சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

பேருந்து போக்குவரத்து தொடங்கி.. முதல் நாளே இப்படியா.. சென்னையில் குழப்பம்.. என்ன நடக்கிறது?

Google Oneindia Tamil News

சென்னை: சென்னையில் பேருந்து போக்குவரத்து தொடங்கி உள்ள நிலையில் தற்போது மக்கள் இடையே சில குழப்பங்கள் ஏற்பட்டுள்ளது. பேருந்து எந்த மார்க்கமாக செல்லும் என்பதில் நிறைய குழப்பங்கள் ஏற்பட்டுள்ளது.

தமிழகம் முழுக்க தற்போது பேருந்து போக்குவரத்து மீண்டும் தொடங்கி உள்ளது. அரசு பேருந்து போக்குவரத்து மீண்டும் தொடங்கப்பட்டுள்ளது. குறைவான எண்ணிக்கையில் தற்போது பேருந்துகள் இயங்க தொடங்கி உள்ளது.

சென்னையில் மாநகர பேருந்துகள் இயக்க தொடங்கி உள்ளது. 50% மக்கள் கூட்டத்துடன் சென்னையில் மீண்டும் பேருந்து போக்குவரத்து தொடங்கி உள்ளது.

 தமிழகம், புதுவையில் முழு ஊரடங்கு.. அன்லாக் 4.0 பெயரில் தடை போட்ட மத்திய அரசு.. முழு விவரம்! தமிழகம், புதுவையில் முழு ஊரடங்கு.. அன்லாக் 4.0 பெயரில் தடை போட்ட மத்திய அரசு.. முழு விவரம்!

என்ன குழப்பம் நிலை

என்ன குழப்பம் நிலை

சென்னையில் இதனால் சாலையில் அதிக அளவில் பேருந்துகள் இயங்க தொடங்கி உள்ளது. ஆனால் தற்போது மாவட்டம் விட்டு மாவட்டம் செல்ல பேருந்து போக்குவரத்துக்கு அனுமதி அளிக்கப்படவில்லை. மாவட்டங்களுக்கு உள்ளே மட்டுமே பேருந்து போக்குவரத்து அனுமதிக்கப்பட்டுள்ளது. அரசு பேருந்துகள் எல்லை தாண்ட அனுமதிக்கப்படவில்லை. சென்னையில் பேருந்து போக்குவரத்து தொடங்கி உள்ள நிலையில் தற்போது மக்கள் இடையே சில குழப்பங்கள் ஏற்பட்டுள்ளது.

சென்னை குழப்பம்

சென்னை குழப்பம்

பேருந்து எந்த மார்க்கமாக செல்லும் என்பதில் நிறைய குழப்பங்கள் ஏற்பட்டுள்ளது. பேருந்துகள் எல்லை தாண்ட அனுமதிக்கப்படாத காரணத்தால், சென்னையில் இருந்து செங்கல்பட்டு செல்லும் பேருந்துகள் இயங்குமா என்று கேள்வி எழுந்துள்ளது. அதாவது சென்னையின் ஒரு எல்லையில் இருந்து காஞ்சிபுரம், செங்கல்பட்டில் இருக்கும் ஏரியாவிற்கு செல்ல வேண்டும் என்றால் ஒரே பேருந்தில் செல்ல முடியாது. இதற்கு பேருந்து மாற வேண்டிய சூழ்நிலை.ஏற்பட்டுள்ளது

எங்கு செல்கிறது

எங்கு செல்கிறது

இதில் செங்கல்பட்டு மாவட்டத்திற்கு கீழ் மதுராந்தகம், தாம்பரம், பல்லாவரம், செயின்ட் தாமஸ் மவுண்ட், பம்மல், மறைமலை நகர், திருப்போரூர், காட்டாங்குளத்தூர், அச்சரபாக்கம் ஆகிய முக்கியமான பகுதிகள் உள்ளது. சென்னையில் வேலை பார்க்கும் மக்கள் இங்கு பலர் வசிக்கிறார்கள். இவர்கள் பேருந்து போக்குவரத்து கட்டுப்பாடு காரணமாக குழம்பி போய் உள்ளனர். இதனால் செங்கல்பட்டு, காஞ்சிபுரதத்தில் வசிக்கும் மக்கள் சென்னை செல்ல அரசு பேருந்து வருமா என்று கேள்வி எழுப்பி உள்ளனர்.

சில பேருந்துகள்

சில பேருந்துகள்

சில அரசு பேருந்துகள் செங்கல்பட்டு - சென்னை இடையே பயணிக்கிறது. எல்லைக்கு மிக அருகே செல்லும் பேருந்துகள் வேறு வழி இன்றி எல்லை தாண்டும் நிலை ஏற்பட்டள்ளது. ஆனால் மொத்தமாக இரண்டு மாவட்டங்களுக்கு இடையே இன்னும் பேருந்து போக்குவரத்து முழு வீச்சில் தொடங்கப்படவில்லை. இதனால் மக்கள் எப்படி பயணம் செய்வது என்று குழப்பத்திற்கு உள்ளாகி உள்ளனர்.

 முன்பு இ பாஸ்

முன்பு இ பாஸ்

முன்பு தமிழகத்தில் இ -பாஸ் முறை அமலில் இருந்த போதும் இதேபோல் நடந்தது. காஞ்சிபுரம் , செங்கல்பட்டு எல்லையில் இருந்து சென்னை செல்ல இ பாஸ் எடுக்க வேண்டிய கட்டாயம் வந்தது. 2 கிமீ தூரம் இருந்தால் கூட , எல்லையை கடக்கும் நிலை என்றால் இ பாஸ் எடுக்க வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது. தற்போது அதே நிலைமை பேருந்து போக்குவரத்துக்கும் ஏற்பட்டது குறிப்பிடத்தக்கது.

Recommended Video

    தமிழகத்தில் அனைத்து மாவட்டங்களிலும் இன்று முதல் பேருந்துகள் இயக்கம் - வீடியோ

    English summary
    Bus transport started in Chennai: Can people travel to nearby districts like Kancheepuram, Chengalpatu.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X