சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

ஆண்டிப்பட்டி சட்டசபை தொகுதி.. எதிர் எதிர் கட்சியிலிருந்து களமிறங்கும் சகோதரர்கள்!

Google Oneindia Tamil News

Recommended Video

    அதிமுக தொகுதி பட்டியல்... திமுகவுடன் எங்கு நேருக்கு நேர் மோதல் ? முழு தகவல்

    சென்னை: ஆண்டிப்பட்டி சட்டசபை தொகுதியில் எதிரெதிர் கட்சியிலிருந்து சகோதரர்கள் களமிறங்குகின்றனர்.

    நாடாளுமன்றத் தேர்தல் வரும் ஏப்ரல் 11-ஆம் தேதி தொடங்கி 7 கட்டங்களாக நடத்தப்படுகிறது. தமிழகத்துக்கு வரும் ஏப்ரல் 18-ஆம் தேதி நடத்தப்படுகிறது.

    இந்த நிலையில் நேற்றைய தினம் திமுக, அமமுக, அதிமுக ஆகிய கட்சிகள் தங்கள் கட்சி சார்பில் லோக்சபா, 18 சட்டசபை தொகுதிகளில் போட்டியிடும் வேட்பாளர்களின் பட்டியலை வெளியிட்டது.

    எல்லாம் சரி.. அந்த 1500 வீடியோ எங்கே?.. யார் கிட்ட இருக்கு.. பெரும் கவலையில் மக்கள்!எல்லாம் சரி.. அந்த 1500 வீடியோ எங்கே?.. யார் கிட்ட இருக்கு.. பெரும் கவலையில் மக்கள்!

    தகுதி நீக்கம்

    தகுதி நீக்கம்

    அதில் ஆண்டிப்பட்டி சட்டசபை தொகுதி முக்கியமானதாகும். இங்கிருந்து தேர்வு செய்யப்பட்டவர்தான் தங்கதமிழ்ச்செல்வன். முதல்வர் மீது நம்பிக்கை இல்லை என ஆளுநரிடம் புகார் அளித்ததால் அவர் தகுதி நீக்கம் செய்யப்பட்டார்.

    மிஸ்ஸானது

    மிஸ்ஸானது

    தற்போது அவர் தினகரனின் அமமுகவில் உள்ளார். இந்த நிலையில் அமமுக வேட்பாளர்கள் பட்டியலில் 9 சட்டசபை தொகுதிகளுக்கு தகுதி நீக்கம் செய்யப்பட்ட வேட்பாளர்களையே தினகரன் நிறுத்தியுள்ளார். அந்த பட்டியலில் ஆண்டிப்பட்டி தொகுதி மிஸ்ஸானது.

    அதிமுக

    அதிமுக

    அநேகமாக அடுத்த கட்ட பட்டியலில் ஆண்டிப்பட்டி தொகுதி தங்கதமிழ்ச் செல்வனுக்கே ஒதுக்கப்படும் என தெரிகிறது. இந்த நிலையில் திமுக சார்பில் இந்த தொகுதியில் மகாராஜனும், அதிமுக சார்பில் லோகிராஜனும் களமிறங்குகின்றனர்.

    யாருக்கு வெற்றி

    யாருக்கு வெற்றி

    இவர்கள் இருவரும் சொந்த அண்ணன், தம்பிகளாம். இருவரும் எதிரெதிர் கட்சியிலிருந்து கொண்டு பலப்பரீட்சையில் ஈடுபட போகின்றனர். எனவே ஆண்டிப்பட்டியை தட்டிச் செல்வது அண்ணனா, தம்பியா இல்லை "தங்கமா" என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.

    English summary
    Own blooded brothers are competing in Andipatti in favour of ADMK and DMK.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X