சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

சரிந்து வரும் பொருளாதாரத்தை சரி செய்ய எந்த வழியும் சொல்லாத பட்ஜெட்.. கனிமொழி

Google Oneindia Tamil News

Recommended Video

    Budget 2020: Fund allocation in union budget 2020

    சென்னை: சரிந்து கொண்டிருக்கும் பொருளாதாரத்தை சரி செய்வதற்கான எந்த வழிவகையும் சொல்லாத ஒரு பட்ஜெட். என திமுகவைச் சேர்ந்த கனிமொழி எம்பி கூறியுள்ளார்.

    சென்னை விமான நிலையத்தில் திமுகவைச் சேர்ந்த கனிமொழி எம்பி பட்ஜெட் குறித்து பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறுகையில் " சரிந்து கொண்டிருக்கும் பொருளாதாரத்தை சரி செய்வதற்கான எந்த வழிவகையும் சொல்லாத ஒரு பட்ஜெட்.

    Budget did not say how way to fix a declining economy: kanimozhi

    பல இளைஞர்களுக்கு வேலை இல்லை நாடு முழுவதும் இந்த நிலைமைதான் உள்ளது. அவர்களுக்கு வேலை வாய்ப்பை உருவாக்க எந்த ஒரு திட்டமும் இல்லாத ஒரு பட்ஜெட்.

    பொருளாதாரப் பிரச்சினைக்கும் மற்ற எந்த பிரச்சனைக்கும் தெளிவான பதில் இல்லை.

    குறிப்பாக விவசாயிகளுக்கு இந்த பட்ஜெட்டில் எதுவுமில்லை. கிராமப்புற மக்களுக்கு வாங்க கூடிய சக்தி மிகவும் குறைந்து விட்டது என்று தெரிவிக்கப்பட்டு இருக்கிறது.

    பட்ஜெட் 2020:1 லட்சம் கிராமப் பஞ்சாயத்துக்களை இணைக்க பாரத் நெட் திட்டத்துக்கு ரூ.6,000 கோடி நிதிபட்ஜெட் 2020:1 லட்சம் கிராமப் பஞ்சாயத்துக்களை இணைக்க பாரத் நெட் திட்டத்துக்கு ரூ.6,000 கோடி நிதி

    தனி நபருடைய வரியை குறைப்பதாக சொல்லி ஒரு மாய பிம்பத்தை உருவாக்கி இருக்கிறார்கள். ஆனால் உண்மையிலேயே பல குழப்பங்களை உருவாக்கக்கூடிய ஒன்றாகத்தான் அமைந்துள்ளது இதனால் யாருக்கும் எந்த பயனும் கிடையாது" என்றார்.

    English summary
    dmk mp kanimozhi said that Budget did not say how way to fix a declining economy
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X