சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

புரேவி புயலால் உயிரிழந்த 7 பேரின் குடும்பங்களுக்கு தலா ரூ.10 லட்சம் நிதியுதவி

புரேவி புயல் காரணமாக உயிரிழந்தோரின் குடும்பங்களுக்கு தலா ரூ.10 லட்சம் நிதியுதவி வழங்கப்படும் என்று முதல்வர் பழனிச்சாமி அறிவித்துள்ளார்.

Google Oneindia Tamil News

சென்னை: புரேவி புயல் காரணமாக உயிரிழந்தோரின் குடும்பங்களுக்கு தலா ரூ.10 லட்சம் நிதியுதவி வழங்கப்படும் என்று முதல்வர் பழனிச்சாமி அறிவித்துள்ளார். உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு இரங்கலையும் முதல்வர் தெரிவித்துள்ளார்.கால்நடைகளை இழந்தவர்களுக்கும், குடியிருப்புகள் சேதமடைந்தவர்களுக்கும் நிவாரணம் வழங்க முதல்வர் உத்தரவிட்டுள்ளார்.

புரேவி புயல் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வுமண்டலமாக மாறியது கடந்த 33 மணி நேரத்திற்கு மேலாக பாம்பன் அருகே மையம் கொண்டிருந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதியாக மாறியது.

Burevi Cyclone Relief fund Rs. 10 lakh CM announcement

காற்றழுத்த தாழ்வு மண்டலம் காரணமாக தமிழகத்தில் கடந்த 3 தினங்களாக கனமழை பெய்து வருகிறது. பல ஆயிரக்கணக்கான ஏக்கர் விளைநிலங்கள் நீரில் மூழ்கியுள்ளன. கால்நடைகள் நீரில் அடித்துச்செல்லப்பட்டன. 7 பேர் உயிரிழந்துள்ளனர்.

இந்த நிலையில் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி, புரேவி புயல் காரணமாக உயிரிழந்தோரின் குடும்பங்களுக்கு தலா ரூ.10 லட்சம் நிதியுதவி வழங்கப்படும் என்று அறிவித்துள்ளார்.

புயல் வெள்ள சேத பகுதிகளை பார்வையிட மத்திய குழு தமிழகம் வருகை - முதல்வருடன் சந்திப்புபுயல் வெள்ள சேத பகுதிகளை பார்வையிட மத்திய குழு தமிழகம் வருகை - முதல்வருடன் சந்திப்பு

இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், புயலால் இறந்த ஒரு மாடுக்கு ரூ.30,000 எருதுக்கு ரூ.25,000 கன்றுக்கு ரூ.16,000 ஆட்டுக்கு ரூ.3,000 நிவாரண உதவி வழங்கப்படும் என்றும் புரேவி புயலால் சேதமடைந்த வீடுகளுக்கு உரிய நிவாரண உதவிகள் வழங்கப்படும் என்றும் குறிப்பிட்டுள்ளார்.

மேலும் பாதித்த மாவட்டங்களில் மீட்பு, நிவாரண நடவடிக்கை மேற்கொள்ள அமைச்சர்களை நியமித்து முதல்வர் பழனிசாமி உத்தரவிட்டுள்ளார். கடலூர், திருவாரூர் மாவட்டங்களுக்கு அமைச்சர்கள் காமராஜ் மற்றும் கேபி அன்பழகனை நியமித்து, நாகை மாவட்டம் மயிலாடுதுறை பகுதிக்கு அமைச்சர்கள் வேலுமணி, விஜயபாஸ்கரும் சென்னைக்கு அமைச்சர்கள் ஜெயக்குமார் மற்றும் பாண்டியராஜனும் நியமிக்கப்பட்டுள்ளனர். புரேவி புயல் பாதிப்பு குறித்து இன்று காலை முதல்வர் அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்திய நிலையில், இந்த அறிவிப்பு வெளியாகியுள்ளது.

English summary
Chief Minister Palaniachai has announced that financial assistance of Rs 10 lakh each will be provided to the families of the victims of the Puravi storm. The Chief Minister also conveyed his condolences to the families of the victims.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X