சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

ஜெயலலிதா, ரஜினிகாந்த் வீடுகளுக்கு வெடிகுண்டு மிரட்டல்

ஜெயலலிதா, ரஜினிகாந்த் வீடுகளுக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுத்த நபர் கைது செய்யப்பட்டார்.

Google Oneindia Tamil News

சென்னை: போயஸ் கார்டனில் உள்ள ஜெயலலிதா, ரஜினிகாந்த் வீடுகளுக்கு திடீரென வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டது. இது தொடர்பாக இளைஞர் ஒருவரை பிடித்து போலீசார் விசாரித்து வருகிறார்கள்.

நேற்று சாயங்காலம் 6 மணி இருக்கும். சென்னை போலீஸ் கன்ட்ரோல் ரூமுக்கு ஒரு போன் வந்தது. அதில் பேசிய மர்ம நபர் ஒருவர், "போயஸ் கார்டனில் உள்ள ஜெயலலிதா வீட்டிலும், ரஜினிகாந்த் வீட்டிலும் இன்னும் கொஞ்ச நேரத்தில் குண்டு வெடிக்கப்போகிறது" என்று சொல்லிவிட்டு போனையும் கட் செய்துவிட்டார்.

Bomb Threat to Jayalalitha and Rajinikanth homes

இதனால் பதறிபோன போலீசார் உடனடியாக மறைந்த முதல்வர் ஜெயலலிதா மற்றும் நடிகர் ரஜினிகாந்த் வீடுகளுக்கு விரைந்து சென்றார்கள்.வெடிகுண்டு தடுப்பு பிரிவு போலீசார் இரு வீடுகளிலும் தீவிரமாக சோதனை நடத்தினார்கள். ஆனால் குண்டு எதுவுமே அங்கு இல்லை. அதன்பிறகுதான் யாரோ மிரட்டி இருக்கிறார்கள் என தெரியவந்தது.

பொள்ளாச்சியை பதற வைத்த கல்லூரி, பள்ளி மாணவிகள் பலாத்கார சம்பவம்.. முக்கிய குற்றவாளி கைதுபொள்ளாச்சியை பதற வைத்த கல்லூரி, பள்ளி மாணவிகள் பலாத்கார சம்பவம்.. முக்கிய குற்றவாளி கைது

இதையடுத்து தேனாம்பேட்டை போலீசார் சைபர் குற்றப்பிரிவு போலீசாருடன் இணைந்து விசாரணையில் இறங்கினார்கள். அப்போது வெடிகுண்டு மிரட்டல் விடுத்தது கோவையை சேர்ந்த இளைஞர் என்பது தெரியவந்தது. உடனடியாக சென்னை போலீசார் கோவை போலீசாருக்கு தகவல் மற்றும் விவரங்களை சொன்னார்கள்.

பின்னர் கோவை போலீசார் அந்த இளைஞரை பிடித்து விசாரித்தனர். அப்போது பெயர் முகமது அலி என்பதும், மன அழுத்தம் அதிகமாகிவிட்டதால் இப்படி மிரட்டல் விடுத்தார் என்பதும தெரியவந்தது. தொடர்ந்து இளைஞரிடம் விசாரணை நடக்கிறது.

English summary
Bomb Threat to Jayalalitha and Rajinikanth homes in Poes Garden and one arrest
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X