சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

அதிகாரிகள் எங்கள் செருப்பை தூக்கவே இருக்கிறார்கள்..சர்ச்சைப் பேச்சுக்கு மன்னிப்பு கேட்டார் உமாபாரதி

Google Oneindia Tamil News

சென்னை: அரசு அதிகாரிகளை அவமானப்படுத்தும் வகையில் பாஜக மூத்த தலைவர் உமா பாரதி பேசியுள்ள வீடியோ இணையத்தில் வைரலாக பரவி வருகிறது.

பாஜக மூத்த தலைவர்கள் சர்ச்சையான கருத்துக்களைத் தெரிவிப்பது தொடர் கதையாகி வருகிறது. வெறுப்பைப் பரப்பும் நோக்கிலும் பாஜக தலைவர்கள் பேசுவது புதிதல்ல.

ஆனால் இம்முறை அரசின் உயர் அதிகாரிகள் குறித்து உமா பாரதி பேசியுள்ளது பல்வேறு தரப்பினர் இடையே பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது.

மகாகவி பாரதி பெயரில்.. பனாரஸ் பல்கலைக்கழகத்தில் தமிழ் இருக்கை.. பிரதமர் மோடி சூப்பர் அறிவிப்புமகாகவி பாரதி பெயரில்.. பனாரஸ் பல்கலைக்கழகத்தில் தமிழ் இருக்கை.. பிரதமர் மோடி சூப்பர் அறிவிப்பு

உமா பாரதி

உமா பாரதி

அரசை நடத்துவதில் முக்கிய பங்கு வகிக்கும் உயர் அதிகாரிகளை மட்டுப்படுத்தும் வகையில் பாஜக மூத்த தலைவரும் முன்னாள் மத்திய அமைச்சருமான உமா பாரதி சர்ச்சையான கருத்துக்களைத் தெரிவித்து வருகிறார். அரசு அலுவலர்களை வைத்திருப்பதே எங்களின் செருப்புக்களைத் தூக்கத்தான் என்ற ரீதியிலும் அவர்களுக்கு எனத் தனிப்பட்ட திறன் இல்லை என்றும் அவர் விமர்சித்துள்ளார். இது குறித்து வீடியோ சனிக்கிழமை முதல் வைரலாகி வருகிறது. இதற்கு கடும் எதிர்ப்பு எழுந்துள்ள நிலையில் உமா பாரதி மன்னிப்பு கேட்டுள்ளார்.

சர்ச்சை பேச்சு

சர்ச்சை பேச்சு

நேற்று நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்ட உமா பாரதி, "அரசு அதிகாரிகள் எல்லாம் ஒன்றுக்கும் லாயக்கு இல்லாதவர்கள். அவர்கள் இருப்பதே எங்கள் செருப்புக்களைத் தூக்கத்தான். அரசு அலுவலர்கள் அரசியல்வாதிகளைக் கட்டுப்படுத்துகிறார்கள் என நீங்கள் நினைக்கிறீர்களா? இல்லவே இல்லை. முதலில் தனிப்பட்ட அளவில் ஆலோசனைகள் நடைபெறும். அதன் பின்னர்தான் அரசு அலுவலர்கள் அறிக்கையைத் தயார் செய்வார்கள்.

11 ஆண்டுகள்

11 ஆண்டுகள்

என்னைக் கேளுங்கள் நான் சொல்கிறேன். மத்திய அமைச்சராகவும் முதலமைச்சராகவும் 11 ஆண்டுகள் இருந்திருக்கிறேன். முதலில் ஆலோசனைகள் நடைபெறும் அதன் பின்புதான் அறிக்கைகள் தயார் செய்யப்படும். அரசியல்வாதிகளை அரசு அலுவலர்கள் கட்டுப்படுத்துவது எனச் சொல்வதெல்லாம் முட்டாள்தனமானது. அவர்களால் அதனைச் செய்யவே முடியாது. அவர்களுக்கு எங்கு அதிகாரம் உள்ளது. அவர்களுக்குச் சம்பளம் அளிப்பது அவர்களைப் பணி அமர்த்துவது எல்லாம் நாங்கள் தான்.

