சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

பொத் பொத்தென்று விழுந்த மாணவர்கள்.. ஏன் சொல்லலை.. டிரைவர், கண்டக்டருக்கு நூதன தண்டனை!

அரசு பஸ் கண்டக்டர், டிரைவருக்கு நூதன தண்டனை வழங்கப்பட்டுள்ளது.

Google Oneindia Tamil News

Recommended Video

    பஸ் கூரை மீது பஸ் டே அட்டகாசம்...பல மாணவர்கள் கைது!

    சென்னை: "பஸ் டே கொண்டாட்டத்தின்போது, பசங்க பஸ்ஸை கடத்தி செல்வது மாதிரி தெரிந்தவுடனேயே ஏன் தகவல் சொல்லவில்லை" என்று கேட்டு, டிரைவர், கண்டக்டருக்கு நூதன தண்டனை தரப்பட்டுள்ளது.

    சென்னையில் பஸ் டே கொண்டாட்டத்துக்கு போலீசார் தடை விதித்துள்ளனர். ஆனாலும், கடந்த 13-ம் தேதி பச்சையப்பன் கல்லூரி மாணவர்கள் பஸ் டே கொண்டாடினார்கள்.

    ஆவடியில் இருந்து அண்ணா சதுக்கம் செல்லும் அரசு பஸ்ஸின் மேற்கூரையில் உட்கார்ந்து கொண்டு அமர்க்களம் செய்தார்கள்.

    பிரேக் போட்டார்

    பிரேக் போட்டார்

    அந்த சமயத்தில் பஸ்ஸுக்கு முன்பு பைக்கில் சென்று கொண்டிருந்த மாணவர்கள், திடீரென பிரேக் போடவும், டிரைவரும் பிரேக் போட்டார். இதில் எதிர்பாராதவிதமாக பஸ்ஸின் டாப்பில் இருந்து மாணவர்கள் பொத் பொத்தென்று சரிந்து விழுந்தனர். இதில் சில மாணவர்கள் காயமடைந்தனர்.

    விசாரணை

    விசாரணை

    இது சம்பந்தமான வீடியோவும் இணையத்தில் வெளியாகி மக்களுக்கு பெரிய அதிர்ச்சியை தந்தது. இதையடுத்து பஸ்டே கொண்டாடிய மாணவர்கள் 9 பேர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டது. இப்போது, பஸ்ஸை ஓட்டிய டிரைவர் லட்சுமணன், கண்டக்டர் மருதவமணி மீது துறை ரீதியான நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

    கேள்வி

    கேள்வி

    "மாணவர்கள், பஸ்சை கடத்திச் செல்வது போல செயல்பட்ட உடனேயே, போக்குவரத்து கண்ட்ரோல் ரூமுக்கோ, போலீஸ் கண்ட்ரோல் ரூமுக்கோ ஏன் ரெண்டு பேரும் தகவல் தெரிவிக்கவில்லை? உடனே தகவல் தந்திருந்தால், அந்த பஸ் டே கொண்டாட்டத்தை ஆரம்பத்திலேயே தடுத்திருக்கலாமே" என்று துறை சார்பில் கேட்கப்பட்டது.

    நூதன தண்டனை

    நூதன தண்டனை

    இதற்கு டிரைவர், "பஸ்சை ரோட்டோரமாகத்தான் நிறுத்த முயற்சித்தேன், ஆனால் மாணவன் ஒருவர், கத்தியை காட்டி மிரட்டியதால் என்னால் எதுவும் செய்ய முடியவில்லை என்று விளக்கம் அளித்தார். இருந்தாலும், கடமையை தவறிய, டிரைவர், கண்டக்டர் 2 பேரும் குரோம்பேட்டையில் உள்ள பயிற்சி பள்ளிக்கு சென்று 1 வாரம் பயிற்சி எடுக்க வேண்டும் என்று நூதன தண்டனை அளிக்கப்பட்டது.

    English summary
    New sentence for Driver and Conductor due to Students Bus day celebration in Chennai
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X