சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

கோல மாவுக்கு வந்த கிராக்கி.. மாறி மாறி கோலம் போடும் திமுக, பாஜக.. சூடு பிடிக்கும் போராட்டங்கள்!

Google Oneindia Tamil News

Recommended Video

    தமிழகமே போர்க் கோலம் வரைகிறது... எடப்பாடி அரசுக்கு நன்றி சொன்ன ஸ்டாலின்

    சென்னை: குடியுரிமை சட்டத்தை ஆதரித்து பாஜக நிர்வாகிகள் வீடுகளில் போட்டி கோலம் போடுவது என முடிவு செய்யப்பட்டுள்ளது.

    நாடு முழுவதும் குடியுரிமை திருத்தச் சட்டம் மற்றும் தேசிய குடிமக்கள் பதிவேடு ஆகியவற்றுக்கு எதிர்ப்பு தெரிவித்து போராட்டம் நடைபெற்ற வண்ணம் உள்ளது. இந்த நிலையில் அரசியல் கட்சித் தலைவர்களும், சமூக ஆர்வல அமைப்புகளும் இந்த சட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.

    "நடுரோட்டில் ஏன் நின்னேன் தெரியுமா".. கெத்து காட்டிய கேரள பெண்.. 2019 அதிர வைத்த வீடியோ!

    பரபரப்பு

    பரபரப்பு

    இந்த நிலையில் நேற்று முன் தினம் திடீரென சென்னை பெசன்ட் நகரில் சில வீடுகளின் முன் வேண்டாம் என்ஆர்சி, வேண்டாம் சிஏஏ என பெண்கள் கோலமிட்டிருந்தனர். இதனால் பரபரப்பு ஏற்பட்டது.

    கருணாநிதி வீட்டில் கோலம்

    கருணாநிதி வீட்டில் கோலம்

    இந்த நிலையில் கோலம் போட்ட 6 பெண்கள் கைது செய்யப்பட்டதை அடுத்து திமுகவின் மறைந்த தலைவர் கருணாநிதியின் கோபாலபுரம் இல்லத்திலும், தற்போதைய தலைவர் முக ஸ்டாலினின் இல்லத்திலும் கனிமொழியின் சிஐடி காலனி இல்லத்திலும் "வேண்டாம் சிஏஏ என்ஆர்சி" என கோலம் போடப்பட்டது.

    பாஜக மகளிரணி

    பாஜக மகளிரணி

    இதையடுத்து சென்னை, சேலம் உள்ளிட்ட பகுதிகளில் திமுக மகளிரணி சார்பில் கோலம் போடப்பட்டது. இந்த நிலையில் குடியுரிமை சட்டத்தை ஆதரித்து பாஜக மகளிரணி சார்பில் கோலம் போட முடிவு செய்யப்பட்டுள்ளது.

    இல்லங்களில் போட்டி கோலம்

    இல்லங்களில் போட்டி கோலம்

    இதுகுறித்து தமிழக பாஜகசெய்தித் தொடர்பாளர் ஏ.என்.எஸ்.பிரசாத் வெளியிட்ட செய்திக்குறிப்பில், ‘பா.ஜ.க. மாநில மகளிர் அணி சார்பில் தமிழகம் முழுவதும் குடியுரிமை சட்டத்தை ஆதரித்து ஜனவரி 1-ம் தேதி (நாளை) புத்தாண்டு அன்று காலை அனைத்து இல்லங்களிலும் கோலம் போடுவது என்று முடிவு செய்யப்பட்டுள்ளது' என்று கூறியுள்ளார்.

    English summary
    BJP Women Wing decides to draw kolam by supporting CAA and NRC tomorrow in their homes.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X