• search
சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  

"மர்ம பெண்" கிளப்பும் பீதி.. 2021ல் பேரழிவு காத்திருக்கு.. பாபா பாட்டி சொல்வது நடக்குமா?

|

சென்னை: வலிமையான டிராகன் ஒட்டுமொத்த மனித குலத்தையே கைப்பற்றும் என்று கண் தெரியாத மர்ம பெண் பாபா வங்கா தெரிவித்த கணிப்பு ஒன்று பரபரப்புடன் வைரலாகி உள்ளது,

பாபா வாங்கா... இவர் பல்கேரியன் நாட்டை சேர்ந்த பெண்.. கண் தெரியாதவர்.. 85 வயதில் அதாவது 1996-ம் வருடம் இவர் இறந்துவிட்டார்.. பல்கேரிய நாஸ்டர்டாமாக இவர் இப்போதுவரை மதிக்கப்படுகிறார்.

கடந்த 50 வருடங்களில் 100-க்கும் மேற்பட்ட பல்வேறு தகவல்களை முன் கூட்டியே கணித்து சொன்னவர்.. இவர் சொன்னதில் 85 சதவீதத்துக்கும் பலித்தும் உள்ளது.. இப்போதும் அவை நடந்து வருகின்றன.

"ஐயா.. நீங்க இப்படி செய்யலாமா".. மலைக்க வைத்து.. உருக வைத்த "கேன்டீன்" சுப்பிரமணியம்.. 2020-ன் சோகம்

 கண்பார்வை

கண்பார்வை

இவர் 12 வயசு வரை நல்ல ஆரோக்கியமாகத்தான் இருந்தாராம்.. அதற்கு பிறகுதான் நோய்வாய்ப்பட்டு, தன் கண்பார்வையை முற்றிலும் இழந்துள்ளார்... பார்வை இழந்தவுடனேயே, வருங்காலம் குறித்து மொத்தத்தையும் சொல்ல ஆரம்பித்துவிட்டார்.. இப்படி சொல்வதற்கு கடவுள் தனக்கு புதுவித சக்தியை கொடுத்திருப்பதாக பாபா கூறினார்..

 இரட்டை கோபுரம்

இரட்டை கோபுரம்

அமெரிக்காவில் இரட்டை கோபுரம் மீது விமான தாக்குதல் நடக்கும் என்று இவர் ஏற்கனவே சொல்லி இருந்தார்.. தேபோல 2011-ல் செப்டம்பரில் அந்த சம்பவம் நடந்தது.. அதேபோல, அமெரிக்காவின் 44-வது ஜனாதிபதியாக ஒரு கருப்பினத்தவர்தான் பதவியேற்பார் என்று சொல்லி இருந்தார்.. அப்படியேதான் ஒபாமா வந்து பதவியை ஏற்றார்..

மர்மம்

மர்மம்

அதனால்தான், ஒவ்வொரு வருடமும் முடியும்போதும், புதுவருடம் தொடங்கும்போதும் இந்த மர்ம பெண்ணின் வார்த்தைகள் மிக கூர்ந்து கவனிக்கப்படுகின்றன. அந்த வகையில், வரும் 2021-ம் ஆண்டு நடப்பது குறித்தும் இவர் கணித்து விட்டு போயுள்ளார்.. அந்த வகையில், 2021-ல் இந்த உலகம் சில பேரழிவுகளை சந்திக்கும் என்று கணித்து வைத்துள்ளார்.. அமெரிக்காவின் 45வது அதிபர் மர்ம நோயால் பாதிக்கப்படுவார் என்று சொல்கிறார்.. அந்த 45வது அதிபர் சாட்சாத் நம்ம டிரம்ப்தான்!

 வேற்றுகிரகவாசி

வேற்றுகிரகவாசி

மேலும் அடுத்த 200 ஆண்டுகளுக்குள் மனிதர்கள் வேற்றுகிரகவாசிகளான ஏலியன்களுடன் தொடர்புபடுத்தி கொள்வார்கள் என்று தெரிவித்துள்ளார்.. அதாவது, இன்னும் 200 வருஷத்தில் மனிதன் வாழ தகுந்த இடமாக இந்த பூமி இருக்காதாம்.. ஒரு வலிமையான டிராகன், இந்த மொத்த மனித குலத்தையே கைப்பற்றி விடுமாம்.. அதில் மூன்று ராட்சதர்கள் ஒன்று கூடுவார்களாம்.. டிராகன் என்று பாபா சொல்வது அநேகமாக சீனாவாக இருக்கலாம் என்று நம்பப்படுகிறது.

 நடக்குமா?

நடக்குமா?

ஏற்கனவே, இந்த 2020 நமக்கு ஏகப்பட்ட இழப்புகளையும், சோகங்களையும் தந்துவிட்டு சென்றுள்ளது.. நம்மால் எஸ்பிபியை இன்னும் மறக்க முடியவில்லை.. இந்த கொரோனாவுக்கு இன்னும் விடை தெரியவில்லை.. புயல், வெள்ளம், இயற்கை சீற்றத்தினால் மனித உயிர்கள் பல மண்ணோடு மண்ணாக புதைந்து போயுள்ளன.. இதில், 2021-வது நமக்கு நன்றாக இருக்க வேண்டுமே என்ற கலக்கம் இப்போதே வந்துள்ளது.. இந்நிலையில், பாபா சொல்வதெல்லாம் பார்த்தால்,, இன்னும் பீதியை கிளப்புவதாக இருக்கிறது.. பார்ப்போம்.. என்ன நடக்கிறதென்று!

 
 
 
English summary
Blind Baba Vangas Predecitions for 2021
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X