சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமியின் வீட்டுக்கு வெடிகுண்டு மிரட்டல்.. பரபரப்பு

Google Oneindia Tamil News

சென்னை: தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமியின் வீட்டுக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளது. காவல்துறை கட்டுப்பாட்டு அறைக்கு மிரட்டல் விடுத்த மர்ம நபர் யார் என்பது குறித்து போலீசார் விசாரித்து வருகிறார்கள்.

Recommended Video

    தமிழக முதல்வர் வீட்டுக்கு மர்ம நபர் வெடிகுண்டு மிரட்டல்

    தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமியின் அதிகாரப்பூர்வ இல்லம் சென்னை ஆர்ஏபுரத்தில் பசுமை வழிச்சாலையில் உள்ளது. இந்நிலையில் சென்னை காவல்துறை கட்டுப்பாட்டு அறைக்கு இன்று காலை போனில் பேசிய மர்ம நபர், முதல்வர் பழனிச்சாமியின் இல்லம் மற்றும் தலைமை செயலகத்தில் வெடிகுண்டு வைக்கப்பட்டுள்ளதாக கூறி அழைப்பை துண்டித்துள்ளார்.

    Bomb threat on Tamil Nadu Chief Minister Edappadi Palanisamy home

    இதையடுத்து காவல்துறை அதிகாரிகள், மோப்ப நாயுடன் போலீசார் படையை தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமியின் இல்லம் மற்றும் தலைமை செயலகத்திற்கு அனுப்பிவைத்தனர். அங்கு தீவிர சோதனை நடத்தப்பட்டது. இந்த சோதனைக்கு பின் புரளி என்பது உறுதி செய்யப்பட்டது.

    வழக்கமாக முதல்வரின் இல்லத்துக்கு அடிக்கடி மர்ம நபர்கள் செல்போனில் வெடிகுண்டு மிரட்டல் விடுப்பர். அவர்களை கண்டுபிடித்து கைது செய்யும் போலீசார், அவர்கள் என்ன காரணத்திற்காக மிரட்டல் விடுத்தார்கள் என்பது குறித்து விசாரிப்பார்கள்.

    "ஸ்வேதா டீச்சர் எங்கே".. ஒரே நாளில் ஆன் லைன் கிளாஸில் ஃபேமஸ்.. கேரளாவையே அசர வைத்த ஆசிரியை

    அந்த வகையில் செல்போன் மூலம் இன்று வெடிகுண்டு மிரட்டல் விடுத்தவர் யார் என்பது குறித்து செல்போன் சிக்னலை வைத்து போலீசார் தேடி வருகிறார்கள். அந்த மர்ம நபர் மீது போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர். மிரட்டல் விடுத்தவரை பிடித்தால் தான் எதற்காக இப்படி செய்தார் என்பது குறித்து தெரியவரும். இந்த மிரட்டலால் இன்று சென்னை தலைமை செயலகத்தில் பரபரப்பு ஏற்பட்டது.

    English summary
    The mysterious person Bomb threat on Tamil Nadu Chief Minister Edappadi Palanisamy home in chennai
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X