சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

பஸ் டே அட்டகாசம்.. கூரை மீது ஏறி கொண்டாட்டம்.. பிரேக் போட்ட டிரைவர்.. சரிந்து விழுந்த மாணவர்கள்

பஸ் டே கொண்டாட்டம்.. அட்டகாசம் செய்த மாணவர்கள் 17 பேர் கைது செய்யப்பட்டனர்

Google Oneindia Tamil News

Recommended Video

    பஸ் கூரை மீது பஸ் டே அட்டகாசம்...பல மாணவர்கள் கைது!

    சென்னை: சென்னையில் பஸ் டே கொண்டாட்டத்தின்போது மாணவர்களின் தொல்லை தாங்க முடியாமல் டிரைவர் சடர்ன் பிரேக் போட்டதால் பஸ் மீது ஏறி அமர்ந்திருந்த மாணவர் சரிந்து கீழே விழுந்தனர்.

    தடையை மீறி பஸ் டே கொண்டாடிய 17 மாணவர்களை பிடித்து சென்னை போலீசார் விசாரித்து வருகிறார்கள்.

    Bus Day celebration in Chennai and police arrested 17 Students

    விடுமுறை முடிந்து நேற்று சென்னையில் கல்லூரிகள் திறக்கப்பட்டன. இதனால் மாணவர்கள் பஸ் டே என்ற பெயரில் கொண்டாட்டங்களில் ஈடுபட்டனர்.

    குறிப்பாக, பச்சையப்பன் கல்லூரி மாணவர்கள் நூற்றுக்கும் மேற்பட்டவர்கள் ஒன்று திரண்டு, இதற்கான சிறப்பு ஏற்பாடாக பஸ்ஸூக்கு அலங்காரம் செய்தனர். பின்னர், பஸ் கூரை மீது ஏறி நின்றுகொண்டு கூச்சலிட்டு, பொதுமக்களை திசைதிருப்பியும், போக்குவரத்துக்கு இடையூறாகவும் சத்தம் போட்டுக் கொண்டே வந்தனர்.

    இதனால் புல்லா அவென்யூ ரோட்டில் டிராபிக் ஜாம் ஏற்பட்டது. இதை பார்த்த டிராபிக் போலீசார் அவர்களை விரட்டி பிடிக்க முயன்றனர். ஆனால் மாணவர்கள் போலீசை பார்த்ததும் தப்பியோடிவிட்டனர்.

    இதேபோல பிராட்வே-மந்தைவெளி சாலையில் பஸ் டே கொண்டாடப்பட்டது. ஆங்காங்கே மாணவர்கள் பஸ் டே கொண்டாட்டத்துக்குரிய பேனர்களை பிடித்தபடி நின்றிருந்தனர். இவர்களில் 4 பேர் போலீசில் சிக்கி உள்ளனர். இப்படி பஸ்கூரை, படிக்கட்டில் தொங்கியவர், பேனர் பிடித்தவர்கள் என கிட்டத்தட்ட 17 மாணவர்களை போலீசார் பிடித்து விசாரித்து வருகிறார்கள்

    English summary
    College Students celebrated Bus Day and 17 are holding bus day in Chennai, and 5 are severe injured.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X