சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

எக்ஸிட் போல் முடிவுகளின் படி பா.ஜக-வுக்கு பெரும்பான்மை கிடைக்காது.. உரக்க சொல்லும் எதிர்கட்சிகள்

Google Oneindia Tamil News

Recommended Video

    பாஜக கூட்டணிக்கே வெற்றி ! சி வோட்டர் அதிரடி கணிப்பு!

    சென்னை: மத்தியில் ஆட்சி அமைக்க பாரதிய ஜனதா கட்சிக்கு பெரும்பான்மை கிடைக்காது என திமுக, விடுதலை சிறுத்தைகள், அம்மா மக்கள் முன்னேற்ற கழகம் உள்ளிட்ட கட்சிகள் கூறியுள்ளன.

    நேற்றுடன் மக்களவை தேர்தல் திருவிழா ஓய்ந்த நிலையில் நாடு முழுவதும் உள்ள பெரும்பாலான முன்னணி ஊடகங்கள் தேர்தலுக்கு பிந்தைய தங்களது கருத்து கணிப்பு முடிவுகளை வெளியிட்டுள்ளன.

    நேற்று வெளியான எக்ஸிட் போல் முடிவுகள் பாரதிய ஜனதாவினரை உற்சாகப்படுத்தியுள்ளது. எக்ஸிட் போல் முடிவுகளை வெளியிட்டுள்ள பெரும்பாலான முன்னணி ஊடகங்கள், பாரதிய ஜனதாவே பெரும்பான்மையுடன் ஆட்சியை பிடிக்கும் என கூறியுள்ளன. ஆனால் இதனை ஏற்க எதிர்கட்சிகள் மறுப்பு தெரிவித்துள்ளன

    ஆச்சரியம்.. பாஜக ஆட்சியை பிடிக்க 3 மாநிலங்கள்தான் முக்கிய காரணம்.. எக்ஸிட் போல் சொல்லும் சேதி ஆச்சரியம்.. பாஜக ஆட்சியை பிடிக்க 3 மாநிலங்கள்தான் முக்கிய காரணம்.. எக்ஸிட் போல் சொல்லும் சேதி

    மீண்டும் பாஜக வராது.. நம்பும் திருமா

    மீண்டும் பாஜக வராது.. நம்பும் திருமா

    திண்டிவனத்தில் செய்தியாளரிடம் பேசிய விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன் நடந்து முடிந்த தேர்தலில் நாடு முழுவதும் மோடிக்கு எதிரான அலையே வீசியதாக கூறியுள்ளார். எனவே பாரதிய ஜனதா கட்சி வெற்றி பெற வாய்ப்பில்லை என அவர் குறிப்பிட்டுள்ளார். மேலும் பேசிய அவர் இந்த தேர்தலில் ஏற்கனவே பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணியிலிருந்து, பல மாநில கட்சிகள் வெளியேறிவிட்டன. அக்கட்சிகள் பாரதிய ஜனதாவிற்கு எதிராகவே தேர்தலை சந்தித்துள்ளன. நிலைமை இப்படி இருக்கையில் பாரதிய ஜனதா தனிப்பெரும்பான்மை பெற வாய்ப்பில்லை என கூறியுள்ளார் மேலும் அக்கட்சி மீண்டும் ஆட்சிக்கு வராது என தாம் இன்னும் நம்புவதாக கூறினார்

    மாநிலத்திலும் மத்தியிலும் ஆட்சி மாற்றம்

    மாநிலத்திலும் மத்தியிலும் ஆட்சி மாற்றம்

    வாக்குப் பதிவிற்கு பிந்தைய கருத்து கணிப்புகள் எப்போதும் நம்பிக்கைக்குரியவை இல்லை என, அமமுக செய்தி தொடர்பாளர் சி.ஆர்.சரஸ்வதி கூறியுள்ளார். மத்தியிலும், மாநிலத்திலும் மக்கள் மாற்றத்தை விரும்புவதை தேர்தல் முடிவுகள் தெளிவாக காட்டும் என்றும் அவர் கூறியுள்ளார். என்னிடம் கருத்து கேட்டால் நான் அமமுக-விற்கு தான் வாக்களித்தேன் என கூறுவேன். ஏனென்றால் நான் தினகரன் தலைமையிலான கட்சியை நம்புகிறேன். எனவே வாக்களித்த அனைவரிடமும் கருத்து கணிப்பு நடத்த முடியாது. வாக்காளர்கள் அளித்த பதிலின் சராசரி விகிதத்தை வைத்து கருத்து கணிப்பு முடிவுகள் கூறப்படுகின்றன. எனவே இது எந்த அளவிற்கு உண்மையாகும் என்பதை கூறமுடியாது என்றார்

    ஆட்சியமைப்பதில் மாநில கட்சிகள் முக்கிய பங்கு

    ஆட்சியமைப்பதில் மாநில கட்சிகள் முக்கிய பங்கு

    கருத்து கணிப்புகள் பற்றி கருத்து தெரிவித்துள்ள திமுக வழக்கறிஞர் சரவணன், எக்ஸிட் போல் முடிவுகள் 2 தினங்களுக்கான விவாத பொருளே தவிர அது நிச்சயமாக நடக்கும் என கூற முடியாது. யாருக்கு வாக்களித்தோம் என்பதை ரகசியமாக வைத்திருக்கவே பலர் விரும்புவார்கள். எனவே கணிப்புகளை வைத்து எந்த உறுதியான முடிவிற்கும் வர இயவலாது என்றார். எனினும் மத்தியில் ஆட்சியமைப்பதில் மாநில கட்சிகள் நிச்சயம் முக்கிய பங்கு வகிக்கும் என கூறியுள்ளார்.

    அரசியல் ஆய்வாளர்கள் கருத்து

    அரசியல் ஆய்வாளர்கள் கருத்து

    கருத்து கணிப்பின் படி தமிழகத்தில் அதிக இடங்களை திமுக - காங்கிரஸ் கூட்டணி கைப்பற்றினால், மாநில அரசுக்கு சிக்கல் என அரசியல் ஆய்வாளர்கள் கூறியுள்ளனர். குஜராத், மத்திய பிரதேசம், ராஜஸ்தானில் பாஜக அதிக இடங்களில் வெற்றி பெறும் என கருத்து கணிப்பில் கூறப்பட்டுள்ளதை கூர்ந்து நோக்க வேண்டியது அவசியமாகிறது எனவும் கூறியுள்ளனர்.

    English summary
    The Bharatiya Janata Party does not get a majority to form the government in the middle said by tamilnadu opposition parties
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X