சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

குஷ்பு காலி.. பதுங்கி பாய்ந்த வானதி.. தேசிய அளவில் செம போஸ்ட்.. பொருமலில் சீனியர் தலைவர்கள்..!

வானதி சீனிவாசனுக்கு புதிய பதவி தரப்பட்டுள்ளது

Google Oneindia Tamil News

சென்னை: பாஜக மகளிரணியின் தேசிய தலைவராக வானதி சீனிவாசன் நியமனம் செய்யப்பட்டுள்ளார்.. இது பாஜக தரப்பினருக்கு பெரும் மகிழ்ச்சியை தந்துவந்தாலும், அந்த கட்சியில் சீனியர்கள் சிலர் பொருமலுடன் உள்ளனராம்.

தமிழக பாஜகவில் மாநில துணை தலைவர் வானதி சீனிவாசன்.. தமிழிசையை போலவே மிக தீவிரமான கட்சியை பணியை ஆற்றி வருபவர்.. சிறந்த அறிவாளி.. எதையும் நாசூக்காகவும், அதேசமயம் புள்ளி விவர தரவுகளுடன் பொறுமையாக பேசுவது இவரது சுபாவம்.

தமிழிசை இருக்கும்போதும் சரி, இல்லாதபோதும் சரி, பாஜகவின் கொள்கைகளை எல்லா இடங்களிலும் வாய்ப்பு கிடைக்கும்போதெல்லாம் தவறாமல் பயன்படுத்துவார்.. தமிழிசையை போலவே நாகரீகமான வார்த்தைகளையே பயன்படுத்துவார்.

ஆட்சி மாறட்டும்.. அந்த ஆட்சி மாறட்டும்.. அந்த "வீடியோக்கள்" வெளிவரும்.. குஷ்பு, எஸ்.வி. சேகருக்கு நெல்லை கண்ணன் வார்னிங்

 நியமனம்

நியமனம்

சமீபத்தில் பாஜக மேலிடம் தேசிய நிர்வாகிகளை நியமித்து ஒரு லிஸ்ட் வெளியிட்டிருந்தது.. அதில், தமிழகத்தை சேர்ந்த யார் பெயரும் இடம் பெறவில்லை.. குறிப்பாக மூத்த தலைவர்கள் எச்.ராஜா, பொன்.ராதா வரை யார் பெயருமே அதில் இடம்பெறவில்லை.. ஆனால் எப்படியாவது தங்களுக்கு பொறுப்புகள் கிடைக்கும் என்று எதிர்பார்த்தவர்களில் வானதியும் ஒருவர்.

அண்ணாமலை

அண்ணாமலை

சமீபத்தில் வந்த அண்ணாமலைக்கு கூட பொறுப்புகளை வழங்கிய நிலையில், வானதி போன்ற சீனியர்கள் புறக்கணிக்கப்பட்டிருப்பது வருத்தத்தையே ஏற்படுத்தி வந்தது.. எனினும் அண்ணாமலைக்கு பதவி தந்தது தவறில்லை, அதற்கு கட்சியில் அதிகாரம் உண்டு என்று நியாயப்படுத்தி பேசியவர் வானதி.

மகளிரணி

மகளிரணி

இப்படி எந்த சூழ்நிலையிலும் கட்சியை விட்டுக்கொடுக்காத வானதிக்கு, இப்போது மிகப்பெரிய பொறுப்பு வந்து சேர்ந்துள்ளது. பாஜக மகளிரணி தேசியத் தலைவர் என்பது அந்த கட்சியின் மிகப்பெரிய பதவிகளில் ஒன்று.. சஞ்சிதா டோக்ரா என்பவர்தான் இதுவரை அந்த பொறுப்பில் இருந்தவர்.. இப்போது வானதி அங்கு நியமிக்கப்பட்டுள்ளதால், தேசிய அளவில் வானதியின் கவனம் ஈர்க்கப்பட்டுள்ளது.

 தலைவர்கள்

தலைவர்கள்

அதிருப்தி தலைவர்களுள் வானதிக்கு பொறுப்பு தந்தநிலையில், மற்ற சீனியர்கள் இன்னும் கடுப்பாகி உள்ளனராம்.. எச்.ராஜா ஏற்கனவே உத்திரபிரதேச தேர்தலில் போட்டியிட்டு வெற்றிபெற்று, அதன்மூலம் மத்திய அமைச்சாகும் முயற்சியில் இறங்கி வருவதாக ஏற்கனவே செய்திகள் வெளியாகி வந்தன.. ஆனால், பொன்.ராதா, நயினார் நாகேந்திரன், சிபி ராதாகிருஷ்ணன் உட்பட பல சீனியர்கள் பதவிக்காக காத்துள்ளனர்.

குஷ்பு

குஷ்பு

இதில் குஷ்புவும் ஐக்கியமாகி உள்ளதால், பாஜக இவர்களை எப்படி திருப்திப்படுத்த போகிறதோ தெரியவில்லை.. தேசிய கட்சி என்பதால், வானதி நாடு முழுவதும் இனி பிரபலமாவார் என்பது பாஜகவினருக்கு மட்டமற்ற மகிழ்ச்சிதான்.. அதேசமயம், தேர்தல் நெருங்கி வரும் சமயத்தில் குஷ்பு போன்ற ஆளுமைகளை கட்சி எப்படி பயன்படுத்தி கொள்ளுமோ என்ற எதிர்பார்ப்பும் எழுந்துள்ளது!

English summary
BJPs Vanathi Srinivasan appointed as National president of Mahila morcha
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X