சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

"170".. திமுக "இடுக்கில்" பாய்ந்தால்.. பாஜக "தடுக்கில்" பாய்கிறதே.. பரபரக்கும் சதிராட்டம்.. !

திமுகவுக்கு எதிராக பாஜகவின் வியூகங்கள் வலுவாகி வருகின்றன

Google Oneindia Tamil News

சென்னை: கலைஞரையே மிஞ்சிவிட்டார் ஸ்டாலின் என்று உடன்பிறப்புகள் புகழ ஆரம்பித்துவிட்டார்கள்.. காரணம், திமுக தலைவர் எடுத்து வைக்கும் ஒவ்வொரு அரசியல் நகர்வும் அந்த அளவுக்கு கவனத்தை பெற்று வருகின்றன..!

வழக்கமாக கூட்டணிகள் இல்லாமல் திமுக தேர்தல் சந்தித்தது இல்லை.. இந்த முறையும் அப்படித்தான்.. ஆனால், படு ஜாக்கிரதையாக காய் நகர்த்த வேண்டிய கட்டாயம், நிர்ப்பந்தத்தில் திமுக உள்ளது.

இதற்கு காரணம் அதிமுக என்று அனைவருக்கும் தெரிந்த ஒன்றுதான் என்றாலும், பாஜகவும் இந்த லிஸ்ட்டில் ஐக்கியமாகிறது.. அதனால்தான், கூட்டணிகளின் லேசான அதிருப்தி, மனஸ்தாபங்கள் போன்றவை நிலவி வருகின்றன.. இவைகளை களையும் முயற்சிகளில் திமுக தலைமை ஈடுபட்டு வந்தாலும், மற்றொரு பக்கம் தன் போட்டியிடும் தொகுதிகள் 160, அல்லது 170 என்பதில் உறுதியாக நிற்கிறது.

 'தயவு செய்து நீதி வாங்கிக் கொடுங்க'.. கைக்கூப்பி மன்றாடிய பெண் - ஆக்ஷனில் உ.பி. போலீஸ் 'தயவு செய்து நீதி வாங்கிக் கொடுங்க'.. கைக்கூப்பி மன்றாடிய பெண் - ஆக்ஷனில் உ.பி. போலீஸ்

பாஜக

பாஜக

பொதுவாக, திமுகவுக்கு எதிரி அதிமுகதான் என்பது கடந்த கால வரலாறாக இருந்தாலும், இந்த முறை திமுகவை பொறுத்தவரை அதிமுக ஒரு பெரிய பிரச்சனையே இல்லை என்று சொல்லலாம்.. மாறாக பாஜகவை சமாளிக்க வேண்டியிருக்கிறது.. இதற்கு காரணம் புதுச்சேரி விவகாரம்தான் என்கிறார்கள் அரசியல் நோக்கர்கள்!

 சோனியா காந்தி

சோனியா காந்தி

தேர்தலுக்கு முந்தி கணக்கு போடும் கட்சிகளில், சற்று வித்தியாசமானது பாஜக.. தேர்தலுக்கு பிந்தைய அரசியல் குறித்தும் நாசூக்காக காய் நகர்த்துகிறது.. நாராயணசாமியை பொறுத்தவரை படு ஸ்டிராங் தலைவர்.. அனுபவம் மிக்கவர்.. இவரது திறமை குறித்து சோனியா காந்தியே நன்றாக நேரடியாக அறிவார்.. அந்த அளவுக்கு இறங்கி அரசியல் செய்யக்கூடியவர்.. இவரையே ஆட்டம் காண வைத்த பாஜகவின் ஸ்கெட்சை பார்த்துதான் திமுக சற்று கலங்கி போயுள்ளது. அதிலும் தன் கட்சி எம்எல்ஏவையே இழுத்த பாஜகவின் திறமை மேலும் கலக்கத்தை தந்துள்ளதாக தெரிகிறது.

