சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

2020-இன் 5ஆவது புயல் எது தெரியுமா?.. புரேவி எப்படிப்பட்ட பாதிப்பை ஏற்படுத்தும்?..

Google Oneindia Tamil News

சென்னை: 2020-ஆம் ஆண்டு வடக்கு இந்திய பெருங்கடலில் உருவாகும் 5ஆவது புயல் புரேவியாகும். முன்னதாக ஆம்பன், நிசர்கா, கடி, நிவர் ஆகியவை உருவாகியுள்ளன.

நிவர் புயல் தமிழகத்தில் நல்ல மழையை கொடுத்த ஒரே வாரத்தில் வங்கக் கடலில் மற்றொரு காற்றழுத்த தாழ்வு மண்டலம் உருவாகியுள்ளது. அது நாளை புயலாக மாறுகிறது.

இதற்கு பெயர் புரேவி என வைக்கப்பட்டுள்ளது. இந்த புரேவி அதி தீவிர புயலாக மாறாது. ஏனெனில் அது போல் அதி தீவிர புயலாக மாற்ற வங்கக் கடலில் ஆற்றல் இல்லை.

புரேவி புயல் நாளை வலுடைகிறது... குமரியில் நிலை கொள்ளும் - டிசம்பர் 2, 3,4ல் அதீத கனமழைபுரேவி புயல் நாளை வலுடைகிறது... குமரியில் நிலை கொள்ளும் - டிசம்பர் 2, 3,4ல் அதீத கனமழை

காற்று

காற்று

எனவே இந்த புயலால் மணிக்கு 60 முதல் 70 சதவீதம் காற்று வீசும். சில சமயங்களில் மணிக்கு 80 கி.மீ. வரை காற்று வீசும். இதனால் தென்தமிழகம் மற்றும் இலங்கையில் நல்ல மழை பெய்யும். இந்த ஆண்டு வடக்கு இந்திய பெருங்கடலில் உருவான 5ஆவது புயல் புரேவியாகும்.

நிசர்கா

நிசர்கா

முன்னதாக ஆம்பன், நிசர்கா, கடி, நிவர் ஆகியவை உருவாகியுள்ளது. நமது கணிப்புகள் சரியாக இருப்பின் புரேவி குறைந்த அளவுக்கு சேதத்தை கொடுக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இலங்கையை நோக்கி மேற்கு அல்லது வடமேற்கு திசையில் காற்று வீசும். இது இலங்கை கடலோரத்தில் புதன்கிழமை இரவு கரையை கடக்கும்.

தமிழகம்

தமிழகம்

அனல் காற்றுடன் இணைந்து புயலாக மாறும். இதனால் தமிழக கடலோர மாவட்டங்களுக்கு இடி, மின்னலுடன் கூடிய கனமழையை கொடுக்கும். மேலும் இந்த புயல் புரேவியானது மீண்டும் மன்னார் வளைகுடாவில் வியாழக்கிழமை காலை வலுப்பெறுகிறது. அந்த புயல் அதே வலுவுடன் இருந்தால் வலுவான காற்றால் தென் தமிழகம் மற்றும் கேரளாவுக்கு நல்ல மழையை கொடுக்கும்.

மீனவர்கள்

மீனவர்கள்

தெற்கு வங்கக் கடல் பகுதியில் மீனவர்கள் வியாழக்கிழமை வரை கடலுக்குள் செல்ல வேண்டாம். இலங்கை அருகே கரையை கடக்கும் போது கடல் அலைகள் 1 மீட்டரை விட பெரிதாக எழும்பும். செவ்வாய் முதல் வெள்ளிக்கிழமை வரை இலங்கை, தமிழகம், தென் ஆந்திரம், கேரளா ஆகிய பகுதிகளில் மழை பெய்யும்.

கேரளம்

கேரளம்

தமிழகத்திற்கும், கேரளாவுக்கும் வியாழக்கிழமை அன்று ரெட் அலர்ட் எச்சரிக்கையை இந்திய வானிலை மையம் கொடுத்துள்ளது. அது போல் நாளை முதல் வெள்ளிக்கிழமை வரை ஆரஞ்ச் அலர்ட் கொடுக்கப்பட்டுள்ளது. ரெட் அலர்ட் கொடுக்கப்பட்டதால் கன்னியாகுமரி, தென்காசி, ராமநாதபுரம், சிவகங்கை மாவட்டங்களிலும் கேரளாவின் திருவனந்தபுரம், பத்தினம்திட்டா, ஆலப்புழா ஆகிய மாவட்டங்களிலும் உள்ள மக்கள் ஜாக்கிரதையாக இருக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது.

10-க்கு 8 புயல்கள்

10-க்கு 8 புயல்கள்

உலகில் உயிர் பலியை ஏற்படுத்திய வெப்ப மண்டல புயல்களில் 10-க்கு 8 புயல்கள் வங்கக் கடலில் உருவானதுதான். 36 மோசமான புயல்களில் 26 புயல்கள் இந்த பகுதியில்தான் உருவானது. உலக கடல் பகுதியில் 0.6 சதவீதத்திற்கும் மேல் வங்கக் கடல் பெற்றுள்ளது. உலகில் புயலால் உருவாகும் 50 சதவீதத்திற்கு மேலான உயிரிழப்புகளுக்கு வங்கக் கடலும் பொறுப்பாகும்.

English summary
Burevi is the fifth cyclone over North Indian ocean this 2020. It will give least destructions.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X