சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

அதுதான் முக்கியம்.. உலக நாடுகள் உற்றுநோக்கும் ஒரு அறிக்கை.. ஜி ஜின்பிங் - மோடி தீவிர ஆலோசனை!

சீன அதிபர் ஜி ஜின்பிங் மற்றும் பிரதமர் மோடி இடையிலான ஆலோசனை குறித்த அறிக்கை இன்று மாலை வெளியாகி உள்ளது.

Google Oneindia Tamil News

Recommended Video

    உலக நாடுகள் உற்றுநோக்கும் ஒரு அறிக்கை.. ஜி ஜின்பிங் - மோடி தீவிர ஆலோசனை!

    சென்னை: சீன அதிபர் ஜி ஜின்பிங் மற்றும் பிரதமர் மோடி இடையிலான ஆலோசனை குறித்த அறிக்கை இன்று மாலை வெளியாகி உள்ளது.

    சீன அதிபர் ஜி ஜின்பிங் நேற்று தமிழகம் வந்தார். அவர் பிரதமர் மோடியை காஞ்சிபுரத்தில் சந்தித்து ஆலோசனை நடத்தி வருகிறார். மகாபலிபுரத்தில் உள்ள தனியார் ஹோட்டல் ஒன்றில் இந்த ஆலோசனை கூட்டம் நடந்து வருகிறது.

    இதில் பல முக்கிய ஒப்பந்தங்கள் குறித்து விவாதிக்கப்பட உள்ளது. இரண்டு நாட்டு அதிபர்களின் ஆலோசனை கூட்டம் உலகம் முழுக்க பெரும் கவனம் ஈர்த்துள்ளது.

    நேற்று எப்படி

    நேற்று எப்படி

    நேற்று இவர்கள் இருவரும் மகாபலிபுரத்தில் சந்தித்துக் கொண்டனர். அங்கே இருக்கும் சிற்பங்களை இருவரும் கண்டு ரசித்தனர். அதன்பின் கடல் அருகே மரத்தடியில் அமர்ந்து இளநீர் குடித்தபடி பேசிக்கொண்டு இருந்தனர். பின் இரவு கலை நிகழ்ச்சிகளை கண்டுகளித்தனர்.

    கோவளம்

    கோவளம்

    இந்த நிலையில் இன்று கோவளம் பீச்சில் இருவரும் ஆலோசனை கூட்டத்தில் கலந்து கொண்டனர். தாஜ் பிஷர்மேன் கேவ் ரெசார்ட்டில் இருவரும் ஆலோசனை நடத்தி வருகிறார்கள். இந்த ஆலோசனை சுமார் 1 மணி நேரம் நடக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.

    காஷ்மீர் எப்படி

    காஷ்மீர் எப்படி

    இதில் காஷ்மீர் பிரச்சனை குறித்து இரண்டு நாட்டு அதிபர்களும் பேசுவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அதேபோல் சீனா - இந்தியா எல்லை பிரச்சனை குறித்தும் இவர்கள் இருவரும் பேசுவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது. பொருளாதார ஒப்பந்தங்கள் குறித்தும் இவர்கள் ஆலோசனை செய்ய வாய்ப்புள்ளது.

    இரண்டு நாட்டு தலைவர்கள்

    இரண்டு நாட்டு தலைவர்கள்

    இந்த சந்திப்பிற்கு பின் இரண்டு நாட்டு தலைவர்களும் தனி தனியாக அறிக்கை வெளியிட இருக்கிறார்கள். தாங்கள் என்ன பேசிக்கொண்டோம் என்று இந்த அறிவிக்கையில் அவர்கள் குறிப்பிடுவார்கள். இதனால் இந்த அறிக்கை மீதான பெரும் எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.

    என்ன அறிக்கை

    என்ன அறிக்கை

    இந்த அறிக்கை மூலம்தான் காஷ்மீர் பிரச்சனை குறித்து இரண்டு நாட்டு அதிபர்கள் பேசினார்களா என்பது தெரிய வரும். இதனால் பாகிஸ்தான் இந்த அறிக்கையை உற்று நோக்கி வருகிறது. அதேபோல் பொருளாதார ரீதியாக எதாவது பேசி உள்ளனரா என்பதை சீனாவும் கவனமாக உற்றுநோக்கி வருகிறது.

    English summary
    Both countries will release a statement after Prime Minister Modi's meeting with Chinese President Xi.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X