சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

8 மாதங்களுக்கு பிறகு.. தமிழகம்-கர்நாடகா இடையே இன்று துவங்கியது அரசு பஸ் சேவை.. 6 நாட்கள் மட்டுமே

Google Oneindia Tamil News

சென்னை: சுமார் 8 மாதங்களுக்கு பிறகு, தமிழகம் மற்றும் பெங்களூர் உள்ளிட்ட கர்நாடக நகரங்களுக்கு இடையே இன்று இரவு முதல் அரசு பஸ் போக்குவரத்து துவங்கி உள்ளது.

Recommended Video

    Karnataka To TamilNadu பேருந்தில் பயணிக்க இனி Online பதிவு தேவையில்லை

    தீபாவளி பண்டிகையையொட்டி, சென்னை, சேலம், கோவை, மதுரை, நெல்லை உள்ளிட்ட தமிழகத்தின் பல்வேறு நகரங்களில் இருந்தும் பெங்களூர், மைசூர் போன்ற கர்நாடக நகரங்களுக்கு மற்றும் அந்த நகரங்களில் இருந்து தமிழக நகரங்களுக்கு பயணிக்கும் பயணிகள் எண்ணிக்கை அதிகமாக இருக்கும்.

    Bus services between Tamil Nadu and Karnataka including Bangalore resumes

    இதை கருத்தில் கொண்டு நவம்பர் 11 ஆம் தேதியான புதன்கிழமை, முதல் நவம்பர் 16ம் தேதி வரை இரு மாநிலங்களிடையே அரசு பஸ் சேவைகளை இயக்க அனுமதி வழங்குவதாக தமிழக தலைமைச் செயலாளர் சண்முகம் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

    எஸ்ஏசிக்கு பதிலடி.. தளபதி விஜய் மக்கள் இயக்க நிர்வாகிகள் மாற்றம்.. விஜய் அதிரடிஎஸ்ஏசிக்கு பதிலடி.. தளபதி விஜய் மக்கள் இயக்க நிர்வாகிகள் மாற்றம்.. விஜய் அதிரடி

    இந்த காலகட்டத்தில் மின்னணு முறையில் வாகன போக்குவரத்திற்கு பதிவு செய்து கொள்ள அவசியம் கிடையாது என்றும் அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    கொரோனா ஊரடங்கு காலம் காரணமாக, மார்ச் மாதம் முதல் தமிழக மற்றும் கர்நாடக இடையே அரசு பஸ் சேவை நிறுத்தப்பட்டு இருந்தது. எனவே 8 மாதங்களுக்குப் பிறகு, பொது போக்குவரத்துக்கு 6 நாட்களுக்கு அனுமதி கிடைத்துள்ளது. இதையடுத்து கர்நாடகாவில் இருந்து இன்று இரவு, 25 கர்நாடக அரசு பேருந்துகள் தமிழகம் நோக்கி கிளம்பி உள்ளதாக பெங்களூரில் இருந்து வரும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

    English summary
    Bus services between Tamil Nadu and Karnataka to resume from tonight onwards. Buses of SETC, TNSTC and KSRTC will be operated connecting various parts of the two States from Nov 11 till 16.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X