சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

தமிழகத்தில் பேருந்து போக்குவரத்துக்கு அனுமதி அளிக்கப்படுமா? முதல்வர் எடப்பாடி முக்கிய தகவல்

Google Oneindia Tamil News

சென்னை: தமிழகத்தில் பேருந்து போக்குவரத்துக்கு அனுமதியளிப்பது குறித்து நாளை (ஆக.29) ஆலோசனை நடத்த உள்ளதாக முதல்வா் எடப்பாடி பழனிசாமி அறிவித்துள்ளார்.

தமிழகத்தில் கொரோனா பரவலை தடுக்க போடப்பட்ட ஊரடங்கால் பேருந்து போக்குவரத்து முற்றிலும் முடங்கி உள்ளது. இடையில் கடந்த ஜூன் மாதம் மண்டலங்களுக்கு இடையே பேருந்து போக்குவரத்து இயங்கி வந்த நிலையில் தொற்று கடுமையாக உயர்ந்த காரணத்தால் முற்றிலும் முடக்கப்பட்டது.

இந்நிலையில் கொரோனா பரவலை தடுக்க அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வரும் நிலையில், இ பாஸ் தளர்வை கடந்த 10 நாட்களுக்கு முன்பு அறிவித்தது. அதனை தொடர்ந்து நேற்று, இபாஸ் விதிகளில் மேலும் சில தளர்வை அறிவித்துள்ளது.

ஓஹோ.. இதுதான் காரணமா.. தமிழகத்தில் மட்டும் இ பாஸ் தொடருவது ஏன்.. மக்கள் மனதில் கேள்வி அலைகள்! ஓஹோ.. இதுதான் காரணமா.. தமிழகத்தில் மட்டும் இ பாஸ் தொடருவது ஏன்.. மக்கள் மனதில் கேள்வி அலைகள்!

72 மணி நேரத்தில் திரும்பினால்

72 மணி நேரத்தில் திரும்பினால்

இதன்படி வெளிமாநிலத்தில் இருந்து தொழில் நிமிர்த்தமாக வந்து 72 மணி நேரத்தில் திரும்புவோருக்கு தனிமைப்படுத்துதல் தேவையில்லை என்று அறிவித்துள்ளது. இதேபோல் வெளிமாநிலத்தில் இருந்து தமிழகம் வரவும் இபாஸ் விதிகள் தளர்த்தப்பட்டுள்ளது. எனினும் இ பாஸ் விதிகள் தமிழகத்திற்கு அவசியம் என்றே அரசு தெரிவித்துள்ளது.

விண்ணப்பித்தால் போதும்

விண்ணப்பித்தால் போதும்

இது தொடர்பாக முதல்வர் பழனிச்சாமி கடலூரில் நேற்று பேசும் போது விண்ணப்பித்த அனைவருக்கும் இ-பாஸ் கிடைக்கும். அவசியத் தேவையின்றி யாரும் வெளியில் செல்ல வேண்டாம். இபாஸ் சீட்டு இருந்தால்தான் பாதிக்கப்பட்டவா்களை எளிதில் கண்டறிய முடியும் என்றார்.

பொதுபோக்குவரத்து

பொதுபோக்குவரத்து

இதனிடையே பொதுபோக்குவரத்தை துவங்குவது குறித்து எப்போது முடிவெடுக்கப்படும் என்பது குறித்து பேசிய முதல்வர் எடப்பாடி பழனிசாமி, கோயில்கள் திறப்பு, பேருந்து உள்ளிட்ட பொதுப் போக்குவரத்து குறித்து சனிக்கிழமை (ஆக.29) மாவட்ட ஆட்சியா்கள், மருத்துவ நிபுணா்களுடன் ஆலோசனைக் கூட்டம் உள்ளது. அதில் எடுக்கப்படும் முடிவுகளின் அடிப்படையில் படிப்படியாகத் தளா்வு அறிவிக்கப்படும் என்றார்.

ஆல் பாஸ் ஏன்

ஆல் பாஸ் ஏன்

கல்லூரி மாணவா்கள் தங்களது அரியா் தோ்வுக்கு கட்டணம் செலுத்திவிட்டு மனச் சோா்வுடன் காத்திருந்தார்கள்.கொரோனா பிரச்னை எப்போது முடியும் என்ற கால அளவு இல்லை. எனவே, அவா்கள் தோ்வை நினைத்து மனஉளைச்சல் அடையக் கூடாது என்பதற்காகவே விண்ணப்பித்த அனைவரும் தோ்ச்சி என்று அறிவித்தோம் என்றும் முதல்வர் கூறினார்.

English summary
Chief Minister Edappadi Palanisamy has announced that he will hold a consultation tomorrow (Aug. 29) on allowing bus services in Tamil Nadu.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X