சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

தமிழ்நாட்டில் பூஸ்டர் தடுப்பூசி சிறப்பு முகாம் இன்று தொடக்கம்.. 600 இடங்களில் நடக்கிறது..!

தமிழகம் முழுவதும் முதலாவது பூஸ்டர் தடுப்பூசி முகாம் இன்று நடக்கிறது

Google Oneindia Tamil News

சென்னை: தமிழ்நாடு முழுவதும் முதலாவது பூஸ்டர் தடுப்பூசி முகாம் மாவட்ட தலைமை மருத்துவமனைகளில் இன்று நடக்கிறது... மொத்தம் 600 மையங்களில் இந்த முகாம் இன்று நடைபெறுகிறது...

தமிழகத்தில் தொற்று கட்டுப்படுத்தப்பட்டிருந்தாலும், இன்னும் முழுமையாக நீங்கவில்லை.. எனவே, தொற்று பரவாமல் தடுக்க தடுப்பூசி போடும் பணியை அரசு தீவிரப்படுத்தி வருகிறது.

அந்தவகையில், கடந்த ஜனவரி மாதம் 16-ந்தேதி முதல் கொரோனா தடுப்பூசி செலுத்தும் பணி விறுவிறுப்பாக நடந்து கொண்டிருக்கிறது

வியாழக்கிழமைகளில் பூஸ்டர் தடுப்பூசி ...தமிழகம் முழுவதும் 600 இடங்களில் நடைபெறும் - மா.சுப்ரமணியன் வியாழக்கிழமைகளில் பூஸ்டர் தடுப்பூசி ...தமிழகம் முழுவதும் 600 இடங்களில் நடைபெறும் - மா.சுப்ரமணியன்

தமிழக அரசு

தமிழக அரசு

தினசரி ஒரு லட்சம் பேருக்கு தடுப்பூசி போடப்பட்டு வந்த நிலையில், தடுப்பூசி போடும் பணியை மேலும் தீவிரப்படுத்தும் விதமாக கடந்த செப்டம்பர் மாதத்தில் இருந்து, மெகா தடுப்பூசி முகாமை தமிழக அரசு நடத்தி கொண்டிருக்கிறது.. அதன்படி, ஒருநாளைக்கு 10 லட்சத்துக்கு மேற்பட்டோருக்கு தடுப்பூசி போடப்பட்டு வருகிறது. மேலும், 100 சதவீதம் பேருக்கு முதல் தவணை தடுப்பூசி என்ற இலக்கை எட்டுவதற்கு தமிழக அரசு பல்வேறு நடவடிக்கைகளை துரிதமாக எடுத்து வருகிறது...

முன்னுரிமை

முன்னுரிமை

இப்போதுவரை தமிழகம் முழுவதும் 17-க்கும் மேற்பட்ட மெகா தடுப்பூசி முகாம்கள் நடந்துள்ளன.. சனிக்கிழமை தோறும் நடத்தப்படும் இந்த தடுப்பூசி முகாம்களில், காலக்கெடு முடிந்தும் 2-வது தவணை தடுப்பூசி செலுத்திக் கொள்ளாதவர்களுக்கு முன்னுரிமை அளிக்கப்படுகிறது... இதனிடையே, 2 தவணை தடுப்பூசி போட்டு 9 மாதங்கள் முடிவடைந்தவர்களுக்கு முன்னெச்சரிக்கை என்ற பூஸ்டர் தடுப்பூசி போட மத்திய அரசு அனுமதி அளித்திருக்கிறது.

பூஸ்டர் தடுப்பூசி

பூஸ்டர் தடுப்பூசி

அதன்படி, சுகாதார பணியாளர்கள், முன்கள பணியாளர்கள், இணை நோய் உள்ள 60 வயதுக்கு மேற்பட்டோருக்கு பூஸ்டர் தடுப்பூசி போடப்பட்டும் வருகிறது. தமிழகத்தில் ஜனவரியில் மட்டும் 10 லட்சம் பேர் பூஸ்டர் டோஸ் தடுப்பூசி போட தகுதி பெற்றவர்களாக உள்ளனர்... வாரந்தோறும் சனிக்கிழமைகளில் நடத்தப்படும் மெகா தடுப்பூசி முகாம்களை போல, வியாழக்கிழமை தோறும் பூஸ்டர் தடுப்பூசி சிறப்பு முகாம் நடத்தப்படும் என்று சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் ஏற்கனவே தெரிவித்திருந்தார்.

600 மையங்கள்

600 மையங்கள்

அதன்படி, முதலாவது பூஸ்டர் தடுப்பூசி முகாம் மாவட்ட தலைமை மருத்துவமனைகள், மருத்துவக்கல்லுாரி மருத்துவமனைகள் உள்ளிட்ட 600 மையங்களில் இன்று நடைபெறுகிறது... சென்னையில் மட்டும் 160 இடங்களில் பூஸ்டர் டோஸ் தடுப்பூசி போடப்படுகிறது என்று தமிழக சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது... கொரோனாவையும் தாண்டி, ஒமிக்ரான் என்ற உருமாறிய வைரஸ் உலகளவில் பல்வேறு நாடுகளில் பரவி கடும் அச்சுறுத்தலை ஏற்படுத்தி வரும் நிலையில், இந்தியாவும் பூஸ்டர் தடுப்பூசியை கையில் எடுத்துள்ளது.

Recommended Video

    Vaccine மூலம் கிடைக்கும் பலன்.. அதிகாரிகள் சொன்ன தகவல்
    இன்று முதல் ஆரம்பம்

    இன்று முதல் ஆரம்பம்

    முதலாவது பூஸ்டர் தடுப்பூசி முகாம் மாவட்ட தலைமை மருத்துவமனைகள், மருத்துவக்கல்லுாரி மருத்துவமனைகள் உள்ளிட்ட 600 மையங்களில் இன்று நடைபெறுகிறது... சென்னையில் மட்டும் 160 இடங்களில் பூஸ்டர் டோஸ் தடுப்பூசி போடப்படுகிறது என்று தமிழக சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது... கொரோனாவையும் தாண்டி, ஒமிக்ரான் என்ற உருமாறிய வைரஸ் இந்தியாவும் பூஸ்டர் தடுப்பூசியை கையில் எடுத்துள்ளது.

    English summary
    Booster Vaccination camp in Tamilnadu on Thursdays and first camps starts today in 600 places
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X