எல்லாம் நாங்கள் தான்

எல்லாம் நாங்கள் தான்

அவர்களுக்குப் பதவி உயர்வு அளிப்பது, பதவி இறக்கம் செய்வது எல்லாம் நாங்கள் தான். எங்களின் அரசியலுக்காகத் தான் அவர்களைப் பயன்படுத்துகிறோம்" என்றார். சனிக்கிழமை, இதர பிற்படுத்தப்பட்ட சமூகத்தைச் சேர்ந்த குழுவொன்று உமா பாரதியை போபாலில் உள்ள அவரது வீட்டில் சென்று சந்தித்துப் பேசினர். அப்போது, சாதி ரீதியான கணக்கெடுப்பு மற்றும் தனியார் பணிகளில் இட ஒதுக்கீட்டை அமல்படுத்த வேண்டும் என அவர்கள் கோரிக்கை விடுத்திருந்தனர். இதனை மத்தியப் பிரதேச அரசு ஏற்கவில்லை எனில் மாநிலம் முழுவதும் போராட்டம் நடத்தப்படும் என்றும் அவர்கள் மிரட்டல் விடுத்தனர். அப்போது தான் அவர் இந்த சர்ச்சையான கருத்துக்களைத் தெரிவித்திருந்தார்.

காங்கிரஸ்

காங்கிரஸ்

வெட்கக்கேடான கருத்துக்களை உமாபாரதி தெரிவித்ததாக விமர்சனம் செய்துள்ள காங்கிரஸ், இதற்கு அவர் விளக்கம் அளிக்க வேண்டும் எனவும் கோரிக்கை விடுத்துள்ளது. அரசியல்வாதிகளின் செருப்புக்களைத் தூக்கத்தான் அரசு அலுவலர்கள் உள்ளனரா என்பதை முதலமைச்சர் சிவராஜ் சிங் சவுகான் தெளிவுபடுத்த வேண்டும் எனக் காங்கிரஸ் மூத்த தலைவர் கே கே மிஸ்ரா கூறியுள்ளார்.

உமா பாரதி விளக்கம்

உமா பாரதி விளக்கம்

இதற்கு விளக்கம் அளிக்கும் வகையில் உமா பாரதி தனது ட்விட்டர் பக்கத்தில், "நேற்று முன்தினம் போபாலில் உள்ள எனது இல்லத்தில், பிற்படுத்தப்பட்ட வகுப்பினரின் பிரதிநிதிகளைச் சந்தித்தேன். இந்த சந்திப்பு அதிகாரப்பூர்வமான சந்திப்பு அல்ல. அந்த முழு உரையாடலின் வீடியோ ஊடகங்களில் வைரலாகி வருகிறது. அரசு அலுவலர்களுக்கு ஆதரவாகவே நான் பேசினேன். எனது முழுமையான வீடியோவை காட்டிய ஊடகங்களுக்கு இச்சமயத்தில் நான் நன்றி கூறுகிறேன்.

தலைவர்கள் சிலர்

தலைவர்கள் சிலர்

அதிகாரத்தில் அமர்ந்திருக்கும் எங்களில் சில தலைவர்கள் திறமையற்றவர்களாகவே உள்ளனர். அவர்கள் திறமையற்று இருப்பதை மறைக்கவே அரசு அலுவலர்கள் சரியாக இருப்பதில்லை எனக் குறை கூறுகின்றனர். நாங்கள் நல்லவர்கள் தான் ஆனால் அரசு அலுவலர்கள் எங்களை வேலை செய்ய விடுவதில்லை எனச் சாக்குப் போக்கு சொல்கின்றனர். உண்மை என்னவென்றால், அதிகாரத்தில் உள்ள வலிமையான, உண்மையான, நல்ல உள்நோக்கம் கொண்ட தலைவர்களை நேர்மையான அரசு அலுவலர்கள் ஆதரிக்கவே செய்கின்றனர். இது என்னுடைய தனிப்பட்ட அனுபவம்.

மன்னிப்பு

மன்னிப்பு

என்னை மன்னித்துவிடுங்கள். எனது நோக்கம் சரியாக இருந்தாலும், நான் பயன்படுத்திய வார்த்தைகள் சுய கட்டுப்பாட்டை மீறும் வகையிலேயே அமைந்திருந்தது. அதிகாரப்பூர்வமற்ற உரையாடல்களின்போது கூட இம்மாதிரியான வார்த்தைகளைப் பயன்படுத்தக் கூடாது என்று நான் இன்று முதல் இந்த பாடம் கற்றுக்கொண்டேன்" என்றார்.

English summary
Senior BJP leader Uma Bharti, in a series of controversial comments undermining the bureaucracy, has said that officials are around only "to pick up our slippers" and have "no standing (aukat)".
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X