• search
சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In

"பயப்படாத உன்னை விடமாட்டேன்".. அசால்ட்டாக ஸ்கோர் செய்த உதயநிதி.. நோட்டமிடும் பாஜக.. செம சம்பவம்!

|

சென்னை: திமுக இளைஞரணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின் தமிழகம் முழுக்க செய்து வரும் பிரச்சாரம் பாஜக தரப்பை திரும்பி பார்க்க வைத்துள்ளது. அதிலும் உதயநிதி நேற்று பேசிய சில விஷயங்கள் மக்களின் கவனத்தை ஈர்த்துள்ளது.

கடந்த இரண்டு நாட்களுக்கு முன் தாராபுரம் வந்த பிரதமர் மோடி.. தனது பிரச்சாரத்தில் திமுகவை எதிர்த்து கடுமையாக பேசினார். அதிலும் உதயநிதியை குறி வைத்து மோடி விமர்சனங்களை அடுக்கினார். திமுகவின் முடி இளவரசர் உதயநிதி, மூத்த உறுப்பினர்களை எல்லாம் ஓரம்கட்டிவிட்டார் என்று உதயநிதியை தாக்கி பேசினார்.

நேற்று தமிழகம் வந்த உள்துறை அமைச்சர் அமித் ஷாவும் இதேபோல்தான்.. உதயநிதியை கடுமையாக விமர்சனம் செய்தார். எம்எல்ஏ கூட இல்லாத உதயநிதியை இந்தியாவின் இரண்டு டாப் லீடர்கள் தாக்கி பேச தொடங்கி உள்ளனர். இதனால் தமிழகத்திற்குள் மட்டும் தெரிந்த உதயநிதி நேற்று தேசிய அளவில் பேசப்பட்டார்.

பாஜக

பாஜக

தேசிய பாஜக தலைவர்கள் பலர் உதயநிதியை நேற்று கடுமையாக விமர்சனம் செய்தனர். வாரிசு அரசியல்வாதி நீங்கள், உங்களுக்கு என்ன அனுபவம் உள்ளது என்று பாஜகவை சேர்ந்த தேசிய தலைவர்கள் பலர் உதயநிதியை விமர்சனம் செய்து வருகிறார்கள். உதயநிதியும் விடாமல் .. ஜெய் ஷா வாரிசு கிடையாதா? அவரின் சொத்து மதிப்பு என்ன? அத்வானியை மோடி ஓரம்கட்டியது ஏன்? என்றெல்லாம் கேட்டு பதிலுக்கு பதில் உதயநிதியும் ஸ்கோர் செய்து வருகிறார்.

ஏன் இப்படி

ஏன் இப்படி

உதயநிதி மீது தேசிய பாஜக தலைவர்கள் இப்படி குறி வைக்க காரணம் இல்லாமல்இல்லை. உதயநிதியின் வேகமான வளர்ச்சிதான் இதற்கு காரணம் என்கிறார்கள் அரசியல் வல்லுநர்கள். ஸ்டாலினைவிட உதயநிதிதான் இந்த பிரச்சாரத்தில் ஸ்கோர் செய்கிறார். உதயநிதி பேசுவது தமிழகம் மட்டுமின்றி மற்ற மாநிலங்களில் வைரலாவதாக கூறப்படுகிறது. அதிலும் எய்ம்ஸ் செங்கல் மேட்டர் தேசிய அளவில் ஹிட் அடித்து இருக்கிறது .

உதயநிதி

உதயநிதி

அத்வானி , ஜெய் ஷா குறித்து உதயநிதி பேசியதும் தேசிய அளவில் கவனம் பெற்றது. பேச வேண்டிய விஷயங்களை உதயநிதி பேசுகிறார்.. எதை பற்றியும் யோசிப்பது இல்லையா என்ற கருத்து நிலவுகிறது. இதனால்தான் இப்போதே உதயநிதி மீது பாஜக தீவிரமாக கவனம் செலுத்த தொடங்கி உள்ளது. உதயநிதியும் போகிற இடங்களில் எல்லாம் தனக்கான இமேஜை உயர்த்திக்கொண்டு செல்கிறார். ஜென் இசட் பாணியில் எளிமையாக பேசி இளைஞர்களை கவருகிறார்.

 சர்காசம்

சர்காசம்

சர்காசம் செய்து மக்களை சிரிக்க வைத்து கொண்டே இருக்கிறார். நேற்று சேலம் தெற்கு தொகுதியில் பிரச்சாரம் செய்த போது சிறுமி ஒருவரை வேனில் ஏற்றி உதயநிதி பேச வைத்தார்.. பயப்படாம மேல ஏறு.. நான் பிடிச்சிக்கிறேன்.. நீ உட்கார்ந்து பேசு என்று தூக்கிவிட்டார். நான் உங்களை கிஸ் பண்ணட்டுமா என்று அந்த சிறுமி கேட்க.. வியர்வை நிறைந்த கன்னத்தை துணியால் துடைத்துவிட்டு அந்த சிறுமியிடம் நீட்டினார் உதயநிதி.

சிறுமி

அந்த சிறுமி பேசிவிட்டு சென்ற போது.. அவருக்கு அண்ணா உனக்கு கிஸ் கொடுக்கட்டுமா என்று கேட்டு.. சிறுமிக்கு கிஸ் கொடுத்து உதயநிதி வழியனுப்பி வைத்தார். உதயநிதியின் இந்த செயல் நேற்று பெரிய அளவில் ஹிட் அடித்தது.

எளிமை

எளிமை

அட இவர் என்ன இவ்வளவு எளிமையா இருக்காரே என்று மக்களே வியக்கும் அளவிற்கு சாதாரணமாக பழகுகிறார். ஸ்டாலினிடம் கூட இந்த விஷயம் கொஞ்சம் மிஸ்ஸிங்தான். உதயநிதி மக்களை அணுகும் விதம் எளிதாக ஈர்க்க கூடிய வகையில் உள்ளது. இதுதான் பாஜகவை இவர் பக்கம் திரும்ப வைத்துள்ளது.

சிறுமி

சிறுமி

இவருக்கு கூடி வரும் கூட்டத்தை பார்த்துதான் தற்போது உதயநிதியை பாஜக நேரடியாக அட்டாக் செய்ய தொடங்கி உள்ளது. இவரை இப்போதே கட்டுக்குக்குள் வைக்க பாஜக நினைக்கிறது. ஆனால் உதயநிதியும் விடாமல் பாஜகவிற்கு பதிலடியாக கொடுத்து வருவதால் தேர்தல் களம் நாளுக்கு நாள் பரபரப்பாகிக் கொண்டே போகிறது!

English summary
Brick by Brick: How Udhayanidhi Stalin election campaign gets BJP attention in Tamilnadu.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X