 புதுச்சேரி

புதுச்சேரி

புதுச்சேரி ஒரு உதாரணம் தான் என்றாலும், அதே கணக்கை தமிழகத்திலும் பாஜக அமல்படுத்தாமல் இருக்காது.. வரும் தேர்தலில் திமுகதான் ஜெயிக்கும் என்ற பரவலான கருத்து உள்ள நிலையில், அந்த வெற்றிக்கு எந்தவித பங்கமும் பாஜகவால் ஏற்பட்டுவிடக்கூடாது என்பதில்தான் துமுக கவனம் செலுத்தி வருகிறது.. இந்த விஷயத்தில் 2 வகைகளில் திமுகவுக்கு பாஜக குடைச்சலை தரலாம்..

கூட்டணி

கூட்டணி

ஒன்று, தேர்தலுக்கு முன்பு, திமுகவை டேமேஜ் செய்வது, தனித்தனி அணிகளில் கூட்டணி அமைத்து, திமுகவின் வாக்குகளை பிரிப்பது என்பது ஒரு வகை.. மற்றொன்று, தேர்தலுக்கு பிறகு, யாரெல்லாம் பலவீனமானவர்களோ, யாரெல்லாம் அதிருப்தி எம்எல்ஏக்களோ, அவர்களை தட்டி தூக்குவது என்பது அடுத்த பிளான். ஓபனாக சொல்லபோனால், மேற்கு வங்க நிலைமை தமிழகத்திலும் நடந்துவிடக்கூடாது என்பதுதான் திமுகவின் ஒரே எண்ணமாக இருக்கிறது.. இதில் இன்னொன்றையும் கவனிக்க வேண்டி உள்ளது..

 பாஜக

பாஜக

ஒருவேளை சீட் கிடைக்காமல், அல்லது குறைந்த சீட்டுகள் காரணமாக, கூட்டணி கட்சிகள் யாராவது பாஜக பக்கம் செல்வதாக இருந்தாலும், அதையும் திமுக கண்காணிக்கிறது.. மதில்மேல் பூனையாக இருப்பவர்களிடம் எச்சரிக்கையாகவே பேச்சுவார்த்தையை நடத்துவதாக தெரிகிறது.. சித்தாந்தரீதியாக இந்து வாக்கு வங்கியை உருவாக்கி, அதை திமுகவுக்கு எதிராக திருப்பி விடும் வேலை நடப்பதாக ஒரு பேச்சு உள்ள நிலையில், அத்தனை பலவீனங்களையும் பலமாக மாற்றக்கூடிய வியூகங்களைதான் திமுக கையில் எடுத்து வருவதாக தெரிகிறது.

அழகிரி

அழகிரி

இன்னொரு பக்கம், அழகிரியை தயார் செய்து வருகிறார்கள்.. ஜேபி நட்டா மதுரைக்கு வந்து போனதே, அழகிரியை சந்திக்கதான் என்கிறார்கள்.. இவரையும் ஸ்டாலினுக்கு எதிராக பாஜக களமிறக்க போவதாக சொல்வதால், திமுகவுக்குள்ளும் லேசான நடுக்கம் காணக்கூடும்.. இதையும் ஸ்டாலின் சமாளிக்க வேண்டி உள்ளது.. ஆக மொத்தம் திமுகவுக்கு நேரடி செக் அதிமுக என்பதுபோய், பாஜக என்ற நிலை உருவாகி வருகிறது..!

 வியூகம்

வியூகம்

"தமிழ்நாட்டில் தேர்தல் முடிந்து என்னென்ன கூத்து நடக்க போகிறதோ தெரியவில்லை... தமிழ்நாட்டில் என்ன முயற்சி எடுத்தாலும் உங்கள் பருப்பு வேகாது. ஆள் பிடிப்பதால் இங்கே ஆட்சியை பிடித்துவிட முடியாது" என்று திருமாவளவன் அன்னைக்கு சொன்னதை தான் இங்கு நினைவுகூர வேண்டி உள்ளது..!

English summary
BJPs mass strategy against DMK in TN Assembly Election 2021
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X