சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

புரேவி எதிரொலி.. தமிழகத்திற்கு இன்று ரெட் அலர்ட்.. வானிலை மையம் எச்சரிக்கை

Google Oneindia Tamil News

சென்னை: புரேவி புயல் எதிரொலியால் இன்று தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் மிக அதிக கனமழை பெய்யும் என்பதால் ரெட் அலர்ட் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

வங்கக் கடலில் கடந்த இரு நாட்களுக்கு முன்னர் காற்றழுத்த தாழ்வு பகுதி உருவானது. இது ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக மாறியது. பின்னர் நேற்று இது புயலாக மாறியது.

Burevi Cyclone starts to landfall near Mullaithivu

இது புரேவி என பெயரிடப்பட்டுள்ளது. மாலத்தீவுகள்தான் இதற்கு பெயரிட்டது. இந்த நிலையில் இலங்கையின் திருகோணமலை- பருத்தித்துறை இடையே முல்லைத்தீவு அருகே நேற்று இரவு 9 மணியளவில் புரேவி புயலானது கரையை கடக்க தொடங்கியது. இதனால் மணிக்கு 80 கி.மீ. முதல் 90கி.மீ வேகத்திலான பலத்த காற்று வீசியது.

புயலின் வெளிச்சுற்று கரையை தொட்டுவிட்டது. நள்ளிரவில் குமரி கடற்கரையை நோக்கி புரேவி புயல் நகரும். இதனால் இன்று முதல் தென் தமிழகத்தில் கனமழை பெய்யும். குமரி கடலில் குளிக்கவோ வேடிக்கை பார்க்கவோ யாருக்கும் அனுமதி கிடையாது.

20 ஆண்டுகளுக்கு முன்.. இலங்கையை தாக்கி தமிழகத்தை சூறையாடிய அதே பாதையில் வரும் புரேவி 'அண்ணாச்சி'20 ஆண்டுகளுக்கு முன்.. இலங்கையை தாக்கி தமிழகத்தை சூறையாடிய அதே பாதையில் வரும் புரேவி 'அண்ணாச்சி'

புரெவி புயல் காரணமாக தென் மாவட்டங்களில் அடுத்த 2 நாட்களுக்கு கனமழை பெய்யும். வட தமிழகத்தில் 4 ஆம் தேதி ஒரு சில இடங்களில் மழை பெய்யும். குமரி, நெல்லை, தென்காசி ராமநாதபுரம், சிவகங்கை, தூத்துக்குடி ஆகிய மாவட்டங்களில் கன மழை பெய்யும். இதனால் தமிழகத்திற்கு 2 நாட்களுக்கு ரெட் அலர்ட் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

English summary
Chennai Meteorological Department says that the speed of the cyclone is reduced from 25 kmph to 15 kmph.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X