சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

திமுக அணியின் பலம் குறைகிறது... நாங்குநேரியில் விரைவில் இடைத்தேர்தல்

Google Oneindia Tamil News

Recommended Video

    6 பேரை நம்பும் ஸ்டாலின்.. ஸ்லீப்பர் செல்களை களமிறக்கும் தினகரன்..

    சென்னை: எம்.எல்.ஏ பதவியை வசந்தகுமார் ராஜினாமா செய்வதால் நாங்குநேரியில் விரைவில் இடைத்தேர்தல் நடைபெற உள்ளது.

    காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த வசந்தகுமார் ராஜினாமாவால் சட்டமன்றத்தில் திமுக அணியின் பலம் 109 ஆக குறைகிறது. திமுக ஆதரவுடன் மீண்டும் நாங்குநேரியை கைப்பற்ற காங்கிரஸ் திட்டமிட்டுள்ளது. அதே நேரம், ஆளுங்கட்சியான அதிமுகவும் நாங்குநேரியை கைப்பற்ற வியூகம் வகுக்கிறது.

    By-election in nanguneri, after the resignation of Vasanthakumars MLA Post

    சமீபத்தில் நடந்த 22 சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தலில் அ.தி.மு.க. 9 இடங்களில் மட்டுமே வெற்றி பெற்றது. தி.மு.க. 13 இடங்களை கைப்பற்றியதால் கூடுதலாக ஒரு மாநிலங்களவை எம்.பி. பதவியை பெறுகிறது.

    234 தொகுதிகள் கொண்ட சட்டசபையில் அ.தி.மு.க.வின் பலம் 123 ஆக உள்ளது. தி.மு.க. கூட்டணி எண்ணிக்கை 110ஆக இருக்கிறது. டி.டி.வி. தினகரன் ஒரு தொகுதியில் உள்ளார். இந்தநிலையில், கன்னியாகுமரி மக்களவைத் தொகுதியில் நின்று வெற்றி பெற்ற வசந்தகுமார், தனது நாங்குநேரி சட்டமன்ற உறுப்பினர் பதவியை நாளை ராஜினாமா செய்ய உள்ளார்.

    ஆட்சியை தக்க வைத்த அதிமுக.. இந்த டுவிட்ஸ்டை எதிர்பார்த்திருக்காது.. திமுக வசமான ராஜ்யசபா சீட்டு ஆட்சியை தக்க வைத்த அதிமுக.. இந்த டுவிட்ஸ்டை எதிர்பார்த்திருக்காது.. திமுக வசமான ராஜ்யசபா சீட்டு

    சென்னை அறிவாலயத்தில் திமுக தலைவர் மு.க.ஸ்டாலினை சந்தித்து பேசிய அவர், சட்டமன்ற உறுப்பினர் பதவியை ராஜினாமா செய்வது குறித்து ஆலோசனை நடத்தினர். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய வசந்தகுமார், எம்.பி. பதவிவை தக்க வைப்பது என முடிவு செய்துள்ளதாக கூறினார். ஏற்கனவே, பணப்பட்டுவாடா விவகாரத்தில் வேலூர் மக்களவைத் தேர்தல் ரத்து செய்யப்பட்ட நிலையில், நாங்குநேரி சட்டமன்ற தொகுதிக்கும் ஒரே நேரத்தில் தேர்தல் நடத்தப்பட வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது.

    English summary
    Vasanthakumar MP Will Resignation His MLA Post, By-election in nanguneri Soon
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X