்மை முன்னிலைப்படுத்தும் விளம்பரங்கள் செய்வதால் அப்படி சொல்லப்படுகிறது. ஆனால் எங்களது சாய்ஸ் அவரும் நிச்சயம் இல்லை.

முதல்வர் வேட்பாளர் நிர்மலா சீதாராமன்

முதல்வர் வேட்பாளர் நிர்மலா சீதாராமன்

பாஜகவை பொறுத்தவரையில் நீண்டகாலமாகவே மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமனை தமிழக முதல்வர் வேட்பாளராக நிறுத்துவது என திட்டமிட்டிருக்கிறோம். அதற்கான உரிய சூழ்நிலைக்காக காத்திருக்கிறோம். அனைத்து சூழல்களும் சாதகமாக அமைந்த பின்னர் அதிகாரப்பூர்வமாக நிர்மலா சீதாராமன் தமிழகத்தில் பாஜக கூட்டணியின் முதல்வர் வேட்பாளராக அறிவிப்போம் என்கின்றனர்.

அதிமுக நிலை என்ன?

அதிமுக நிலை என்ன?

ஆனால் அதிமுக தரப்பு பாஜகவின் இந்த நகர்வு குறித்து எந்த கருத்தையும் தெரிவிக்காமல் மவுனமாக இருந்து வருகிறது. தற்போதைய சூழ்நிலையில் நிர்மலா சீதாராமன் முதல்வர் வேட்பாளர் என பாஜக அறிவித்தாலும் அதிமுக ஏற்கக் கூடிய சாத்தியங்கள் அதிகம் என்கின்றன் சில தகவல்கள்.

English summary
Sources said that BJP want to Union Minister Nirmala Sitharaman as NDA's CM Candidate for the Tamilnadu Assembly Election 2021.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X